முகப்பு வாயில்

 

ஜீவகாருண்யச் சிறப்பு

(1)
இராகம்-கதனகுதூகுல-தாளம் ஆதி
(ரகுவம்ஸசுதா என்ற மெட்டு)

பல்லவி

கருணாகனே கைலைவாசனே
காங்குவித்தேன் நேராய் கதியருள் தாராய்

அனுபல்லவி

சரணமாகியின்று சற்குணம் பயின்று
சமரசமா யன்பு சாற்றினேனே நின்று (க)

சரணம்
விரதமேது வேறே விண்ணோரேற்றுஞ்சீரே
வேண்டினேனே கொல்லா விரதமோதும் பேரே
பரதம் போற்றுந்தர்மம் பல்லுயிர்க்குமின்பம்
பண்பினைபயக்கும் பழவினைகள் போக்கும் (கருணா)

(2)
இராகம்-சுருட்டி-தாளம் ஆதி
(கீதார்த்தமு என்ற மெட்டு)

பல்லவி
தேவாதி தேவாநின் பாதாரவிந்தம்
சேவை பரமானந்தம் நீதம்

அனுபல்லவி

உடலெலாமுயிரெலாம் உணர்வெலாமுள்ளமெலாம்
உனையன்றி வேறுளதோ ஒளிதரும் பொருளே
படிதனிலுயிர்தமை பாந்துப சாப்போரை
பணியமனம் பரவும் பாசமே தந்தருளும் (தே)

(3)
இராகம்-ஷமா-தாளம் ஆதி
(சாந்தமுலேகா என்ற மெட்டு)

பல்லவி

தாமரை பாதா தனிபெரும் வேதா
சார்ந்தவர்க்கருள் போதா (தாமரை)

அனுபல்லவி
பூமானே உயிரெலாம் பொருந்தியுளாய் நீயே (தாமரை)

சரணம்
ஆருயிர் தமக்கன்பு ஆற்றுமோ ரருந்தொண்டு
போருள் அறிய பித்தமானேன் புரிய (தாமரை)
தீமை புயுஞ் சிறு தெய்வமெனும் பொய்யில்
காமுற்றழுந்தி மீனா கயவரைக் காருஞ்சீலா (தாமரை)

(4)
(தொலி நேநு சேயு பூஜா என்ற மெட்டு)

பல்லவி
கலைவாணரே கதிவேண்டியே
கொலை விடுவீர்

அணுபல்லவி
புலாலுண்ணுவார் புண்ணியராகார்
போதமுற்றாலும் பூஜித்தாலுமென் (க)

சரணம்

பாமாத்மனே பல்லுயிர் மேவி
பதிகொண்டுளா ரிதுஉண்மையால்
கருமம் பெற்றுய்ய தயைமூலமென்றே
தன்னுயிரைப்போல மன்னுயிரையெண்ணும்(க)

(5)
இராகம்-பந்துவராளி-ஆதி தாளம்.

பல்லவி
சுகமிதில் பாராய்யா சுரர் பதமேதரும் (சுக)

அனுபல்லவி
தகுபரம்பொருளாம் தனியவன் பாதம் நினை (சுக)

சரணம்
இறைவனாலயமதாய் இலங்கு முயிரனைத்தும்
உறையுநம் முயிரென உகந்திருந்திமென்பால் (சுக)
அனித்திய உடல்தமை பிணத்தினாள் பெருக்காது
இனிக்குங் காய்கனியுண்டு இகபரலோகமெங்கும்.
(சுக)

1. மிகவும் மேன்மையானது எது?

ராகம் புன்னாகவராளி

(1) நாட்டிலே மிக மேன்மை
யாதென்று தேடி-ஓடி
நானலைந்தே னெங்குமொரு
பித்தன் போலாடி
கேட்டே நீதிஸ்தலங்க
னெங்கு நின்றேன்-அங்கு
கிளத்தினார் சட்டத்தையே
விட்டுச் சென்றேன்.

(2) ஓதுங்கல்விச்சாலைகளில்
நம்பி நுழைந்தேன்-அங்கு
உரைத்தார் புத்திக்கூர்மையே
ஒதிங்கிவந்தேன்
தீதுதீரறிவுடை
யாரிடங் கேட்டேன்-அவர்
தீரமாய் சத்திய மேன்றார்
திரும்பிவிட்டேன்.

(3) அறிவிலா னெதிர்பட்டான்
குறை அறைந்தேன்-அவன்
ஆடிக் களியாட்ட மென்றான்
மனமுறிந்தேன்
சிறந்த பேரழகினம்
மாதைக்கண்டேன்-புன்
சிரிப்புடன் காதல் என்றால்
வெட்கமுண்டேன்.

(4) ஆண்மையாகச் செல்லுமொரு
காளையைப் பார்த்தேன்-அவன்
அழகு அழகு என்றான்
அங்கம் வியர்த்தேன்
தூண்போல் தோளுடை படை
வீரனை விண்டேன்-அவன்
துணிவாகக் கீர்த்தி யென்றான்
துன்பங் கொண்டேன்.

(5) தேசாபிமானிகளை
விண்ணப்பித்தேன்-அவர்
தேர்ந்த் சுதந்தர மென்றார்
மிகநகைத்தேன்
தாசனாய்ச்சென்று ஞானி
காவில் விழுந்தேன்-மிக
தாமதித்து நீதி என்றார்
மனங்குழைந்தேன். (நா)

(6) முனிவர் பெருமானை
வணங்கி நின்றேன்-அவர்
முக்தி யென்றுரைக்க
இனி பதிலுரைப்பவ
ரிங்கிலை யென்றே-என்
இருதயம் வருத்தமா
யுரைத்ததன்றே. (நா)

(7) ஒன்றுந் தோன்றாது
கடலோரந்தனிலே-வாடி
உண்மையைச் சிந்தித்
திருக்கும் வேளையினிலே
என்று மிலானந்தத்துட
னுள்ளத்தினின்றே-சப்தம்
எழுந்தது அன்பு அன்பு
அன்பு தானென்றே. (நா)

(8) எழுந்தேன் தொழுதேன்மிக
துள்ளி குதித்தேன்-அன்பு
என்றெழுதி தெய்வமென
வாழ்த்தித் துதித்தேன்
பொழிந்தே னானந்த கண்ணீ
ரெனை மறந்தே-அன்பால்
போற்றுங்களெவ்வுயிரையும்
மேன்மையறிந்தே. (நா)

 

1   2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com