 |
பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு
INTRODUCTION
It is a historical fact acknowledged by many an eminent scholar
like Rc. Dutt, Tilak and Tagore that the sixth Century before
Christ was an era of fanaticism and dogamatism. the masses were
misguided by the selfish leaders. Their self-centred views induced
them toi perpetrate all sorts of atrocities in the name of
religion. Unholy ceremonialism became very predominant. Benevolent
path of purification and perfection was blocked by blind faith.
Superiority complex developed the ostentatious attitude in the
people of power and property and inhuman behaviour was done
towards the poverty stricken people and they were looked upon with
an eye of hatred and discard, and such treatment made great
unhealthy distinctions between a man and a man. In such
circumstances where was the chance of compassion and mercy for the
animal life? Millions of innocent creatures were brutally
massacared and tortured to quench the thirst of ambitious and
passionate people. The position of the whole human culture became
very topsyturvy and whole social order was disfigured. the
enlightenment of truth was very essential and inevitable.
According to the mighty law of nature the most meritorious master
was earnestly anticipated for the meta morphosis and overhauling
of the whole mechanism of the human cult. It was none else but the
Blessed Lord Mahavira who was born in the most distinguished
dynasty of 'Ikshu Vansa' as a prince; who came forward to dispel
the darkness prevailing in those days by making himself the
embodiment of Ahimsa not only by preach but also by practice.
Inspite of all Princely pleasures at his disposal, he renounced
his royal paraphernalia and went in the dense forest full of
ferocious creatures, lived a renunciated life of an ascetic order
in search of truth, and by the moral force of mortification and
meditation, he attained the infinitude of knowledge and beatitude
of eternal bliss in order to establish peace and harmony by his
tremendous of endeavours and efforts. he built a bridge of
brotherhood between the universal beings of various kingdoms.
A new-way of approach and apprehension called 'Anekantvad' or 'Shyadvada'
was introduced in the field of India philosophical thoughts, It
was appreciated by one and all and various thinkers and seers
began to extoll this new system of aprehension namely 'Shyadvad'
as a Unifying Force and Compromising System of all the differences
borne out of ignorance. The peace which was shattered to pieces by
wrong notions was restored and consolidated and there was a sudden
amelioration of our holy culture. This enterprise owes only the
Lord Mahavira. Hence his name became very popular in the
philosophical world and people began to call him founder of
Jainism:- the Science of conquering oneself. But in real sense he
was the last 'Thirthankara' of the twenty four. Jainism as a
matter of fact was not founded by him but it was only propogated
and propounded by him. The founder of Jainism was Lord Rishabha in
this cycle of period who existed in the hoary past before
innumerable years. He is regarded as an incarnation of "Mahavishnu"
according to srimad Bhagvata and first God "Adi Bhagavan"
according to Thirukkural. Many references are apparent in
Rigveda-Shivpuran Nagapuran and Brahmandpuran etc. Hence in real
sense Lord Rishabha
was the Originator of Human Culture and Organiser of Human
Society.
In this treatise which deals with the biographical sketch of Lord
Mahavira the learned writer Mr. Jeevabhandu Sripal has explained
everything elaborately about the origin of Jaina philosophy, so
that the misapprehension which is prevalent regarding Lord
Mahavira as 'Founder of Jainism' and constantly referred to as
such in many Text Books of History and Social Studies may be
rectified and set right. This wrong notion is due entirely to the
superficial study and hurried judgement of some foreign Scholars.
Hence perusal oif this booklet will be of great value and interest
to one and all.
It is indeed a great pleasure that this Treatise has been
published by Sri Jinduttsuri Jain Mandal during Bhagwan
Mahaveera's Twentyfifth Centenary Celebrations. I hope that many
more useful volumes will be published during this celebration.
