முகப்பு வாயில்

 


ஆச்சாரிய வினோபாஜீயின் புரட்சி யந்திரம் நாடெங்கும் சென்று வெற்றிக் கொடி நாட்டி வருகின்றது. அதுமட்டுமன்று! ஏழை மக்களும் பசியின்றி வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமும் இரக்க குணமும் ஆகிய விதைகளை நிலச்சுவான்தார்கள், செல்வர்கள், முதலாளிகள் ஆகியோரின் உள்ளமெனும் வயல்களிலே விதைத்துக் கொண்டு செல்லுகின்றது அப்புரட்சி யந்திரம்! அவ்வியந்திரம் தங்குதடையின்றித் தாராளமாகச் செல்ல வேண்டி ஆச்சாரிய வினோபாஜீ அஹிம்ஸை எனும் பாதையை மேற்கொண்டுள்ளார்.

உலகம் சமாதானமாகவும் அமைதியாகவும் நிலவவேண்டுமாயின் அஹிம்ஸையும் பொருளாதார சமத்துவமும் அவசியம் என்பதைத் தற்கால அரசியல் நிபுணர்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். காரஸ் மார்க்ஸின் பொது வுடமைத் தத்துவம் உலகில் பரவ ஆரம்பித்தவுடனே அரசியல் உலகில அதிர்ச்சியும் மாறுதலும் ஏற்பட்டு வருவதை நாம் அறிகின்றோம். எனவே மகாத்மா காந்தியடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் ஆச்சாரிய வினோபாஜீ நமது நாட்டின் சூழ்நிலையை ஆய்ந்து அஹிம்ஸையையும் பொருளாதார சமத்துவத்தையும் பரப்ப முனைந்து நிற்கின்றார். இவ்விரு பேரறங்களும் நமது நாட்டிற்குப் புதியன வல்ல. பண்டைய பண்பாடேயாகும்.

மக்களினம் உயா¢ய ஒழுக்கங்களுடனும் சகோதர உணர்ச்சிகளுடனும், அமைதியுடனும் வாழ வேண்டுமாயின் அஹிம்ஸையும் பொருளாதார சமத்துவமும் அவசியம் என்பதை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பகவான் விருஷப தேவர் உணர்ந்து. தாம் வகுத்த அறங்களிலே அவ்விரு பேரறங்களையும் தலையாய அறங்களாகக் குறித்துள்ளார். அதுமட்டுமன்று! தமது அற நெறியை மதம், சமயம், இனம் என்ற பெயர்களால் அமைக்காமல் அறம் என்றே அமைத்துள்ளார். எனவே அவ்வறம் உலகுக்கே உரியதாகும்.

இத்தகைய சிறந்த அற நெறிகளை வகுத்தருளிய பகவான் விருஷபதேவர் சா¢த்திர காலம் கடந்தவராயினும் அவர்தம் வாழ்க்கை வரலாறுகள் இந்திய இலக்கியங்களிலும்- சிறப்பாக ஜைன இலக்கியங்களிலும்-நிலையான இடம் பெற்றுள்ளன. திருக்குறள் ஆசிரியரால் ஆதிபகவன்எனப் போற்றப்படுவரும் இம்மாபெருந் தலைவரேயாவர். இதுபோன்ற பல அரிய உண்மைகளைத் தக்க ஆதாரங்களுடன் இந்நூலின்கண் விளக்கி யுள்ளேன்.

இந்நூலின் முதற் பதிப்பு பல தமிழ்ப் பேரறிஞர்கள், சென்னை சர்வ கலாசாலை தமிழ் வளர்ச்சிக் கழகம், (The Tamil Academv) ஆசிரியர்கள், பத்திரிகைகள், ஆகியவர்களின் பாராட்டுதலைப் பெற்றது.

சென்னை சர்வ கலாசாலை தமிழ் வளர்ச்சிக் கழகப் பிரதம ஆசிரியரும், எனது அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரியவருமான உயர்திரு ம.ப.பொ¢யசாமி தூரன் அவர்களிடமிருந்து 12-4-52-ஆம் தேதியிட்டக் கடிதம் ஒன்று பின்வருமாறு வந்தது.

"தாங்கள் அனுப்பி 'ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாபா§வும்'என்ற நூலின் இருபிரதிகள் கிடைத்தன நன்றி. இந்நூல் 7-ஆம் பா¢சுத் திட்டத்தில் கட்டுரைப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் இன்னும் இரு பிரதிகள் பில்லுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்."

