முகப்பு வாயில்

 


முன்னுரை:-

சென்னை சட்ட சபையின் 1965-ம் ஆண்டு ஜனவாத் திங்கள் 20-ம் நாள் கூட்டத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்கப்பட்டன.

"சில கோயில்களுக்கு மானியம் வழங்கியது போன்று, கிருஸ்துவர், இஸ்லாமியர் ஸ்தாபனங்கள் நடத்தும் கோயில்களுக்கும் வழங்கப்படுமா? என்றும், ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் சிலைகள், சிற்பங்கள் ஆகியவற்றை ஒன்று திரட்டி தஞ்சையில் உள்ளது போன்று வேறிடங்களில் அமைக்க உத்தேசம் உண்டா?" என்றும் இரு அங்கத்தினர்களால் கேட்கப்பட்டன. இக் கேள்விகளுக்கு நமது மதிப்புக்குரிய முதல் அமைச்சர் உயர்திரு. M. பக்தவத்சலம் அவர்கள் விடை யளிக்கையில்.

"பழங்காலக் கல்வெட்டுச் செய்திகள், நீண்ட கால வரலாற்றுச் சிறப்புள்ளதாக இருந்தால், மானியம் வழங்குகின்றோம்" என விடை யளித்தார்கள்.

மேலே கூறிய கேள்விகளையும், விடைகளையும் பத்திரிக்கைகளில் படித்தும் யான் வியப்புற்றேன். கேள்வி கேட்ட அங்கத்தினர்கள் இஸ்லாமியர், கிருஸ்துவர் சமயக் கோயில்களைப் பற்றி அக்கறை கொண்டனரேயன்றி, மிகமிகப் பழங்காலத்தொட்டு தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும், நிகண்டுகளையும், நீதி நூல்களையும் படைத்து அளித்தருளிய ஜைன சமயக் கோயில்கள், மலைக் குகைகள் பற்றி ஒரு நிலையில் தமிழகம் ஜைன சமயத்தை மறந்திருப்பதை எண்ணி தன் கையே தனக்குதவி என்ற ஆன்றோர் மொழியின் வழிநின்று 7-2-1965 ல் நமது மதிப்புக்கும் பெருமைக்கும் உரிய முதல் அமைச்சர் அவர்களுக்கு ஜைன சமயத்தவான் வேண்டுகோள் அறிக்கை அச்சிட்டு தமிழ் நாடெங்குமுள்ள ஜைனப் பெருமக்களின் கையொப்பங்களுடன் அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தேன்.

