முகப்பு வாயில்

 


திருவறம் வளர்க.

கோலாப்பூர் ஜைன மடமும் ஸ்ரீ சுவாமிகள் வரலாறும்

நமது பாரத நாட்டின் வரலாற்றில், தொன்மையும் தூய்மையும் மேன்மையும் பொருந்திய சமயம் ஜைனம் என்பதை வரலாற்று உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும். மக்கள் நல மேம்பாட்டிற்கும் அறிவிற்கும் அடிகோலியது ஜைன சமயமே. அதுமட்டுமல்ல, இயற்கைக்கும் அறிவுக்கும் பொருந்தக்கூடிய கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டது. அன்பின் அடிப்படையில் அறம் வகுத்தது. அறிவும் அறமும் இருந்தால் தான் மூடநம்பிக்கைகள் அகலும், உண்மையும் அன்பும் ஓங்கும். அன்பென்பது உலக ஒற்றுமை. அதாவது சகோதர உணர்ச்சி. "அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும். நண்பெண்ணும் நாடாச்சிறப்பு" என்பது நமது தமிழ்மறையல்லவா? அறிவெண்பது நல்லவற்றை ஆராய்ந்தறியும் பண்பு. மெய்ப்பொருள் காண்பது. "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் பொய்யாமொழித்தேவர் திருமொழியை அறிந்துள்ளோம். இவை இரண்டும் மக்கள் சமுதாயத்திற்கு இன்றியமையாதவை. என்பதை என்றே அறிந்தனர் நமது சமய அறவோர்கள். இப்பெற வருங்கொள்கைகளை உலகெங்கும் பரப்பினர் ஆங்காங்கு அறங்கூர் அவைகளை அமைத்தனர். அப்பேரவைகளே மூலசங்கம், முனிசங்கம், சேனசங்கம், வீரசங்கம், நந்திசங்கம், திராவிட சங்கம், அருங்கலாவன்யம், போன்ற பல சங்கங்களாகும். இச்சங்கங்கள் பாரதநாட்டுவரலாற்றில் சிறந்த இடம் பெற்றவை, இச்சங்கங்களின் வாயிலாகவே பற்பல மொழிகளிலும் கலைகளை வளர்த்தனர். இணையற்ற காவியங்களையும் அறநூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் இயற்றி உலக்கலைக்கு உதவினர்.

சமயப் போர்:

கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் பாரத நாடெங்கும் சமயப்போர் நிகழ்ந்தது. சமயப்போர் அரசியல் போராகமாறின. எண்ணற்ற மக்களுயிர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டன. கழுவேற்றம் போன்ற பலாத்கார நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் சகியாத ஜைன சமயம் வீழ்ச்சியடைந்தது. அகிம்ஸையின் வழிவளர்ந்த தன்றோ ஜைனசமயம்! அரசர்களில் பெரும்பாலோர் வருத்தத்துடன் அச்சமயத்தை கைவிட்டனர். பெரும்பாலான மக்கள் உயிருக்கஞ்சி மதமாற்றம் அடைந்தனர். எஞ்சியிருந்த ஜைனசமயத்திற்குப் பாதுகாப்பின்றி நாளுக்கு நாள் அதன் கலைகளும் கோயில்களும் பள்ளிகளும் அறிவு நிலையங்களும் மறைந்தும் மாறியும் சிதறுண்டுபோயின. சங்கங்களும் கலைந்தன. இந்நிலையிற் மொகலாயர் படையெடுப்பு ஏற்பட்டது. நாடுநிலை குலைந்தது. மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிவகைளைக்காண அலைந்தனர், எனவே உட்பகையாகிய சமயப் பூசல்களை மறந்தனர். நமது நாடு, நமது மக்கள், நமது கோயில்கள் என்ற உணர்ச்சி பிறந்தது. அனைவரும் சமயபேதமின்றி ஒன்றுபட்டனர். பொதுப்பகைவர் களினின்றும் தப்பி வாழ வழிதேடினர். ஆபத்துக்காலத்தில் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தனர். உயிர்களை அர்ப்பணம் செய்தும் ஒருவரை ஒருவர் காத்துக்கொண்டனர். குறைந்த சமூகத்தை உடைய நமது சமயமானது உட்பகையின் ஆபத்தினின்றும் தப்பியது. நமது நாட்டு மன்னர்களோ வலிவிழந்தனர், பலமுறை படையெடுப்பால் பலம் குறைந்தது. அம்மன்னர்கள் வாழ்வும் ஆட்சியும் ஆட்டங்கொடுத்தன. அவர்கள் நிலையில்லா வாழ்வில் ஊசனடிக் கொண்டிருந்தனர்.