இக்கடிதத்தைக் கண்டதும் அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன். உள்ளக் களிப்பால்-உணர்ச்சி மிகுதியால்-மெய்மறந்து நின்றேன். இந்நிலை பா¢சு வரும் என்ற பேராசையால் ஏற்பட்டதென்று. சர்வ கலாசாலை தமிழ் வளர்ச்சிக் கழக அறிஞர் பெருமக்களால் இந்நூல் வரவேற்கப் பெற்றது. மதிக்கப் பெற்றது என்றால இனி பகவான் விருஷப தேவா¢ன் பெருமை தமிழ் உலகில் நன்கு விளங்கும் என்ற நம்பிக்கையேயாகும். தமிழ் வளர்ச்சிக் கழகம் பேரறிஞர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும் உரித்தாகுக.

எனவே இந்நூல் இன்னும் அதிகமாகப் பரவினால் உலகம் எதிர்பார்க்கும் அஹிம்ஸையும் பொதுவுடைமைக் கொள்கையும் நமது நாட்டில் தோன்றியவை என்ற பெருமையையும், அவைகளைத் தோற்றுவித்த அரசியல் தலைவர் நமது நாட்டைச் சார்ந்தவர் என்ற உணர்ச்சியையும் பலரும் பெற்று மகிழ்வர் என்ற அவாவினால் இரண்டாம் பதிப்பாக இதனை வெளியிட முன் வந்தேன்.

இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடப் பொருளுதவி புரிந்தவர் தியாகராய நகர் ஜெயின் போர்டிங்கிணறு தொட்டவரும், சென்னை ஜெயின் ஹைஸ்கூலில் தனி வகுப்பறை கண்டவரும், பல பொது இடங்களிலும் ஆலயங்களிலும் விழா நாட்களில் அடியார்கட்கு இன்னமுது படைப்பவரும், பகவான் விருஷபதேவர் அறததின் வழி வந்தவராகையால் எம்மதத்திலும் வித்தியாசங் கொள்ளாதவரும், தமிழ் வளர்ச்சிக்கும் மாணவர்கட்கும் ஏனையோர்க்கும் உண்டியும் உறையுளும் கொடுத்து, என்றும் பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவருமான சென்னை திருமயிலை N. சிம்புமல்செளகார் ஆவார். இப்பொ¢யாருக்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்தி அன்னாரின் அறத்தொண்டு மேன்மேலும் சிறப்புற்று விளங்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன். இத்தகைய சிறந்த பொ¢யாரை அறிமுகப்படுத்தி வைத்த என் நண்பர் K. தாரிவால் ஜீக்கும் எனது நன்றி உரித்தாகுக. என் வேண்டுகோளுக்கிசைந்து இந்நூலிற்கு அணிந்துரை அளித்த சென்னைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் சொல்லின் செல்வருமான உயர்திரு. ரா. பி. சேதுப்பிள்ளை B.A. B.L. அவர்களுக்கும், பன்மொழிப் புலவர் உயர்திரு தெ. பொ. மீனாக்ஷ¢ சுந்தரனார்.M B.L: M.O.L. அவர்களுக்கும் என் நன்றியறிதலான வணக்கம் என்றென்றும் உரித்தாகும். தமிழகத்தின் கலைக் கண்களாக விளங்கும் இவ்விரு பொ¢யார்களையும் யான் எழுமையும் மறவேன்.

என் சிற்றறிவின் துணையினால் ஆராய்ந்தெழுதிய இந்நூலினைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதியும், மதிப்புரை வழங்கியும் என்னை ஊக்குவித்த எல்லா அறிஞர் பெருமக்களுக்கும், 'நன்று பொ¢தாகும்' எனும் தொல்காப்பியச் சூத்திரத்தை நினைவுறுத்தி வாழ்த்துரை வழங்கிய வித்துவான் பா.ரா.கந்தசாமி B.O.L அவர்களுக்கும், எனது நன்றி உரித்தாகுக.
அறநூற் பதிப்பகம்,
34, சுப்பரமணிய முதலி தெரு,
சென்னை, 15-12-52.
இங்கனம்
அன்பன்
T.S. ஸ்ரீபால்
சென்னைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ் பேராசிரியர்,
சொல்லின் செல்வர். உயர்திரு. ரா.பி. சேதுப்பிள்ளை B.A.;B.L. அவர்கள்
அன்புடன் வழங்கிய