அவ் அறிக்கையில் விசயமங்கலம், சீனபுரம், திங்களுர், வெள்ளோடு, அருங்குளம், கரந்தை, திறக்கோயில், திருப்பாதிக்குன்றம், திருமலை பூண்டி, கோவிலாம்பூண்டி, ஆர்ப்பாகை, அனுமந்தக்குடி, போன்ற பழம்பெருங் கோயில்களின் வரலாற்றுச் சிறப்புக்கள் கொண்ட குறிப்புக்களுடன் அவைகளின் சீர்குலைந்த நிலைகளைப்பற்றி விளக்கியும், தமிழ் நாட்டில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் ஜைன சிலைகள், சிற்பங்கள் ஆகியவற்றைத் திரட்டி ஒரு ஜைனப் பொருட்காட்சி அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இவ் வேண்டுகோள் அறிக்கையின் நகல்களை சட்டசபை அங்கத்தினர் பலருக்கும் அனுப்பிவைத்தேன். பின்னர் தினர் பலருக்கும் அனுப்பிவைத்தேன். பின்னர் மார்ச்சு மாதம் 20-ம் தேதி, முதல் அமைச்சர் அவர்களின் அனுமதியின் போல் என்னுடன் திரு. G. சாமிநாத்ஜெயின், திரு. S. கெஜபதிஜெயின், திரு. பரதசக்ரவர்த்தி, திரு. மல்லநாத்ஜெயின் சாஸ் திரி" ஆகியவர்களை அழைத்துச் சென்று நமது பெருமைக்குரிய முதல் அமைச்சர் திரு. M.பக்தவச்சலம் அவர்களைப் பேட்டி கண்டு அறிக்கையில் குறித்துள்ள கோயில்களின் வரலாறுகளையும் அவைகளைப் பழுது பார்த்து மானியம் வழங்கவேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறினேன். அமைச்சர், பெருந்தகை அவர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தற்சமயம் இலக்கியச் சிற்பமைந்த விசயமங்கலத் திருப்பதியைக் கவனித்து ஆவன செய்வதாகவும், சென்னை பொருட்காட்சியிலேயே ஜைனப் பொருட்காட்சி அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி கூறியதோடு விசய மங்கலத்தைப் பற்றிய வரலாற்றை எழுதிக் தருமாறும் பணித்தார்கள். யாங்கள் அன்புக்குரிய அமைச்சர் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும் செலுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றோம். அமைச்சர் பெருந்தகைப் பணித்தவாறு விசயமங்கலத்தின் வரலாற்றை உருவாக்கி ஒரு வாரத்திற்குள் அமைச்சர் அவர்களிடம் அளித்தேன். இவ் வரலாற்றை எனது அன்புக்குரிய நண்பர் திரு. எஸ். ஆர். சுப்பிரமணியம் அவர்களிடம் அளித்து அவர் நடத்திவரும் "காந்தி வழி" என்ற இதழில் வெளியிடுமாறு வேண்டிக்கொண்டேன். இவ்வாறே "சுதேசமித்திரன்-ஞாயிறு மலர்" ஆசிரியாடமும் வேண்டிக்கொண்டேன். அவர்கள் இருவரும் விசயமங்கல வரலாற்றைக் கட்டுரையை முறையே 18-6-65ல் "காந்தி வழி" இதழிலும் 3-7-65-ல் "சுதேசமித்திரன் ஞாயிறு மலாலும்" வெளியிட்டார்கள். இதற்கிடையில் 26-5-65ல் சென்னை அரசாங்க அறநிலைய பாதுகாப்பு ஆணையாளர் உயர்திரு. N.S. சாரங்கபாணி முதலியார் B.A., B.L. அவர்கள்முதல் அமைச்சர் அவர்களுக்கு 7-2-65-ல் அனுப்பிய வேண்டுகோள் சம்பந்தமாகத் தமிழகத்திலுள்ள பண்டைய ஜைனத் கோயில்களின் குறிப்புகளுடன் 14-7-65-ந் தேதி தமது அலுவலகத்தில் வந்து காணுமாறு எனக்குக் கடிதம் எழுதிப் பணித்தார்கள். அவ்வாறே யான் 14-7-65-ந் தேதி என்னுடன் வந்தவாசி தாலுக்கா திறக்கோயிலுள்ள ஜைன மலைக் கோயில்ன் புகைப்படங்களுடன் அவ்வூர் நண்பர் திரு. C.சந்திரநாத் ஜெயின் அவர்களையும் அழைத்துக்கொண்டு அறநிலையை ஆணையாளர் அவர்களிடம் சென்றேன். அறநிலைய ஆணையாளர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இயற்கை அன்பு தவழும் அப்பொயார் எங்களையில் இயற்கை அன்பு தவழும் அப்பொயார் எங்களை நன்கு வரவேற்று அறிக்கை சம்பந்தமான எல்லா செய்திகளையும் கேட்டு அறிந்து மகிழந்தார். விரைவில் இக் குறிப்புகளை அரசாங்கத்திற்கு அனுப்பி அவைகளுக்கான எல்லா முயற்சிகளையும் செய்வதாக உறுதி கூறினார்கள் அப்பெருந்தகை ஆணையாளருக்கு எங்கள் நன்றிகலந்த வணக்கத்தைச் செலுத்தி விடைபெற்றத் திரும்பினோம். அறநிலையத்தார் தங்கள் தோறும் வெளியிடும் "திருக்கோயில்" என்ற இதழின் ஆசிரியரும் எனது அன்புக்குரிய வருமாகிய புலவர் முருகவேள் அவர்களைச் சந்தித்து "விசயமங்கலம்" கட்டுரையை "திருக்கோயில்" இதழில் வெளியிடுமாறு வேண்டிக் கொண்டு கட்டுரையையும் விசயமங்கலம கோயில் புகைப்படங்களையும் அளித்துவிட்டு வந்தேன். அப் பொயாரும் அறநிலைய ஆணையாளர் இசைவுபெற்று 1965 ஆகஸ்டு இதழில் அழகாக வெளியிட்டுச் சிறப்பித்தார்கள். விசயமங்கல ஜைனத் கோயில் சம்பந்தமான புகைப்படங்களை எடுத்து அனுப்பியவர் கோவை பிரபல வியாபாரிகளான திரிபுவன்தாஸ் வந்த்ராவன் கம்பெனியைச் சேர்ந்த திரு. சாந்திலால் ஜெயின் அவர்களாவர். அவர் ஜைன சமயத்தவராகையால், விசயமங்கலத்தின் பால் பேரண்புக்கொண்டவர் அவர் தம் இருமுறை விசயமங்கலம் சென்று வழிபாடு செய்துவருபவர். ஆகவே எனது வேண்டுகோளை ஏற்று புகைப்படங்களை அனுப்பி உதவினார்கள். கோவை விவசாயக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. பண்டித இராம மீனாட்சிசுந்தரம் பிள்ளை, M.A. அவர்களும், திரு. சாந்திலால்ஜெயின் அவர்களுடன் விசயமங்கலத்திற்கான முயற்சிகளில் பொதும் ஈடுபட்டு வந்துள்ளார். ஈரோடு புலவர் செ. இராசு அவர்களின் தூண்டுதலாலும் துணையாலும் யானும், திரு. மயிலை, சீனி. வேங்கடசாமி அவர்களும், 1961-ல் விசயமங்கத்தையும் திருப்பதிகளையும் கண்டுகளித்தோம்.