எஞ்சியிருந்த ஜைன அரசர்கள் தங்கள் அரசியல் வாழ்வு மறைந்தாலும் தங்கள் மூதாதையர்கள் வளர்த்து வந்த மதஸ்தாபனங்களையும் கலாசாரங்களையும் காப்பதற்குரிய வழியைக்காண முயன்றனர். ஆங்காங்குள்ள அறிவு சான்ற முனிவர்களையும் சிற்றரசர்களையும் ஜமீன்தார்களையும் கலந்து ஒரு திட்டம் வகுத்தனர். பாரதநாடு பூராவிலுமுள்ள நமது சமய மக்களையும். கோயில்களையும் பொருப்புடன் காக்கும் நிலையங்களை ஏற்படுத்தினர். அந்நிலையங்களுக்கு மதத்தின் அடிப்படையில் ஆட்சிசெலுத்தும் உரிமையும் வழங்கினர். அவைகளுக்கு ஏராளமான நிலங்களையும் பொருள்களையும் தானமாக அளித்தனர். இவ்வாட்சி பீடங்களுக்கு சிம்மாதனங்கள் என்றும் அவைகளின் அதிபதிகளுக்கு சிம்மாதனாதீஸ்வரர்கள் என்றும் பட்டம் வழங்கினர்.

நான்கு அறநிலையங்கள்:

இவ்வாறு பாரதநாடெங்கும் தலைமை பீடங்களாக நான்கு அறநிலயங்கள் ஏற்பட்டன. டெல்லி, கோலாப்பூர் பெனுகொண்டை, ஜினகஞ்சி ஆகிய நான்கு நரங்களில் அமைக்கப்பெற்றன. இவ்வறநிலையங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு சிம்மாதனாதீஸ்வரர்களை ஏற்படுத்தினர். அதாவது அறநிலையப் பாதுகாப்புத் தலைவர்களாகப் பட்டம் சூட்டப்பெற்றனர் அதனால் பட்டாச்சாரியகளென்றும் மடாதிபதி சுவாமிகள் என்றும் சந்நிதானங்கள் என்றும் போற்றி அழைக்கப்பெற்றனர். இத்தலைவர்கள் நமது சமயதத்துவ சாஸ்திரங்களிலும் தவ ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவேண்டும். பாதர நாட்டிலுள்ள ஜைனப் பெருமக்கள் பலரும் இந்நான்கு பீடங்களின் ஆட்சிக்குட் பட்டவர்கள். அதாவது சீடர்கள் என்ற முறையில் ஐக்கியப்பட்டவர்கள். இப்பட்டாச்சாரியர்கள் ஆங்காங்குள்ள நமது சமயக்கோயில் களையும் காலைகளையும் பாதுகாப்பதுடன் அடிக்கடி நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் கல்வி அறிவையும் அறநெறிபோதனைகளையும் வளர்த்துவரும் பணியை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இம்மடங்களின் நிர்வாகச் செலவினங்களுக்கு மேல்வருவாயாக அந்தந்த மடத்தைச் சார்ந்த கிராம நகர ஜைனப் பெருமக்கள் வர்த்தனைகள் போன்ற பலவகைகளிலும் உதவி புரிந்து வந்தார்கள்.

இவ்வாறு அமைந்த நான்கு பீடங்களில் டில்லி கோலப்பூர், ஜினகஞ்சி ஆகிய மூன்றும் நிலைத்திருக்கின்றன. பெனுகொண்டாமடம் மறைந்துவிட்டது. பெனு கொண்டா என்பது ஆந்திர தேசத்தைச் சேர்ந்தது. அவ்வூரில் இன்னும் பாழடைந்த நமது சமயக்கோயில்களும் பல சின்னங்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன.