Dharmanuragi "RISHABH"
பகவான்
மகாவீர ஜெயந்தி
சைத்ர சுக்ல திரயோதசி
4-4-1974
நமது தமிழ் மறையாகிய திருக்குறளில் கடவுள் வாழ்த்தின் முதற்குறள் ஆதி
பகவானைப் பற்றிக் கூறுகின்றது. மற்ற ஒன்பது குறள்களிலும் ஆதிபகவன்
என்பதினாலேயே அவருக்குப் பின்னர் பலர் அவ்வாறே விளங்கினர் என்பது
பெறப்படுகின்றது. ஆகவே அவர் முதல்வராகின்றார். ஜைனசமய (சமணம்)
நூல்களில் ஆதிபகவானைப் பற்றியும் அவருக்குப் பின் தோன்றிய
இருபத்துமூன்று மகான்களைப்பற்றியும் அரிய வரலாறும் நமக்குக்
கிடைக்கின்றன. அது போன்று வைதீக சம்பந்தமான வேதங்கள், பாகவதம்,
வராகபுராணம் அக்னி புராணம் முதலிய நூல்களில் ஆதிபகவானைப் பற்றி நன்கு
விளக்கப்பட்டிருக்கின்றன. ஆதிபகவன் எனப் பேசப்படுபவர் நம்மைப் போன்று
தாய்தந்தையர் வயிற்றில் பிறந்தவரே. மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்; அரசர்
குலத்தலைவர்; அகர முதல எழுத்துக்களையும் ஒன்று முதலாய எண்களையும்
தோற்றுவித்த முதல் ஆசிரியர்; வாள் வரைவு உழவு, வாணிபம், கல்வி,
சிற்பம், ஆகிய ஆறு தொழில்களையும் கற்பித்த சமுதாய அமைப்பாளர்; இல்லறம்,
துறவறம் ஆகிய இரண்டு அறங்களையும் வகுத்த அறவாழி அந்தனர்; அஹிம்ஸா
தருமத்தின் தந்தை; கண்கள் எவ்வாறு புறப்பொருள்களைத் தெளிவாக
அறிகின்றனவோ அவ்வாறே நூற்பொருள்களின் உண்மைகளை நன்கு ஆராய்ந்தே
ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னும் பகுத்தறிவு இயக்கத்தின் கர்த்தா;
தேவைக்குமேலான பொருளைப் பதுக்கி வைத்தல் ஐம்பெரும் பாவங்களில் ஓன்றென
அறம்வகுத்த பொதுவுடைமைவாதி; செய்தொழில் வேற்றுமையன்றிப் பிறப்பினால்
மக்கள் அனைவரும் ஒன்றென உரைத்த உத்தமர் இவருடைய இயற்பெயர் விருஷபதேவர்:
இவரையே தமிழ் நூல்களில் ஆதிபகவன், ஆதிநாதன் ஆதிமூர்த்தி, ஆதிதேவர்,
ஆதிபிரம்மா என்றெல்லாம் புகழப்படுகின்றன.
மகாவீரர்
இத்தகைய சிறப்பு வாய்ந்த அறிவனின் அறிவியக்கக் கொள்கையை
ஆதிபகவனுக்குப் பின்னர் இருபத்துமூவர் பரப்பினர் என்பதை முன்னரே
கூறியுள்ளோம். ஆதிபகவனுடன் இருபத்து நால்வராகின்றனர். இவர்களில்
இருபத்து நான்காமவர் மகாவீரவர்த்தமானராகும். இவரை மகாவீர பகவான்
என்றும் மகாவீரர் என்றும் அழைப்பதுண்டு. இவர் புத்தருக்கு சில
ஆண்டுகள் முற்பட்டவர். இவர் கி.மு. 599-ல் பீஹாரைச் சேர்ந்த
குண்டலாபுரத்தில் பிறந்தார். இவரும் அரசமரபினரே.
இந்தரபுரத்தை (குண்டலா புரம்) தலை நகரமாகக் கொண்டு விதேக நாட்டை ஆண்டு
வந்த சித்தார்த்த மகாராஜருக்கும்
பிரியகாரிணி அல்லது
திரிசிலாதேவி
என்னும் மகாராணிக்கும் சித்திரைத் திங்கள் பதிமூன்றாம் நாள்
வளர்பிறையில் அருமை மகனாகப் பிறந்தார். இத்திருநாளைத்தான் இன்று
மகாவீர ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்.