விசயமங்கலத்தை நேரே காணும் வாய்ப்பு ஏற்பட்டதால் இந்நூலை விரிவாகவும் விளக்கமாகவும் எழுத இயன்றது. விசயமங்கல வரலாற்றுச் செய்திகளை அறிய தமிழ்ப் பொயார் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் முதன்முதல் வெளியிட்ட பெருங்கதை இலக்கியத்தின் முன்னுரையும், கோவைகிழார் எனப் புகழப்படும் உயர்திரு. T.M. இராமச்சந்திரம் செட்டியார், B.A. B.L அவர்கள் எழுதிய கொங்குநாடும் சமணமும் என்ற நூலும், ஈரோடு புலவர், செ. இராசுஅவரகள் எழுதிய கட்டுரையும் பொதும் துணைபுரிந்தன. இச்சிறுநூல் விசயமங்கலச் சிறப்பை அறிய ஒரு வழிகாட்டி (guide) என்ற வகையில் அமைந்துள்ளேன். நண்பர் திரு. A. ஜெயகுமார ஜெயின் அவர்கள் இக் கட்டுரையைப் பாடங்களுடன் நூல் வடிவாக வெளியிட்டின் பலரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுமாகையால் இதற்காகும் பொருள் செலவை யானே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என என்னைத் தூண்டினார்கள்