நமது ஜினகஞ்சி மடமும் இடம்விட்டு இடம் பெயர்ந்துவிட்டது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பாரத நாட்டிற்கு விஜயம் செய்த சீனயாத்ĄŁகர் யுவாங் ஷாங் காஞ்சிபுரம் விஜயம் செய்திருந்தார். அவர் புத்த மதத்தைச் சார்ந்தவர். எனினும் காஞ்சிபுரத்தில் 80 ஜைனக் கோயில் களிருந்தன. வென்பதை தமது நூலில் விரிவாக எழுதியிருக்கின்றார். கி.பி. 8-ம் நூற்றாண்டிற்குப்பின் ஏற்பட்ட சமயப்போரின் காரணமாகப் பல கோயில்கள் சிதறுண்டு போயினும் முகலாயர் காலம்வரை காஞ்சிபுரத்தில் நமதுசமயப் கோயில்கள் சிலவிருந்தன வென்பதை வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம். கைலாச நாதர் கோயில் காமாக்ஷ˘ அம்மன் கோயில் போன்றவைகள் மிகமிக பிற்காலத்தில்தான் சைவக் கோயில் களாகமாறின. கைலாசநாதர் கோயில் பகவான் விருஷபதேவர் கோயில் ஆகும். அக்கோயிலின் உட்புரத்தின் மூலையில் சிலஜைன விக்கிரகங்கள் இருந்தன. காமாக்ஷ˘அம்மன் கோயில் பல ஜைன விக்கிரகங்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன அதுமட்டுமல்ல. அங்கு கம்பீரமாகக் காட்சியளிக்கும் மானஸ்தம்பம் ஒன்றே நமது கொள்கையை வலியுறுத்தும் சான்றாகும். எனவே முகலாயர் காலத்தில் காஞ்சிபுரத்தில் சில கோயில்களும் ஜைனர்களும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அக்காஞ்சிமா நகா˘ல் ஜைனமடம் ஏற்பட்டது. ஜினகஞ்சிமடம் என்பதினாலேயே இவ்வுண்மை விளங்கும். அம்மடமும் நகரத்திற்குள்ளேயே இவ்வுண்மை விளங்கும். அம்மடமும் நகரத்திற்குள்ளேயே இருந்திருக்கவேண்டும் அதன் பின்னரே திருப்பருத்திக்குன்றம் சென்று மேல் சித்தாமூருக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் தமிழ்நாட்டிற்கென ஏற்பட்ட ஆதிமடம் ஜினகஞ்சிமடம். அˇது ஜைனப் பெருமக்கள் பெரும் பாலாகவதியும் கிராமங்களினிடையே உள்ள மேல்சித்தாமூரில் இன்று சிறப்புடன் விளங்குகிறது. எனவே அப்புனித சந்நிதானம் நம்மையும் நமது சமயத்தையும் நமது கலைச்செல்வங்களையும் அறநெறிகளையும் பாதுகாத்து வரும் பண்டையமடம் எனப் போற்றி வாழ்த்துவோம். இவையே மடங்கள் தோன்றிய வரலாறாகும்.