அணிந்துரை

தமிழ்மறையாக என்றும் விளங்குவது திருக்குறள். அந்நூலில் விதித்தவாறு ஒழுகிய பெருமக்களுள் தலை சிறந்தவர் பாரத நாட்டின் தந்தை யென்று பல்லோரும் பணிந்தேற்றும் மகாத்மா காந்தியடிகள். அவர் வள்ளுவர் சொல்லிய வண்ணம், வாழ்க்கையை நடத்தியவர் என்று அறிந்தோர் சொல்லுவார். அப்பெருமகனோடு அணுக்கத் தொண்டராய்ப் பழகி அவர் அடிச்சுவடுபற்றி வாழும் சிலர்களுள் சிறந்தவர் ஆச்சாரிய வினோபாஜீ. அவர் செய்துவரும் அரும்பணி சமணசமயத்தின் அடிப்படையான கொள்கைக்கும் திருக்குறளின் தெள்ளிய கருத்துக்கும் ஒத்திருக்கும் தன்மையை "ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாஜீயும்" என்ற இந்நூல் நன்கு விளக்கிக்காட்டுகின்றது. இதன் ஆசிரியர் தமிழ் நாட்டிற்கு சொல்லாலும் செயலாலும் அரும்பணி புரிந்துவரும் ஜீவபந்து ஸ்ரீபால் ஆவார். கொல்லாமை என்னும் அறம் எல்லார் நெஞ்சிலும் நிலைபெற வேண்டும் என்ற ஆசையால் பல்லாண்டுகளாகத் தொண்டு செய்துவரும் இப்பொ¢யாரைத் தமிழகம் நன்கு அறியும். அவர்கள் இனிய எளிய தமிழ் நடையில் எழுதியுள்ள இந்நூலில் அரிய பல கருத்துக்கள் அமைந்துள்ளன.

சமண சமயத்தார் போற்றும் ஐந்து பேரறங்களுள் ஒன்ற 'மிகு பொருள் விரும்பாமை' என்பது. தேவைக்கு அதிகமாக ஒருவன் உலகப் பொருள்களைத் தொகுத்து வைத்தல் குற்றம் என்பது சமயக் கொள்கை.
இக் குற்றத்தைக் கடிந்து உலகம் இயங்குமாயின் இன்று காணப்படும் சண்டை சச்சரவுகளும் பயங்கரப் புரட்சிகளும் இல்லாது ஒழியுமென்பது சொல்லாமலே அமையும். இத்தகைய கொள்கையை வெ·காமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளாரென்பதைகத் திறம்படி எடுத்துக் காட்டுகின்றார் இந்நூலாசிரியர். நடுவின்றி நன்பொருள் வெ·குதல் குற்றம் என்று கூறுகின்ற குறளில் நன்பொருள் என்பதற்கு மிகு பொருள் என்று கொள்வது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது. திருக்குறளின் உரையாசிரியருள் இருவர் அவ்வாறே உரை கூறியிருத்தல் இந்நூலாசிரியா¢ன் கரத்ததை வலியுறுத்துவதாகும். இக்கருத்தை ஆதா¢த்துத் தமிழ்ப்பொ¢யார் திரு.வி.க. அவர்கள் 'பொருளும் அருளும்' என்ற நூலில் அழகாக விளக்கியுள்ளார்கள்.

பொருளாசையின் வசப்பட்டுப் போர் முழக்கம் செய்வோர் மலிந்த இந்நாளில் அமைதியை நாடி உழைக்கும் அறிஞர்க்கு இந்நூல் சிறந்த உதவியளிக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்நாட்டில் சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சமண சமயமும் உலகப் பொதுமறையாகிய திருக்குறளும் எடுத்துரைக்கும் அருமையான கருத்தைப் போற்றும் நாளே இந்நானிலம் ஏற்றமுறும் நன்னளாகும். எரிமலையின் சிகரத்தை நோக்கி விரைந்து ஏறும் நாட்டினர்க்குச் சமயமறிந்து நல்வழி காட்டிய நண்பர் ஸ்ரீபால் அவர்களுக்கு அறங்கூறும் நல்லூலகம் என்றும் நன்றி செலுத்தும் கட்டுப்பாடுடையதாகும்.

சென்னை,
15-12-52

(sd) R.P. சேதுப்பிள்ளை.


