முகப்பு வாயில்

 


மாணவர்கள் கண்ட பண்டைய மாண்புறு கோயிலும் வரலாற்று உண்மைகளும்

சென்னை கல்லூரி ஆசிரியர் ஒருவர், அறிவுடைநம்பி ஆனந்தன் என்ற இரு மாணவர்களுடன் உல்லாசப் பயணமாகப் புழலோ˘யைப் பார்க்கச் சென்றார். செல்லும் வழியில் புழல் கிராமத்தில் ஓர் பழைய கோயிலைக் கண்டனர். அக்கோயிலின் அழகிய தோற்றம் அவர்கள் மனத்தைக் கவர்ந்தது. அங்கு நின்றிருந்த ஒரு பொ˘யவரைப் பார்த்து, 'ஐயா! அது என்ன கோயில்' என்றார். அப்பொ˘யவர் எம்மான் கோயில் என்றார். ஆசிரியரும் மாணவர்களும் வியப்புற்று, 'எம்மான் கோயிலா' என்றனர். 'ஆமாம்! சோழன் காலத்துக் கோயில், போய் பாருங்கள்' என்றார் அப்பொ˘யவர். உடனே மூவரும் கோயிலுக்குள் சென்றனர். அங்குள்ள சிலையைக் கண்டதும், மாணவர்கள் புத்தர் கோயில் ஐயா! என்றனர். ஆசிரியர் சிறிது நேரம் சிலையை உற்று நோக்கிவிட்டுப் புன்னகையோடு, புத்தர் சிலையல்ல! ஆதீஸ்வரர் என்றார்.

மாணவர்கள் : ஆதீஸ்வரரா? இதுவரை அப்பெயரை யாங்கள் கேட்டதே இல்லையே.
ஆசிரியர் : ஆம்! கேட்டிருக்க முடியாது. ஆதீஸ்வரர் என வழங்கும் இப்பொ˘யாரின் இயற்பெயர் விருஷபதேவர். இவர் நம்மைப் போன்று, தாய் தந்தை வயிற்றிற் பிறந்து, மனைவி மக்களுடன் வாழ்ந்து, ஆத்மீகத் துறையில் தவம் செய்து, வீடு பேறு பெற்றவர். உங்கள் சா˘த்திர புத்தகத்தில் மகாவீரரையும் புத்தரையும் பற்றி வாசித்திருக்கின்றீர்கள் அல்லவா? அவர்களிருவருக்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டவர். அகிம்சாதர்மத்தின் தந்தை! அகர முதலாகிய எழுத்துக்களையும், ஒன்று முதலாகிய எண்களையும் முதன்முதல் தோற்றுவித்தப் பேராசிரியர். வாள், வரைவு, உழவு, வாணிபம், கல்வி, சிற்பம் ஆகிய அறு தொழில்களையும் கற்பித்த சமுதாய அமைப்பாளர். மக்கள் நல மேம்பாட்டிற்குரிய இல்லறம் துறவறம் ஆகிய இரு பேரறங்களையும் வகுத்த அறவாழி அந்தணர்! தேவைக்கு மேலான பொருள்களைப் பதுக்கிவைத்தல், ஐம்பெரும் பாவங்களில் ஒன்றெனக் கூறி "மிகுபொருள் விரும்பாமை" எனும் அரியதோர் அறம் வகுத்த முதற் பொதுவுடமைத் தலைவர்! செய்தொழில் வேற்றுமையன்றி பிறப்பினார் மக்களனைவரும் ஒன்றென உரைத்த உத்தமர்! கண்கள் எவ்வாறு புறப்பொருள்களைத் தெளிவாக அறிகின்றனவோ, அவ்வாறே நூற்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்தறிய வேண்டுமென்ற பகுத்தறி வியக்கத்தின் கர்த்தா! இவ்வாறு பல திட்டங்களுடனும் கொள்கைகளுடனும் ஒரு புது சமுதாயத்தைப் படைத்த புத்துலகச் சிற்பி!

அறிவுடைநம்பி : ஆசிரியர் பெரும! என்னே விந்தை! இவ்வாறு செயற்கா˘ய சேவையை மக்கள் சமுதாயத்திற்காகச் செய்தருளிய எம்மான் கோயில் சென்னைக்கருகில் இருப்பதை இதுவரை யாங்கள் அறிந்ததில்லையே! அவரது சமயம்?