இந்நான்கு தலைமைப் பீடங்களின் கிளைகளாகப் பிற்காலத்தில் பல சிறு மடங்களும் ஆங்காங்கு தோன்றின. அவைகளில் சிலவற்றை இன்றும் மைசூர், தென்கன்னட ஜில்லாக்களிலும் காண்கின்றோம். இம்மடங்களின் அதிபதிகளை அந்தந்த மடாதிபதிகள் தங்கள் தங்கள் அந்திய காலத்தில் மடாதிபதிகளுக்குரிய மாண்புறு குணங்கள். அறிவு, கலை, தவவொழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பட்டம் சூட்ட உரிமை பெற்றிருந்தார்கள். எதிர்பாராத வகையில் பட்டம் சூட்டாது சொர்க்கப் பிராப்தி அடைந்துவிட்டால் இந்நான்கு பீடங்களின் தலைவர்களில் ஒருவர் அந்தப்பகுதிகளில் வாழும் ஜைனப் பெருமக்களின் ஆலோசனையைக் கலந்து தக்கவருக்கு பட்டம் சூட்டும் வழக்கம் வழி வழி வந்துள்ளது. இந்நான்கு பீடங்கள் மட்டுமே அம்முறையை மேற்கொண்டுள்ளன. அதற்குக் காரணம் சம நிலையிலுள்ள அதிபதிகளால் பட்டம் சூட்ட வேண்டுமென்பதேயாகும். இத்தகு சிறப்புகள் அமையப்பெற்ற அறநிலையங்களின் காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டாயிருக்கலாம். அதாவது ஐநூறு ஆண்டுகட்கு உட்பட்டதா யிருக்கலாம். ஏனெனில் நமது சமய அந்தணர்கள் (அர்ச்சகர்கள்) கோயில்களில் செய்யும் பூஜா விதிகளின் தோத்திரங்களில்.

"டில்லி கொல்லாபுர ஜினகஞ்சி பெனுகொண்டை
சதுர்த்த சித்த சித்தமாதனாதீஸ்வரானும்"

என்னும் சுலோகத்தில் டில்லி என்ற பெயர் காணப்படுகின்றது. டில்லி என்னும் பெயர் மொகலாயர் ஆட்சிக்கு வந்த பின்னரே ஏற்பட்டது. அதற்கு முன் அஸ்தினாபுரம் என வழங்கி வந்தது. எனவே மொகலாயர் ஆட்சிகாலமே மடங்கள் ஏற்பட்ட காலம் என நிச்சயிக்கலாம்.

கோலப்பூர் ஜைன மடம்:

இனி நாம் எடுத்துக்கொண்ட கோலப்பூர் மடத்திற்குச் செல்வோம். கோலாப்பூர் என்பது மகாராஷ்டிரத்தைச் சார்ந்தது இˇது ஒரு இந்து சமஸ்தானத்தின் தலைநகரமாகும். கோலாப்பூர் என வழங்குவதைத்தான் நாம் கொல்லாபுர மென அழைக்கின்றோம். இம்மகாராஷ்டிரம் பூராவும் பண்டைய காலத்தில் ஜைன சமயம் பெருகியிருந்ததன் காரணமாகவே இந்நகா˘ல் மடம் ஏற்பட்டது. இன்றைய நிலையில் ஜைன சமயத்தவர் சிறுபான்மையராயிருப்பினும் நல்லசெல்வாக்கப்பெற்று விளங்குகிறார்கள். கோலாப்பூர் சமஸ்தானத்தைச்சார்ந்த பலகிராமங்களில் ஜைனப்பெருமக்கள் வாழ்கின்றார்கள். கோலாப்பூர் ஜைனமடம் இந்நகரத்தின் சுக்கரவாரப்பேட்டையில் கம்பீரமாக அமைந்துள்ளது. இதன் வாயில் கருங்கற்களால் அமைந்த வளைவுடன் விளங்குகிறது. அரசர்களின் அரண்மனை வாயிற்போலவே கட்டப்பட்டுள்ளது. நமது மடத்தைச்சுற்றிலும், மடத்தைச்சார்ந்த வீடுகள் பல இருக்கின்றன. அவைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மடத்தின் கட்டடம் விசாலமானது இரண்டு மாடிகளைக்கொண்டது. மடத்தின் உச்சியில் சிறு சிறு கோபுரங்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் தலைசிறந்து விளங்கும் இம்மடத்திற்கு மூன்று பட்டங்களாக நந்தமிழகச் சான்றோர்களே மடாதிபதி சுவாமிகளாகப் பட்டம்பெற்று வருகிறார்கள். இம்மூவரும் வந்தவாசி தாலுக்காவைச் சேர்ந்த முதலூர் கிராமப் பொ˘யோர்களே யாவர். அவர்கள் முறையே உயர்திரு. சமுத்திரவிஜய நயினார் ஆகியவர்களாவர் என்பதைத் தமிழகம் நன்கறியும். அப்பாசாமி நயினார் அவர்களுக்கும், ஸ்ரீமதி இரத்தினம்மாள் அவர்களுக்கு தவப்புதல்வராய் அவதா˘த்தவர்.