அம் மகவு கருவிலேயே திருவுடைத்ததாகத் தோன்றி மதிஞானம், சுருதஞானம்,
மனப்பர்யைஞானம் ஆகிய மூவகை அறிவினையும், விந்தை பொதிந்த தன்மைகள்
பத்தினையும் பெற்று விளங்கிற்று. அத்தகைய மகானின் பிறந்த நாள்
விழாவினைச் செளதர்மேந்திரன் முதலான பல தேவர்கள் வந்து சிறப்பாகக்
கொண்டாடினர். அவருக்கு ஸ்ரீவர்த்தமானன் என்றும், வீரசுவாமி என்றும்,
திருநாமங்கள் சூட்டினர் இம்மாபெரும் விழா இருபத்து மூன்றாம்
தீர்த்தங்கரர் ஸ்ரீபார் சுவநாதர் நிர்வாண நிலை எய்திய இருநூற்றைம்பது
ஆண்டுகட்குப் பின்னர் நிகழ்ந்தது. அத்தகைய தெய்வத் தன்மையோடு பிறந்த
அவரைத் தேவர் பலர் தொண்டாற்ற அவர் நாளொரு மேனியும், பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்து வந்தார். இளம் வயது முதலே அவர் அன்பும் உள்ளமும்,
பண்பு நெறியும் கொண்டு விளங்கினார்.
வாலிபப் பருவத்தில் அவர் தம் நண்பர் பலருடன் பூங்காவிற்கு விளையாடச்
செல்வது வழக்கம். அவ்வாறு அரசிளஞ்சிறுவரோடு பூங்காவில் விளையாடுகையில்
ஒருநாள், தேவமன்னனாகிய செளதர்மேந்திரன் நாளோலகத்தில் அமைச்சருடன்
வீற்றிருந்து, உலகில் ஒப்பிலா வன்மையும், தலைமையும் பூண்டவர்கள் யார்
என்பதைப்பற்றி உரையாடல் நிகழ்த்தினன். அப்போது அத்தகைய ஒப்பிலா வீரம்
வாய்ந்தவர் வீர சுவாமி என்பவர் தாம் என்ற முடிவிற்குவந்தனர். இதனைப்
பா¢சோதிக்க வேண்டிச் சங்கமன் என்னும் தேவன் பூலோகத்திற்கு வந்தான்.
அவன் பொ¢யதொரு நாகத்தின் உருவமேற்றுப் பிள்ளைகள்
விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு மரத்தில் சுற்றிக்கொண்டான்.
தெய்வத் தன்மையும் அன்பு உள்ளமும் வாய்ந்த அவ்வாலிபர் அப் பாம்பு
சுற்றிக்கிடந்த அம்மரத்தில் அச்சமேதுமின்றி ஏறிச் சென்று, அப்பாம்பு
படம் விரித்திருந்த கிளை வரை சென்று ஒரு சிறிதும் நடுக்கமின்றி
நர்த்தனம் புரியலானார். சோதிக்க வந்த தேவன் அவரது செயலைக்கண்ட ஆச்சா¢ய
முற்றான். அவன் தன்னுடைய பண்டைய வடிவமேற்று அவரை வணங்கி "பகவானே நீரே
உண்மையில் மகாவீரர் ஆவீர்" என்று புகழ்ந்தான். இது முதற்கொண்டு
மகாவீரர் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. இவ்வாறு அம் மகான்
முப்பதாண்டுகள் தமது வாலிபப் பருவத்தைக் கழித்தார். அறநெறியிலொழுகி
அரசோச்சிவந்தார்.
மகாவீரர் ஆட்சியில் மக்கள் வாழ்க்கை நலம் உயர்வடைந்து விளங்கிற்று
ஆனால் மக்களின் வாழ்க்கைப் பண்பும் அறநெறியும் குன்றியிருப்பதைக்
கண்டார். அவர் நிலைக்கேற்ப மக்கள் ஆன்மீகத்துறையில் அக்கறை
கொள்ளவில்லை. அறிவுத்துறையிலும் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தனர்.