ஆசிரியர் : சமயமா? அவர் தாம் வகுத்த அறநெறிகளை. ஒரு வகுப்பாருக்கென குறிப்பிடவில்லை. சமயமென்றோ, மதமென்றோ அழைக்கவில்லை. அது மட்டுமா? தமது பெயராலும் அக்கொள்கைகளை நிலைநாட்டவில்லை. அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தமது கொள்கைகளை அறம்! அறம்!! அறம்!!! என்றே அமைத்தார். இப்பேரறம் உலக மக்களனைவருக்கும் பொதுவானது. இவ்வறத்தினையே தமிழ் நூல்களில் திருவறம் அல்லது திருமொழி எனப் போற்றிப் புகழப்படுகிறது.

ஆனந்தன் : ஐயா! அப்பொ˘யவர் கூறியபடி எம்மான் கோயில் என்பது பொருந்தும்! இவ்வுத்தமனின் காலம் யாதோ?

ஆசிரியர் : காலம்! மாணவர்களே! உலகம் அடிக்கடி பல மாறுதல்களை அடைந்துள்ளதை அறிவீர்கள். பூகோள ĄŁதியிலுங்கூட, கடல் நாடாவதும், நாடு கடலாவதும் உண்டு. இந்நிலையை நமது புராணங்கள் போகபூமி, கர்மபூமியாக மாறிற்றென்று கூறுகின்றன. இத்தகைய இயற்கைச் சூழலின் கண்வயப்பட்டு நமது நாடும் ஒரு காலத்தில் சீர்குலைத்தது. மக்கள் தங்கள் வாழ்க்கைக்குரிய வழி தொ˘யாமல் திகைத்தனர். சமைத்துண்ணவும் வகையறியாமல் பச்சைக் காய் கிழங்குகளைப் புசித்துக் காலங் கழித்தனர். நன்மை, தீமை எனும் பாகுபாடுகூட அவர்களுக்குத் தொ˘யாது. அந்நிலையில் நாபி என்பவருக்கும், மருதேவி என்ற அம்மையாருக்கும் ஓர் ஆண்மகவு பிறந்தது. அம்மகவுக்கே விருஷபதேவர் எனப் பெயா˘ட்டனர். அவர் செல்வாக்குடன் வளர்ந்து வந்தார். குழந்தைப் பருவத்திலேயே அவா˘டம் அறிவு ஒளி வீசிற்று. காளைப்பருவம் பெற்றதும், நாட்டின் நிலையைக் கண்டார். அறிவுக்குப் பொருந்தாத நிலையில் சமுதாயம் அமைந்திருந்தது. மக்களெல்லாம் மாக்களாகவே வாழ்ந்தனர். எங்கும் துன்பம்! எங்கும் கவலை! எங்கும் குழப்பம் இப்பயங்கர நிலையைக் கண்டு மனத்தில் இரக்கங்கொண்டார்! இத்துன்பத்தினின்றும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என உறுதிகொண்டார். இரவு பகலாகச் சிந்தனையிலாழ்ந்தார். அவர் சிந்தனையில் பல்வேறு திட்டங்கள் உருவாயின. அத்திட்டங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கினார். அச் சீரிய சமுதாயமே யான் முன்னர் கூறியது. இன்றியமையாக் கொள்கைகளுடன் ஒரு புது சமுதாயத்தை முதன் முதல் படைத்தருளிய பகவான் விருஷபதேவர் காலம் சா˘த்திரங் கடந்தது; வரையறுத்துக் கூறவியலாதது. எனினும் அவர் வரலாற்றுப் புருடர் என்பதற்குரிய இலக்கியச் சான்றுகள் போதுமானவை கிடைக்கின்றன.

மாணவர்கள் : ஆதீஸ்வரர் என்ற பெயர் எவ்வாறு வந்தது?

