முகப்பு வாயில்

 

முன்னுரை

இவ்வரலாற்று ஆய்வு நூல் மூன்றாம் பதிப்பாக வெளிவருகின்றது. முன் இரண்டு பதிப்புகளைப் படித்து மகிழ்ந்த பல அறிஞர்கள் ஆய்வாளர்கள் அந்நூலைப் பாராட்டி வரவேற்றனர். 'பல பத்திரிக்கை ஆசிரியர்களும் அந்நூலைப் பாராட்டி மதிப்புரைகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைத் தொவித்துக்கொள்கிறேன். கேரளப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பெற்ற 'சிலப்பதிகார ஆய்வடங்கல்' என்ற அரிய நூலில் இடம் பெற்றுள்ள 'இளங்கோவடிகள் சமயம் யாது? எனும் நூலின் சிறப்பைப் படித்தறிந்த பல புலவர்களும், அறிஞர்களும் இந்நூலை விரும்பி என்னிடம் நேராகவும், கடிதங்கள் வாயிலாகவும் கேட்டு வருகின்றனர்.

சிறப்பாக, "தமிழகத்தில் ஜைனம்" என்ற என் நூலைப் பற்றி "Madras Mail" எழுதிய மதிப்புரையைப் படித்த புதுடில்லியில் உள்ள "The Foreign Service of The United States of America" என்ற அலுவலகத்தார் அமொக்காவிலுள்ள "Library of Congress in Washinghton" என்ற ஆய்வுத்துறைக்கு அனுப்ப வேண்டி, "தமிழகத்தில் ஜைனம்", "ஊன் உணவைத் துறந்த உத்தம வேடனும் மரக்கறியின் மாண்பும்", "பகுத்தறிவியக்கத்தின் பழமை" போன்ற என் நூல்கள் ஒவ்வொன்றிலும் 10 படிகள் அனுப்புமாறு எழுதி பெற்றுக்கொண்டார்கள். இப்பொழுது "இளங்கோவடிகள் சமயம் யாது?" என்ற நூலினை விரும்பிக் கேட்டுள்ளார்கள். எனவே இந்நூல் இன்றைக்கு இன்றியமையாததாக விளங்குவதால், மூன்றாம் பதிப்பாக வெளியிட சில புதிய சேர்க்கைகளுடன் உருவாக்கியுள்ளேன். எனவே இந்நூல் ஆய்வாளர்கட்கு புதிய நூலாகவே பல வரலாற்று செய்திகளை அளிக்கும். நூலின் தலைப்பையும் இளங்கோவடிகள் சமயம் என மாற்றியுள்ளேன்.

குணவாயில் கோட்டம் அருகன் கோயிலே எனக் காட்டும் வரலாற்றுச் சான்று, எட்டி சாயலனும், அவன் மனைவியும் அடைந்தது வீடுபேறல்ல; சுவர்க்க லோகமே என்ற உண்மை, பெண் துறவிகளுக்கு வீடு பேறில்லையெனும் ஜைன சமய அறிவியல் தத்துவத்தின் கொள்கை விளக்கம் ஆகியவைச் சிறப்பாக இப்பதிப்பில் விளக்கம் பெறுகின்றன.

இப்பெற்றி சிறப்பமைந்த இவ்விலக்கிய ஆய்வுநூலை சென்னை ஜைன இளைஞர் மன்றத்தினர் வெளியிட முன் வந்தனர். ஜைன இளைஞர் மன்றத்தினர் சமய சேவையில் பொதும் ஈடுபாடுடையவராகி பல அரும் பெரும் நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் பேரறிவு பெற்று விளங்குவதோடு ஆற்றல் மிக்க சேவைச் செல்வர்களாகவும் விளங்குகின்றனர். "முக்குடை" எனும் பெயரால் ஒரு திங்களிதழை நடத்தி, சமய சேவை புரிந்து வருவதை தமிழகம் நன்கறியும்.

இத்தகு சிறப்புகள் அமைந்த ஜைன இளைஞர் மன்றத்தினர் இந்நூலை வெளியிட்டு உதவியமைக்கு அவர்கட்கு என் நன்றிகலந்த வணக்கத்தைத் தொவித்துக்கொள்கிறேன்.

இந்நூலை இவ்வளவு அழகுற அச்சிட்டு உதவிய எஸ். தன்யகுமார் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகுக!