திரு.A. ஜெயக்குமார் ஜெயின் அவர்கள் எனது பிறந்த ஊராகிய திருப்பறம்பூரைச் சார்ந்தவர். சென்னை, கல்கத்தா முதலிய நகரங்களில் இரயில்வே எலக்ட்ரிபிகேஷன் ஆபீஸ் சூபாண்டென்டாகப் பணியாற்றி ஓய்வுபெற்று வந்துள்ளார். அவர் இயற்கையிலேயே அடக்கமும் பொறுமையும் வாய்ந்தவர். சமயப்பற்றும் சமய நூல்களைப் பயில்வதிலும் பேரார்வம் படைத்தவர். எனவே இலக்கியச் சிறப்பமைந்த விசயமங்கல வலாற்றுச் செய்தி அவர் உள்ளத்தை ஈர்த்தது. அதனை நூல்வடிவாக வெளியிட விழைந்தார் அவர் விருப்பத்தை ஏற்றுயான் இந்நூலை உருவாக்கி வெளியிட்டுள்ளேன். இம் முயற்சிக்குக் காரணமாகவும் தூண்டுகோலாகவும் விளங்கிய நமது பெருமைக்குரிய முதல் அமைச்சர் அவர்களுக்கும், அறமே உருவாயமைந்த அறநிலைய ஆணையாளர் அவர்களுக்கும், விசய மங்கலக் கட்டுரையை வெளியிட்டுதவிய 'காந்தி வழி' 'சுதேசமித்திரன்' திருக்கோயில் ஆகியவற்றின் ஆசிரியர் பெருமக்களுக்கும், புகைப்படங்கள் எடுத்தனுப்பிய திரு. சாந்திலால்ஜெயின் அவர்களுக்கும், திரு. பண்டித. இராம. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும், எனது உளம்கலந்த நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துகின்றேன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நூலைப் புலவர் பெருமக்களும் கவிஞர்களும், மாணவ மாணவிகளும் பெருமக்களும் படித்தறிந்து விசயமங்கலத்திற்கு விசயம் செய்தும், சுற்றுலா சென்றும் பெருங்கதை இலக்கிய விழா நடத்தியும், அக்கலைப்பதியை இலக்கிய யாத்திரைப் பதியாக விளங்குமாறு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

அன்பன்,
S. ஸ்ரீபால்

விசயமங்கலம்

விசயமங்கலம் ஈரோட்டிற்கும் கோயமுத்தூருக்கும் இடையில் ஒர ரயில் நிலையமாக விளங்குகிறது. ஈரோட்டிலிருந்து சுமார் 15 கல் தொலைவில் உள்ளது.
இவ்வூர் பண்டைக்காலத்தில் வரலாற்றுச் சிறப்பமைந்த தலைநகரமாக விளங்கிற்று கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள் குறும்பு நாட்டைச் சார்ந்திருந்தது. கொங்கு நாட்டின் நடுவண் உள்ளது.

கொங்கு வேளிர்

விசயமங்கலத்தைத் தலைநகராகக்கொண்டு கொங்கு வேளிர் என்ற ஜைனப் பேரரசர் ஆட்சி புரிந்து வந்தார் இவ்வரலாற்றைப் பெருங்கதைப் பாயிரத்தில்,

"...................செழுந்தமிழ்ப்
பொங்கு மண்டலத்துட் கொங்கு மண்டலத்தில்
உறும்பல வளமார் குறும்பு நன்னாட்டில்
எப்பனு வலையும் தப்புதலின்றி
அங்கையா மலகமா அறிபொயோர் செறி
மங்கைமா நகான் மஞ்சையம் பாமீத்
தங்குவேள் என வாழ் கொங்கு வேளிர்"

என்று கூறுவதால் அறிகின்றோம். இம்மன்னர் பெருந்தகை வடமொழியிலும் தமிழ் மொழியிலும் பெரும் புலவராகத் திகழ்ந்தார். இப் புலவரேறு உதயணன் வரலாற்றைப் பெருங்கதை என்னும் பெயரால் தலைசிறந்த தமிழ்க்காப்பியம் ஒன்றை இயற்றினார். இக் காவியத்தின் பெருமையை நமது மதிப்புக்குரிய உயர்திரு. கோவை கிழார் அவர்கள், "கொங்குவேளிர் ஆண்டிருக்கும் கவிப்போக்கு ஆங்கிலத்தில் டென்னிசன் (The Idills of the king) மன்னன் ஓவியங்கள் என்ற காவியத்துடன் ஒத்திட்டுப் பார்க்கலாம்" எனப் புகழந்துள்ள தினின்றும் அக் காவியத்தின் பெருமை விளங்கும்.