ஆசிரியர் : மாணவர்களே! பகவான் விருஷபதேவர் இல்லறம் துறவறமாகிய இரு பேரறங்களை வகுத்தாரென்பதை அறிந்தோம். அவர் அவ்விரு அறங்களின் வழி நின்று தவமியற்றி வீடுபேறு பெற்றமையால் அம்முனிவர் தலைவனை பகவன், சித்தன், சிவன், சிவகதி நாயகன், எண்குணன், அறவாழி அண்ணல், அருகன், அறிவன், சினன், தீர்த்தங்கரர் எனப்போற்றி வாழ்த்தினர். அவருக்குப் பின் அவ்வற நெறிகளை உலகெங்கும் பரப்பித் தவமியற்றி வீடுபேறு பெற்றவர்கள் இருபத்துமூவர். அவ்விருபத்து மூவர்களுக்கும் பகவான் முதலிய சிறப்புப் பெயர்கள் வழங்கலாயிற்று. அவர்களில் கடைசி தீர்த்தங்கரரே நாம் வரலாற்று நூல்களில் வாசிக்கும் மகாவீர வர்த்தமானர், பகவான் விருஷப தேவர் முதல் மகாவீரர் ஈறாக இருபத்துநான்கு தீர்த்தங்கரர் ஆவார்கள். தீர்த்தங்கரர் என்றால் அறவுரைப் பகர்வோர் என்பது பொருள். எனவே பகவான் விருஷபதேவர் இவர்களுக்கெல்லாம் ஆதியாக விளங்கியமையால் அப்பெருமான் ஆதிபகவான், ஆதீஸ்வரன், ஆதிநாதன், ஆதிமூர்த்தி, ஆதிதேவர், ஆதிஜினன், ஆதிபட்டாரகர் என அழைக்கப்பெற்றார்.

அறிவுடைநம்பி : அருமை சார்ந்த பேராசிரியரே! இன்று அரிய செய்திகளைத் தொ˘ந்துகொண்டோம். ஆதீஸ்வரர் வழி வந்தவர்கள் இருபத்து மூவர் என்றீர்களே அவர்களில் புத்தரும் ஒருவரா?

ஆசிரியர் : (சிரித்துக்கொண்டே) இல்லை. புத்தர் வேறு. அவர் கொள்கைகளும் வேறு. மகாவீரர்தான் ஆதீஸ்வரர் வழி வந்தவர். அவர் அறம், பூரண அஹிம்சையையுடையது.

ஆனந்தன் : புத்தரும் அகிம்சையைத்தானே போதித்தார்.

ஆசிரியர் : ஆம்! அகிம்சையைத்தான். இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. புத்தர் உயிர்க்கொலையை வன்மையாகக் கண்டித்தாலும், புலாலுண்ணலைத் தடைசெய்யவில்லை. எனவே இன்று புத்த மதத்தினர் பிறரால் விற்கப்படும் புலாலை வாங்கிப் புசிக்கின்றனர். ஆத்ம தத்துவத்திலும் மாறுபட்டவர்கள். அதனாற்றான் இருவரும் ஒரே காலத்தவராயிருந்தும் வெவ்வேறாகவே தங்கள் கொள்கைகளைப் பரப்பி வந்தார்கள். எனவே மகாவீரர்தான் ஆதீஸ்வரர் வழி வந்தவர். அவர் கொள்கை உயிர்களைக் கொல்லவுங் கூடாது. புலாலுணவைப் புசிக்கவுங் கூடாது. இன்னும் ஆதீஸ்வரர் அறத்தினைப் பின்பற்றும் ஜைனர்கள் (சமணர்கள்) கொல்லாவிரதம் உடையவராகவும், புலாலுண்ணும் பண்பினராகவும் வாழ்கின்றனர்.

அறிவுடைநம்பி : உண்மை ஐயா! எனக்குப் பல சமண நண்பர்களுண்டு. அவர்கள் புலால் புசிப்பதே இல்லை. இவ்விரு சமயத்தின் வேறுபாடு தொ˘யாமல் எனது சமண நண்பர் ஒருவா˘ன் தந்தையாருடன் பேசும்போது, பர்மாவில் உங்கள் சமயத்தவர் நிறைய புலால் உண்கின்றனர் என்று கூறிவிட்டேன். அவர் கோபக்குறியோடு, 'பர்மாவில் உள்ளவர்கள் புத்தர்களப்பா! சா˘த்திர நூல்களை ஆழ்ந்து வாசி' என்று கூறினார். அவர் நோக்கத்தை அறிந்துகொண்ட நான் மேற்கொண்டு பேசவில்லை. இன்று தங்களால், அதன் உண்மைகள் விளங்கிற்று. சிலைகள் மட்டும் ஒரே மாதிரியாயிருக்கின்றனவே! அதனால்தான் இதனை புத்தர் கோயில் என்றேன்.

ஆசிரியர் : இந்த மயக்கம் உனக்கு மட்டும் ஏற்படவில்லை. படித்துப் பட்டம் பெற்றவர்களில் சிலருக்கும் உண்டு. புத்தர் சிலைகளுக்குத் தலையின் உச்சியில் முடிந்திருக்கும், பெரும்பாலும் உடலில் ஆடையுங் காணப்படும். ஜைனர் சிலைகளின் தலை உச்சியில் முடியோ, உடலில் ஆடை ஆபரணங்களோ கிடையாது.