இங்ஙனம்,
T.S. ஸ்ரீபால்

சென்னை
11-10-1978பாராட்டுரைகள்

உயர்திரு. மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள்

ஜீவபந்து திரு. T.S. ஸ்ரீபால் அவர்கள் எழுதிய இளங்கோ அடிகள் சமயம் யாது? என்னும் நூலை படித்து மகிழ்ந்தேன். இந்நூல், சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோ அடிகளைச் 'சைவ சமயத்தவர்' என்று சிலர் தக்க காரணமின்றி எழுதியிருப்பதைக் கண்டிப்பதோடு, சிலப்பதிகார நூலில் காணப்படும் ஜைன சமயக் கருத்துக்களை விளக்கிக் காட்டி இளங்கோ அடிகள் ஜைன சமயத்தவர் என்பதை அங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாக்குகின்றது. தமிழரின் ஆதிகாவியமாகிய சிலப்பதிகாரம் தமிழ் மொழியின் தனிச் சிறப்பையும் தமிழான் கலை நாகாகம் முதலிய பண்புகளையும் இனி தெடுத்தோதுகின்ற ஒப்புயர்வற்ற சிறந்த நூல். இச்சீரிய நூலைத் தமிழருக்குத் தந்தருளிய தமிழன்னையின் அருந்தவச் செல்வராகிய இளங்கோ அடிகள் சமயக் கொள்கையில் சமணராக இருந்தார் என்பதில் வரும் இழுக்கு யாது? சமணர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப் பல. அவர்கள் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகளை அறிந்து அவரைப் போற்றாத தமிழன் தமிழனாவனோ? நிற்க. செய்ந்நன்றி மறந்தவராய்ச் சிலர் ஜைன ஆசிரியர் இயற்றிய நூல்களை சிதைத்தும் திருத்தியும் மாற்றியும் மாறுபொருள் கற்பித்தும் அச்சிட்டு வெளிப்படுத்துகின்றனர். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. திரு. T.S. ஸ்ரீபால் அவர்கள் இந்நூலில் இத்தகைய செயல்களைக் கண்டித்தும், இளங்கோ அடிகள் ஜைன சமயத்தார் என்பதையும் நிறுவியுள்ளார். காய்தல் உவத்தல் அகற்றி நடுநின்று நோக்குவார்க்கு இவரது ஆராய்ச்சி உடன்பாடாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மயிலை. சீனி. வேங்கடசாமி


சென்னை
10-10-1943

சென்னைப் பல்கலைக் கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் சொல்லின் செல்வர்
டாக்டர். R.P. சேதுப்பிள்ளை, B.A., B.L., அவர்கள்.

பாராட்டுரை

திரு. T.S. ஸ்ரீபால் அவர்கள் எழுதியுள்ள இளங்கோவடிகள் சமயம் யாது? என்னும் நூலைப் படித்தேன். அவர்கள் கொள்கைகளிற் சிலவற்றை நான் முன்னமே கொண்டுள்ளேன். செங்குட்டுவன் சமயச் சார்பு குறித்து அவர்கள் கூறுவன நன்கு ஆராயத்தக்கன. உண்மை காணும் நோக்கம் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாதது. சிலப்பதிகாரத்தைக் கூர்ந்து படிப்பதற்கு இச்சிறு நூலும் ஒரு கருவியாகும்.

ரா.பி. சேதுப்பிள்ளை

சென்னை
20-10-1943.


பதிப்புரை

மெய்ப்பொருள் காட்டி உயிர்கட்கு அரணாகித்
துக்கம் கெடுப்பது நூல்.

இலக்கியத் திறனாய்வில், படைப்பானது வரலாற்றை ஆய்தலும் ஒரு பகுதியாக விளங்குகிறது. குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தின் கொள்கையை வரையறுக்குங்கால், அவ்விலக்கிய படைப்பாளன் சமூகத்தை நோக்கிய பார்வையும், அவன் வாழ்ந்த சமூகச் சூழலும் கூட கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் ஒரு படைப்பாளன் தான் பிறந்த சமூக உணர்விலிருந்து முற்றுமாக விடுபட்டு தன் இலக்கியத்தைக் கற்பனையாகப் படைப்பான் என்று சொல்ல முடியாது. இதனால் படைப்பாளன் வரலாற்றை ஆய்தல் ஒரு தனித் துறையாக இன்று வளர்ந்து வருகிறது.

இவ்வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய படைப்பாளர்கள் வரலாறுகளை ஆய்தல் பல்கி பெருகி வருகிறது. பண்டையோர் வரலாற்றை ஆயும் ஆய்வாளர்கள் சமயப் பற்று முதலானப் பற்றுகளுக்கு ஆட்படாமல் நடுநிலையில் நின்று உண்மை காண முயல வேண்டும். உண்மையை நெருங்குதலே அவர்தம் நெறியாக இருத்தல் வேண்டும். இளங்கோ அடிகள் சமயம் எனும் இந்நூல், அவ் அடிப்படையில் திரு. ஜீவபந்து ஸ்ரீபால் படைத்த ஆய்வு நூலாகும். ஏற்கனவே 'இளங்கோ அடிகள் சமயம் யாது?' என்னும் தலைப்பில் வெளியான நூலே திருந்திய வடிவத்தில், புதிய ஆய்வுக் குறிப்புகளுடனும் மாறிய தலைப்புடனும் இப்போது வெளிவருகிறது. நூலாசிரியர் தம் கூர்த்த அறிவும், கருத்துகளை வெளியிடும் நோய பாங்கும் நூல் முழுதும் ஊடாடி ஒளி காட்டி நிற்பதைக் காணலாம். அவர் பெருமை நாடறிந்ததே.

ஓர் ஆய்வு நூல் அமைய வேண்டிய அமைப்பில் இந்நூலை அமைத்துள்ளோம். இப்புதிய பதிப்பைக் கொண்டு வருவதற்கு இசைவு தந்த பொயார் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களுக்கு மன்றம் என்றும் நன்றி பாராட்டும்.

நூலை அழகாக அச்சிட்டுத் தந்த தன்யகுமார் அச்சகத்தார்க்கும் ஓவியம் வரைந்த திரு. ஆனந்தனுக்கும் மன்றம் நன்றி பாராட்டுகிறது.

தமிழ்ப் பெரு நிலம், இந்நூலை ஏற்றுப் போற்றி, மன்ற நூல் வெளியீட்டுப் பணியை ஊக்குவிக்க வேண்டும் என விழைகிறோம்.

ஜைன இளைஞர் மன்றத்தார்.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com