தமிழ்ச் சங்கம்

இம் மன்னர் பெருமான் தமிழ் மொழியில் பற்றும் பாவும் உடையவராகையால் தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் பணிபுரிய தமிழ்ச்சங்கம் ஒன்றை விசயமங்கலத்தில் தோற்றுவித்தார். இச் சங்கத்தில் இணையற்றப் தமிழ்ப் புலவர்களை ஆதாத்து தமிழ் மொழியை வளர்த்து வந்தார். பெருங்கதைப்பாயிர்த்தில்,

"புலவர் கூட்டுண்ணும் புத்தமுதாக உதயணன் சாதை ஓதினர்" எனக் கூறுவதால் புலவர் கூடித்தமிழ் வளர்த்த செய்தியும் உதயணன் சாதை இயற்றிய செய்தியும் தெளிவாகத் தொகிறது. இவ்வூரின் ஒரு பகுதியைச் சங்கு வடம் என அழைக்கின்றனர். இப் பகுதியே தமிழ்ச்சங்கம் அமைந்த இடமாக இருக்கலாம். சங்க இடம் என்பதே சங்கு வடம் மன மருவி அழைக்கப்படுகிறது.

இத் தமிழ்ச் சங்கத்தின் மாண்பு

கொங்கு நாட்டில் தோன்றிய தமிழ்ச் சங்கத்தின் பால் மற்றொரு தமிழ்ச் சங்கத்தார் பொறாமை கொண்டு அச் சங்கத்தாரின் திறனையறிய வேண்டி ஒரு கவியின் வாயிலாக வினா ஒன்றை எழுப்பி அக்கவியின் பொருளையும் வினாவிற்குரிய விடையையும் அளிக்குமாற கேட்டனர் அக் கவியைக் கண்ணுற்ற கொங்கு வேளிர் தனது அரண்மனைப் பணிப் பெண் கிருத்தியை அழைத்து அக்கவியின் பொருளையும் அதற்குரிய விடையையும் கூறுமாறு பணித்தார். அப் பணிப் பெண் அக் கவியை ஆழந்து உணர்ந்து அருமையான விளக்கம் தந்தான். அக் விளக்கத்தைக்கேட்டு மகிழ்ந்த மன்னர் பெருமான் அப்பெண்ணையே வினாவிடுத்த அச் சங்கத்திற்கு அனுப்ப முடிவு செய்து புலவர்களுக்குரிய பல்லக்கு முதலிய விருதுகளுடன் அனுப்பி விடையளித்து வருமாறு வாழ்த்திப் பணித்தார். அப் பெண்ணருங் கலமாம் பணிப் பெண் அங்கு சென்று அச்சங்கப் புலவர்கள் வியப்புறும் வகையில் பொருத்தமான விடைகர்ந்தாள். புலவர் பலரும் மேதையாம் அம் மாதைப் போற்றிப் புகழந்தனர். இவ் வரலாற்றைக் கொங்கு மண்டல சதகம்,

"நீதப்புகழ் உதயேந்திரன் காதை நிகழ்த்துதற்குத்
கோதற்ற மங்கையில் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற் சங்கத்தார் வெல்கவே கொங்கு வேள் அடிமை
மாதைக் கொண்டுத்தரம் சொன்னவுங் கொங்கு மண்டலமே"

பெண் குலத்திற்குப் பெருமை தேடித்தந்த
அறிவு சான்ற அடிமை மாது.

என வரும் கவியில் அருந்தமிழ் மாதைக் கொண்டு உத்தரம் சொன்னதுவுங் கொங்கு மண்டலமே எனப் புகழப் பெற்றுள்ளது. இத்தகு கல்வி நலம் பெற்றுயர்ந்த காரணத்தால் விசய மங்கலப் பெரும் பகுதியைத் 'தமிழ் மங்கை' என்றும் 'மங்கை மாநகரம்' என்றும் அக் காலப் புலவர் பெருமக்கள் பலர் போற்றியுள்ளனர்.

