ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாசாரியர் வரலாறு

மங்கலம் பகவதோ வீரோ, மங்கலம் கெளதமோ கணீ
மங்கலம் கோண்ட குந்தா இஓ, ஜேண்ஹம் தம்மோத்து மங்கலம்"

ஆன்மாவை ஆதாரமாகக் கொண்ட நமது அறம் யாண்டும் நிலை பெற்றதாகும். இதை எவரும் தோற்றுவிக்கவுமில்லை, எவரும் இதை அழிக்கவும் இயலாது. அவ்வாறான இவ்வறத்தைத் தீர்த்தங்கரர்களும், கேவலிகளும், சுருத கேவலிகளும், மற்றும் ஆசாரியர்களும் உபதேசித்தருளினர். பிற்காலத்திலும் அவ்வாறே உபதேசித்தருள்வர்.

இப்போது நடக்கும் தீக்காலம் என்னும் இந்த ஐந்தாம் காலத்தில் தீர்த்தங்கரர்களும், கேவலிகளும் இல்லாத நிலையில் ஆசாரியர்கள் அறத்தை உபதேசித்தருளியுள்ளனர். அவ்வாசாரியர்களுள் மிகவும் புகழ்பெற்றவரும், தலைசிறந்தவருமானவர் ஆசாரிய குந்த குந்தர்.  

மங்கலம் பகவான் வீரோ, மங்கலம் கெளதமோகணீ
மங்கலம் குந்தகுந்தார்யோ, ஜைன தர்மோஸ்து மங்கலம்

இந்த மங்கல சுலோகத்திற்கேற்ப ஆசாரிய குந்த குந்தர், பகவான் மகாவீரருக்கும், கெளதம கணதரருக்கும் அடுத்தவராகப் போற்றப்பட்டிருக்கிறார். அவரது ஆற்றலையும், தவவலிமைமையும், சிறப்புகளையும் நன்கு உணர்ந்த பிற்கால ஆசாரியர்கள் அவரை கலிகால ஸர்வக்ஞன் என்றும் அழைக்கலாயினர். இவ்வளவு சிறப்புகளை உடைய ஆசாரிய குந்த குந்தர் நாம் இப்போது வசிக்கும் தமிழக மண்ணில்தான் நீண்டகாலம் தவம் தாங்கி நின்றார் என்பதை எண்ணும்போது உள்ளம் நெகிழ்கிறது. உணர்வு பொங்கி எழுகிறது. இம்மண்ணில் தவம் புந்த அம்மகானைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை முதற்கண் காண்போமாக. ஆன்மாவை ஆராதிக்கும் அறவோர் அறத்தைப் போற்றினார்களே தவிர, அவர்கள் தங்களின் இக்கால வாழ்க்கை வரலாற்றைச் சிறிதளவும் எடுத்துக்கூறியதில்லை. ஆன்மாவைப் போற்றும் அவர்கள் உடல்சார்ந்த புறவாழ்வை முற்றிலும் துறந்தவர்கள் ஆவர். எனவே அவர்கள் தங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பிற்கால ஆசாரியர்களுள் சிலர் முற்கால ஆசாரியர்களின் சிறப்பு கருதி அவர்களின் அறக்கருத்துக்களைத் தங்கள் நூல்களில் மக்களாலும் உருவாக்கப்பட்ட கல்வெட்டு, புராதன சின்னம் முதலிய தடயங்கள் வாயிலாகவும் ஆசாரியர்களின் வாழ்க்கையை ஓரளவிற்கு அறிய முடிகிறது. ஆசாரிய குந்த குந்தரும் ஆன்மாவை ஆராதித்த ஆசாரியர்களுள் தலைசிறந்தவராவார். அவர் அருளிய ஸமயஸாரம் என்னும் நூல் ஒன்றே இதற்கு சான்றாகும். சொற்களால் முற்றிலும் உணர்த்த முடியாத அருவ ஆன்மாவிற்கு வாவடிவம் தந்தவர் அவர். எனவே தான் ஸமயஸாரத்தை ஆன்ம அரசனை தாசிக்க உதவும் காணிக்கையாக போற்றியுள்ளனர். ஸமயஸாரத்திற்கு ஸமய பாஹடம் என்ற பெயரும் உண்டு. அதை விளக்கும்போது ஸமயம் என்றால் ஆன்மா, பாஹடம் என்றால் காணிக்கை. இவ்வாறு ஸமய பாஹடம் என்ற சொல்லுக்கு ஆன்மாவை தாசிக்க பயன்படும் காணிக்கை என்று கூறுவர். இவ்வளவு சிறப்புகளை உடைய நூலினைப் படைத்த சாரிய குந்த குந்தர் தம்மைப்பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. னால் பிற்கால ஆசாரியர்களின் கருத்துக்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், நூல்கள் முதலிய ஆதாரங்களைக் கொண்டு அறிஞர் பெருமக்களும், சான்றோர்களும், ராய்ச்சி வல்லுனர்களும் எடுத்துக்கூறிய ஆசாரிய குந்த குந்தர் பற்றிய செய்திகளை, கீழ்கண்ட தலைப்புகளின் வாயிலாக அறிய முயற்சிப்போமாக.

  1. ஆசாரிய குந்த குந்தரும் ஆசாரிய பரம்பரையும்
  2. ஆசாரிய குந்த குந்தரும் அவரது குரு பரம்பரையும்
  3. ஆசாரிய குந்த குந்தான் பிறப்பிடமும் தபோ பூமியும்
  4. ஆசாரிய குந்த குந்தரும் அவரது காலமும்
  5. ஆசாரிய குந்த குந்தான் நூல்களும் உரைஆசியர்களும்
  6. ஆசாரிய குந்த குந்தரும் மகத்தான அவரது சிறப்பு அம்சங்களும்
  7. ஆசாரிய குந்த குந்தரும் அவரது வாழ்க்கை சார்ந்த கதைகளும்

இப்போது இந்த ஏழு தலைப்புகள் மூலம் இயன்ற அளவிற்கு ஆசாரிய குந்த குந்தரைப் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தைக் காண்போமாக. விவாக அறிய விரும்பும் ஆர்வலர்கள் இந்நூலுக்கு தாரமாக விளங்கும் நூல்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.*

ஆதார நூல்களின் பட்டியல் இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.