"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு"

"இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து"

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பும் மிகை"

என்ற திருக்குறள் கூறும் துறவிலக்கணப்படி அமைந்திருக்கும். இத்தகைய பற்றற்றத் திகம்பர உருவச்சிலைகளின், இருபக்கங்களிலும், சாமரை வீசும் தேவர்கள் சிலைகளும் மத்தியில் முக்குடையுங் காணப்படும். இவ்வேற்றுமைகளை அறியாமல் எத்தனையோ சமணர் சிலைகளை புத்தர் சிலைகள் என்று எழுதியும் பேசியும் விடுகின்றார்கள்.

மாணவர்கள் : ஐயோ! இதனால் சா˘த்திரமே பாழாகிவிடுமே!

ஆசிரியர் : என்ன செய்வது? இப்பொழுதுதான் அவைகளைத் திருத்தம் செய்து வருகிறார்கள்.

அறிவுடைநம்பி : அன்புசால் ஆசிரியரே! பகவான் விருஷப தேவர் சா˘தம் இவ்வுலக சா˘தத்தில் தலைசிறந்ததொன்று. அவர் வரலாற்றுப் புருடர் என்பதற்குரிய சான்றுகள் இருப்பதாகத் தொ˘வித்தீர்கள் அல்லவா!

ஆசிரியர் : ஆம்! ஆம்! அது மிக முக்கியமானது. திருக்குறளாசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் வழிபடும் ஆதிபகவான்தான் பகவான் விருஷப தேவர்!

அறிவுடைநம்பி : (ஆச்சா˘யத்தோடு) என்ன? தமிழ்மறையிலா? ஆதிபகவன் விருஷப தேவரா? புதுமையாயிருக்கிறதே!

ஆசிரியர் : புதுமை என்ன? உண்மையை மறைத்தார்கள். அது வெளிப்படும்போது நமக்கும் புதுமையாய்க் காணப்படுகின்றது.

ஆனந்தன் : தங்கள் கருத்து தமிழ் இலக்கியங்களிலே ஒரு திருப்புமையம் (Turning point) என நினைக்கிறேன், இதனை நிரூபிக்க அகச் சான்றுகள் ஏதாகிலும்,.

ஆசிரியர் : ஆனந்தா! ஏதாகிலுமென்ன? ஏராளமாக இருக்கின்றன. "ஆதிபகவன்" என்ற சொற்றொடரைக் கொண்டே பகவான் விருஷப தேவரை வழிபடும் தமிழ் இலக்கியங்கள் பல இருக்கின்றன. அதுமட்டுமல்ல! வாலறிவன், எண்குணத்தான், அறவாழி அந்தணன், மலர்மிசை ஏகினான், ஐம்பொறி வென்றோன் போன்ற சொற்களும் அங்கே காணலாம்.

ஆனந்தன் : சார்! ஆதிபகவன் என்ற சொற்றொடரைக் கொண்டே, நூல்கள் உளவா?

ஆசிரியர் : ஆம். உள. கேளுங்கள்!

"மன்னிய பேருலகனைத்தும்
நின்னுள்ளே நீயொடுக்கினை
நின்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை" என வாங்கு,

ஆதிபகவனை யருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே"

அறிவுடை நம்பி : ஆமாம் சார்! ஆதிபகவன் என்ற சீரிய பெயரே அமைந்துள்ளதே! இது எந்த நூல்!

ஆசிரியர் : திருக்கலம்பகம் எனும் ஓர் அழகிய தமிழ் நூல் இது மட்டுமா?

"ஆதிபகவன் அசோகவசலன்
சேதிப முதல்வன் சினவரன் தியம்பரன்"

எனத் திருப்பா மாலையிலும்,

"அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்"

எனத் தோத்திரத் திரட்டிலும்,

"கோதிலருகன் திகம்பரனெண்குணன் மூக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்
சோதிமுனைவன் சினேந்திரன் பொன்னெயில் நாதன் சுத்தன்
போதி நடந்தோன் அதிசயன் சார்ந்தநற் புங்கவனே"

எனக் கயாதர நிகண்டிலும் ஆதிபகவானைக் காணலாம்.
 

1  2  3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com