சாதிச் சண்டையும் சமயப் போரும் தலைவிரித்தாடின. அறிவுக்குத்
தடையாயுள்ள மூட நம்பிக்கைகள் எங்கும் காணப்பட்டன. இவைகளைச் சட்டத்தின்
வாயிலாகத் திருத்தவியலாது என்பதை அறிந்தார். எனவே அரச வாழ்வில்
வெறுப்புப் கொண்டார். மக்கள் நலத்தில் உள்ளம் சென்றது. அரசாட்சியை
துறக்கத் துணிந்தார். செல்வத்தையெல்லாம் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்.
நாட்டாட்சியைத் துறந்து துறவரசானார்.
போர் நிறுத்தச் சேவை:
கி.மு. 6-ம் நூற்றாண்டில் வத்ச நாட்டை சதானிகன் என்னும் பேரரசன் ஆண்டு
வந்தான். அவன் சேடகமன்னனின் மகளான மிருகாவதி என்னும் பேரழகியை மணம்
புரிந்து கொண்டான். இவர்கள் இருவருக்கும் உதயணன் என்னும் மகன் பிறந்து
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்து சுமார் 7 வயது
நிரம்பப்பெற்றான்.
சதானிகமன்னன் நுண்கலைகளில் மிக்க விருப்பமுடையவன். அவன் ஒரு ஓவியனை
அமர்த்தி அரண்மனையில் பல வரலாற்று ஓவியங்களைத் தீட்டி அலங்கா¢த்து
வரச்செய்தான். அந்த ஓவியன் அரசியல் இரகசியங்களை மாற்றரசனிடம்
கூறிவருவதாக அறிந்து அவனை வேலையினின்றும் நீக்கிவிட்டார் மன்னன்.
இதனால் சினமுற்ற அவ் ஓவியன் அவந்தி நாட்டை ஆண்டுவந்த சந்தப்பிரத்யோதன
என்னும் அரசரை அணுகினான். அவ்வரசன் இயல்பை அறிந்த அந்த ஓவியன்
மிருகாவதியின் உருவத்தைத் தீட்டி அரசனிடம் அளித்தான். அப்பேரழகியின்
ஓவியத்தைக் கண்ணுற்ற சந்தப்பிரத்யோதன் அவளை எவ்வாறேனும் தனக்குரியவளாக
அடையவேண்டுமென்ற தீய எண்ணங்கொண்டான். மதியிழந்த அம்மன்னன்
சதானிகனுக்குத் தனது தூதுவன் வாயிலாக ஓலை ஒன்று அனுப்பினான்.
அவ்வோலையில் தன்னிடம் உமது அரசியாகிய மிருகாவதியை ஒப்படைக்க வேண்டும்?
இல்லையேல் போருக்குத் தயாராக வேண்டும் எனக்குறித்திருந்தான்.
அவ்வோலையின் வாசகத்தைக் கண்டதும் சதானிகன் சினம் கொண்டான். இத்தகைய
இழிசெயலை எந்த க்ஷத்திரியனும் பொறுத்துக்கொள்ள மாட்டானல்லவா? எனவே
சதானிகன் வந்த தூதுவனை நோக்கி உமது அரசனைப் போர்க்களத்தில்
சந்திப்பதாகக் கூறும் எனக் கோபக்குறியோடு கூறி அனுப்பினாள். உடனே இரு
மன்னர்களுக்கும் போர் மூண்டது. போ¢ல் சந்தப்பிரத்யோதன் தோல்வியுற்றுப்
பின்வாங்கி நாடு திரும்பினான் இது நிகழ்ந்த சில மாதங்களில் சதானிகன்
காலராநோயால் இறந்துவிட்டான். உதயணன் சிறுவனாக இருந்தமையால் ஆட்சி
பொறுப்பை மிருகவாதி ஏற்று அரசோச்சி வந்தாள். இச் செய்தியை அறிந்த
சந்தரப்பிரத்யோதன் மீண்டும் வத்ச நாட்டின்போ¢ல் போருக்கெழுந்தான்.