ஐம்பெரும் புலவர்களின் உருவச் சிலைகள்

கொங்குவேளிர் தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் வளர்த்த புலவர்களில் ஐம்பெரும் புலவர்களின் உருவச் சிலைகள் வகையில் ஓலைச் சுவடிகளுடன் காட்சியளிக்கின்றன. இவ்வாறு தமிழ்ப் புலவர்களைப் உலகுக்கு அறிமுகம் செய்யும் வகையில் தமிழகத்தில் வேறெங்கணும் காணப்படவில்லை. இந் நினைவுச் சின்னங்களால் கொங்குவேளிர் புலவர்கள் பால் கொண்டிருந்த பெருமதிப்பு பேரன்பும் புலனாகிறது. அவ்வாறே அறிவான் மிக்க அடிமை மாதுக்கும் சிலை அமைத்துள்ளார்.

ஜீனாலயம்

விசய மங்கலத்தின் கொங்குவேளிர் அமைத்த ஜினாலயம் இன்றும் நின்று நிலவுகிறது. இக் கோயில் உட்புறத்தில் எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தியாகிய பகவான் விருஷப தேவருக்கும் எட்டாம் தீர்த்தங்கரராகிய சந்திரப்பிரப தீர்த்தங்காருக்கும் இரு ஆலயங்கள் இருந்தன. இப்பொழுது ஆதி தீர்த்தங்கரராகிய பகவான் விருஷபதேவர் ஆலயம் சிதறுண்டு காணப்படுகின்றது.

சந்திரபிரப தீர்த்தங்கரர் ஆலயமும் மதிற்சுவர்களுமே இருக்கின்றன. இக் கோயில் வீரசங்காதப் பெரும்பள்ளி எனச் சாசனம் கூறுகிறது. மன்னர் கொங்குவேளிர் வழிபாடியற்றிய இக் கோயிலின் முன் மண்டபத்தில்தான் நாம் முன்னர் கூறிய ஐம்பெரும் புலவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள் மண்டபத்தின் நான்கு பக்கங்களிலுமுள்ள, உத்திரங்களில் பகவான் விருஷப தேவரின் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள காட்சி உள்ளத்தை மகிழ்ச்சியலாழ்த்துகின்றது. தமிழகத்து ஜைனக் கோயில்களில் எங்கணும் காண வியலாத தனித்தன்மைவாய்ந்த அரிய சிற்பங்கள் வரலாற்றுச் சிறப்பும் இலக்கியப் பெருமையும் கொண்ட இக் கோயில் பாதுகாப்பின்றியும் போதுமான வருவாயின்றியும் சீர் குலைந்து வருகிறது.

இக்கோயில் பல சிறப்புகளைக் கொண்டது. சந்திரப் பிரப தீர்த்தங்கரர் ஆலயத்தின் முன் மண்டபத்தின் தூண் ஒன்றில் பின்வரும் செய்தியைக் கொண்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கோமடேஸ்வரர் சிலையைத் தோற்றுவித்த சாமுண்ட ராஜனுடைய தங்கை புல்லப்பை என்ற அம்மையார் நிசீதிகை செய்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்பெருமாட்டியார் இக் கோயிலில் சல்லேகனா விரதமிருந்து உயிர்விட்டார்கள் என்பதாகும். இதற்குப் பண்டைய இலக்கியங்களில் வடக்கிருத்தல் என வழங்கப்பட்டிருப்பதை அறிஞர்கள் அறிவார்கள். எனவே இக்கோயிலின் புனிதத் தன்மையும் பெருமையும் விளங்குகிறது. இவ்வாறு கொங்கு சோழர்காலத்து கல்வெட்டுச் செய்திகளும் விசயநகரத்து ஹாஹரராயன் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

 

1   2  


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com