உயர்திரு விருஷபநாதயினார் எனும் திருநாமத்துடன் வளர்ந்தவர். கல்வி கற்கவேண்டி இளம் வயதிலேயே கோலாப்பூர் மடத்திற்குச் சென்றார். மடாதிபதி சுவாமிகளும் மாணவராய் ஏற்றுக்கொண்டார். சீடருக்கு வேண்டிய அடக்கம், அன்பு பணிவுயாவும் இவா˘டம் இயற்கையாகவே அமைந்திருந்தன. கல்வி, அறிவிலும் சிறந்து விளங்கினார். இவ்வாறு இருபது வயது வரை மடாதிபதி சுவாமிகளின் நம்பிக்கையுள்ள மாணவராகவாழ்ந்துவந்தார். இச்சமயத்தில் மடாதிபதி சுவாமிகளுக்கு உடல்நலம் குன்றியது. நாளுக்கு நாள் சுவாமிகளின் நிலை கவலைக்கிட மாகியிருந்தது. கோலாப்பூரிலுள்ள ஜைனப் பெருமக்களும் சுவாமிகளை கவலையுடன் பார்த்து வந்தார்கள். சுவாமிகள் தன்னிலையை உணர்ந்து கொண்டார். கோலாப்பூர் பிரமுகர்களை வரவழைத்து ரகசியமாகப்பேசி தாசில்தாரரை வரவழைக்குமாறு பணித்தார்கள். தாசில்தாரும் வந்து சேர்ந்தார். சுவாமிகள் தாசில்ததாரை வரவேற்றுக் தமக்குப் பின்னர் இம்மடத்திற்குத் தகுதிவாய்ந்தவரும், எனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் மடத்தின் நிர்வாகத் துறையில் சிறிது அனுபவமும் வாய்ந்த விருஷபநாத நயினாரை மடாதிபதி சுவாமிகளாக நியமிக்கின்றேன். இவருக்கே பட்டம் சூட்டுங்கள் என உணர்ச்சியுடனும், உறுதியுடனும் கூறினார். தாசில்தாரரும், பிரமுகர்களும் சுவாமிகளின் வாக்குமூலத்தைப்பதிவுசெய்து கொண்டனர்.

எதிர்பாராத இச்சம்பவத்தைக்கண்ட இருபது வயதுடைய நமது விருஷபநாத நயினார் திடுக்கிட்டுப்போனார். உள்ளத்தில் நடுக்கம் கொண்டார். சுவாமிகளின் அந்தியகால நிலையைக்கண்டு கண்கலங்கினார். தாசில்தாரரும், ஏனையோரும் சுவாமிகளை நமஸ்கா˘த்துவிட்டு வெளியே வந்தனர். வருங்கால மடாதிபதியாகிய நமது இளைஞர் விருஷபநாத நயினாரும் அவர்களைத் தொடர்ந்தார். கோலாப்பூர் பிரமுகர்களை அணுகி "ஐயா, என்னால் இம்மடத்தை நிர்வகிக்க இயலாத யானோ சிறுவன் தயவு செய்து வேறொருவரைப் பாருங்கள். எனது உள்ளக்கிடக்கையை சுவாமிகளிடம் சொல்லி என்னை விடுதலைசெய்யுங்கள். யானை சுமக்கும் பாரத்தை கன்றின் மேல் ஏற்றுகின்றீர்கள். தயவுசெய்து புனராயோசனைசெய்யுங்கள்" என செஞ்சிக்கேட்டார். இளைஞனின் களங்கமற்ற உள்ளத்தைக்கண்ட பிரமுகர்கள் வியப்படைந்தார்கள். பெறர்க்கா˘ய பெரும்பதவியை வெறுத்துப் பேசும் ஸ்ரீ விருஷபநாத நயினாரைக் கையைப்பற்றிக்கொண்டு 'தம்பி' நீ அஞ்சாதே நாங்கள் இருக்கின்றோம் சுவாமிகளிடம் பயின்ற சீடர்களில் உம்மைவ்˘ட அறிவும், தகுதியும் உடையவர்களைக் காணோமே! நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே பேசி முடித்த முடிவாகும். மறுக்க வேண்டாம் எங்களுடன் வா" என அழைத்துக்கொண்டு போய் தங்கள் பாதுகாப்பிலேயே வைத்துக்கொண்டார்கள். புண்ணியம் உதயமாகிவிட்டது ஆட்சிபீடம் அழைக்கிறது. எங்கும் விருஷபநாதர் பேச்சாகவே இருந்தது. அன்றிரவே மடாதிபதி சுவாமிகள் சுவர்க்கப் பிராப்தி அடைந்தார்கள். கிரியையாவும் நடந்தேறியது.