அரசி மிருகாவதி ஆட்சியை விட்டு விட்டுத் தன்னுடன் வாழ வரவேண்டுமெனச்
செய்தி அனுப்பினான். அரசி மிருகாவதியோ அழகி மட்டுமல்ல. அறிவுடை
அரசியாகவும் ;விளங்குபவளாகையால் இக்கொடிய மன்னனைச் சூழ்ச்சியால்
வெல்ல வேண்டுமெனக் கருதி தனது குமாரன் உதயணன் இளையவனாக இருப்பதால்
அவனுக்குப் பட்டம் சூட்டி இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அளித்துவிடடு
உம்முடன் வாழ்வது உறுதி, ஆகையால் இன்னும் 8-ஆண்டுகள் பொறுத்துக்
கொண்டிருக்க வேண்டுகிறேன் என ஓலை எழுதி அனுப்பினாள்.
சந்தப்பிரத்யோதனன் ஓலையைக் கண்டு மகிழ்ச்சியுற்றுப் படைகளை தனது
நாட்டிற்குத் திரும்புமாறு கட்டளையிட்டு நாடு சேர்ந்தான்.
இவ்வாறு ஏழாண்டுகள் கடந்தன. மிருகாவதியோ இதற்குள் தனது நாட்டின்
பாதுகாப்பிற்காகப் படை பலத்தைப் பெருக்கியும்; தனது தலைநகரான
கெளசாம்பி நகரத்திற்கு வலிமை பொருந்திய அரணையும் அமைத்து
அரசோச்சிவந்தாள். இச்செய்தியை அறிந்த சந்தப்பிரத்யோதன் அவசரமாகப்
படைதிரட்டி மீண்டும் வத்ச நாட்டின்போ¢ல் படையெடுத்து கெளசாம்பி நகரை
முற்றுகைவிட்டான். போர் மூண்டது. இரு தரப்யிலும் ஏராளமான படைகள்
நாசமாகிக்கொண்டு வந்தன. அது சமயம் மகாவீரர் அந்நாடுகளின் பகுதிகளில்
அறவுரை நிகழ்த்தி வந்தார். இக்கோர யுத்தச் செய்தியைக் கேட்டு நேரே
சந்தப்பிரத்யோ தனைச் சந்தித்துப் பல அறவுரைகளோடு போரின் உள்நோக்கம்
பாரத நாட்டின் பண்பாட்டிற்கும் அரசர் குலத்திற்கும் இழுக்கானது
என்பதையும் விளக்கிப் போரை நிறுத்துமாறு வற்புறத்தினார். மகாவீரரின்
அறவுரைகள் சந்தப்பிரச்சோதன் மனத்தை ஆட்கொண்டது. போர் நிறுத்தத்திற்கு
உடன்பட்டான். உடனே மகாவீரர் அரசி மிருகாவதியிடம் சென்று போரை
நிறுத்துமாறும் பகையரசன் பணிந்த செய்தியையும் எடுத்துரைத்தார்.
இருதரப்பிலும் போர் நிறுத்தப் பிரகடனம் செய்யப்பட்டது. அதே சமயத்தில்
உதயணணுக்கும் 16-வயது கடந்துவிட்டது. எனவே மகாவீரர் இரண்டு நாட்களில்
முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து சந்தப்பிரச்சோதனைக் கொண்டே பல
மன்னர்கள் சூழ கெளசாம்பி நகரத்தில் உதயணணுக்கு முடி சூட்டச் செய்தார்.
எல்லோரும் மகாவீரர் சமாதான வெற்றியையும் அவர் அறவுரைகளால்
மகிழ்ச்சியையும் அடைந்து மகாவீரரைப் போற்றி உதயணனை வாழ்த்தினார்கள்.