உயர்திரு. பன்மொழிப்புலவர்,
T.P. மீனாக்ஷ¢ சுந்தரனார், M.A.B, B.L; M.O.L.
அவர்கள் அன்புடன் வழங்கியசிறப்புரை

திரு. ஸ்ரீபால் அவர்கள் அருளறத்தினைத் தமிழ் நாட்டில் பரப்பி வருவதனை யாவரும் அறிவர். வேண்டியதற்குமேல் பொருளை ஒருவன் வைத்திருப்பதும் அருளறத்திற்கு மாறாகும். வெ·காமை என்பதனை வள்ளுவர் வற்புறுத்திக் கூறியது இதனாலேயே ஆம். இடபதேவர் காலத்திலிருந்து போற்றப்பட்டு வந்த இந்த அருளறத்தினை இன்று காந்தீயம் என்ற பொருளாதாரக் கொள்கையாக உலகம் போற்றி வருகிறது. ஆச்சாரிய வினோபாபாவே இதனைச் சாம்ய யோகம் என்ற பெயரால் பரப்பிக்கொண்டு உலகம் போற்றும் பூமியக்ஞம் ஒன்றை இந்திய மாபெருவேள்வியாக வளர்த்த வருகின்றார். இந்த உண்மைகளை எல்லாம் நண்பர் திரு. ஸ்ரீபால் அவர்கள் நல்ல் தமிழில் எளிய நடையில் விளங்குகின்றார். தமிழ்ப் பெயா¢யார் திரு.வி.க. அவர்கள் அருளிச் செய்த "அருகன் அருகே" என்ற திருப்பாடலை யொட்டி இந்த நூல் செல்வது மக்கள் மனத்தினைக் கவர்கிறது.

இந்த நூல் பரவுவதோடு கருத்தும் பரவி நாட்டினை உய்விக்குமாக.

சென்னை,
13-6-52.

(sd)தெ. பொ. மீனாட்சிசுந்தரன்


இந்நூலை ஆழ்ந்து படித்து இதன் கருத்தில் ஈடுபட்ட
வித்துவான் பா. ரா.கந்தசாமி B.O.L. அவர்கள்
உளங்கனிந்தனுப்பிய

வாழ்த்துரை

பகுத்தறிவுப் பொதுவுடைமை யருள் ஒழுக்கம்
பழந்தமிழர் பெருநெறியை உலகம் உய்ய
வகுத்தருளும் வாலறிவன் தமிழ்க்கு மூல
வா¢வடிவம் அமைத்திட்டோன் செந்நாப் போதார்
பகுத்த பழந் தமிழ் மறைக்கு மூலன் ஆதி
பகவனெனும் மெய்யுரையை ஐயம் நீங்கத்
தொகுத்துரைத்த அன்புருவன் உயிர்க்குத் தோழன்
தூய தமிழ் ஸ்ரீபாலென் சீலன் வாழி!

இருள்நிறைந்த நெஞ்சினராய் உயிர்செ குத்தம்
இன்பநெறி யென்று புலை வேள்விவேட்டும்
மருள்நிறைந்த வழியுழலும் மாந்தர் தேற
மதிக்கினிய மெய்யொழுக்க மாட்சி சான்ற
அருள்நெறியை முதன்முதலில் உலகுக் கீந்த
அண்ணல் எவன் அவன்ஆதி பகவன் என்னும்
தெருள்நிறைந்த மொழிபுகன்று தமிழர்மாட்சித்
திறம்விளங்கும் ஸ்ரீபால் நீ சிறந்து வாழி!

(sd.) பா.ரா. கந்தசாமி, B.O.L.

தமிழ் ஆசிரியர்,
K.K. High School Velur (Salem) 27-7-52.

Adhi bhagavanum Acharya Vinobha bhavavum.

"Designed for the general reader this well-planned booklet gives a clear and interesting account of the valorous part played by Vinobha bhave in the cause of the downtrodden. these essays reveal accute Judgment of trends and traditons and offer same advice on the dilemmas facing man in and out of society. here is an attempt to tell the story of Vino¦ha bhave, but in rather high-down language, and to present the whole of this ideas and ideals. containing as it does much unusual information, the bookelet gives a sociological panorama from and educational point of view and is both readable and percipient, containing much fresh biographical material. it is also amply documented and informative."


'Indian Express' 6-4-1952.

1  2  3  4  5  6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com