பட்டம் சூட்டு விழா:

1916-ஆம் ஆண்டு ஜனவா˘ மாதம் இருபதாம் தேதி கோலாப்பூர் மடத்தில் பட்டம் சூட்டு விழா ஆரம்பமாயிற்று. ஏராளமான மக்கள் பட்டம் சூட்டு விழாவில் கலந்து கொண்டனர். கோலாப்பூர் மடத்திற்கு ஸ்ரீ விருஷபநாத நயினார் அவர்களை மடாதிபதி சுவாமிகளாக நியமித்து வெகு விமா˘சையுடன் பட்டம் சூட்டினார்கள். அன்று முதல் கோலாப்பூர் லக்ஷ˘மிசேன பட்டாச்சாரியவா˘ய சுவாமிகளாகப் பட்டம் பெற்றார் நமது தமிழக அறிஞர்பெருமான். நான்கு குதிரைகள் பூட்டிய அழகிய ரதத்திலே அமர்த்திப் பல வாத்தியங்கள் முழங்க நகர்வலம் செய்து சிறப்பித்தனர்.

தத்துவப் பயிற்சி:

நமது கோலாப்பூர் புதிய சந்நிதானம் அவர்கள் இருபதாவது வயதிலேயே பட்டம் பெற்றமையால் சுவாமிகளுக்குத் தத்துவப் பயிற்சியளிக்க வடமொழியிலும் கன்னட மொழியிலும் புலமை வாய்ந்த ஆசியர் ஒருவரை அமர்த்தினார்கள். சுவாமிகள் ஏற்கெனவே கூரிய அறிவுடையவராய் விளங்கியமையால் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜைன சமய தத்துவ சாஸ்திரங்களில் இணையற்ற புலமைப் பெற்றார்கள். அறிவுச்சுடராய் விளங்கினார். சுவாமிகளின் ஆசிரியரும் வியப்படைந்தார் ஆண்டில் இளைஞராயினரும் அறிவில் முதியரெனப் புகழ்ந்தார். தமிழ் நாட்டின் தவமணி மல்லவா! குந்த குந்தாச்சாரியரும், சமந்த பத்திரச்சாரியரும் அகளங்கத்தேவரும், திருத்தக்க தேவரும், தோலாமொழி தேவரும் அவதா˘த்தத் தமிழ் நாட்டின் பேரறிவு எங்கே போகும் எனப் பலரும் போற்றிப் புகழ்ந்தார்கள்.

இவ்வாறே துறவற நெறியிலும், தவவொழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். கோலாப்பூர் ஜைன பெருமக்களை யன்றி, ஜைனரல்லாதாரும் சுவாமிகளின் பேரறிவையும் சொற்பொழிவையுங் கண்டுங் கேட்கும் மகிழ்ந்தனர் இதனால் இவர் தம் புகழும், சிறப்பும் நாளுக்கு நாள் பெருகி இன்று இணையற்ற தலைவராகவும் குருவாகவும் அறவோராகவும் காட்சியளிக்கின்றார்கள் நமது மதிப்புக்கும் பக்திக்கும் உரிய கோலாப்பூர் ஸ்ரீ லக்ஷ˘மி சேன பட்டராக பட்டாச்சார்ய சுவாமிகள்!
 

1   2   3


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com