Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
கடவுள் வாழ்த்து
1.
குற்றங்கள் இல்லான் குணத்தால் நிறைந்தான் குணத்தால்
மற்றிந்த வையம் அளந்தான் வையன் நின்ற பெற்றி
முற்றும் உரைத்தான் உரை ஈரொன்பதாயது ஒன்றால்
செற்றங்கள் தீர்ப்பான் விமலன் சரண் சென்னி வைத்தேன்.
குற்றம் குறைகள் அறவே இல்லாதவனும், முடிவிலா அறிவு முதலிய எண் குணங்கள் நிறையப் பெற்றவனும், தனது ஞானத்தால் உலகனைத்தையும் அளந்தறிந்தவனும், இந்த உலகத்தில் நிலை பெற்றிருக்கின்ற உயிர் உயிரற்றவை ஆகிய ஒன்பது பொருள்களின் தன்மையைத் தனது திவ்யத் தொனியால் வெளிப்படுத்தி பதினெண் மொழிகள் மூலம் உலகறியச் செய்தவனும், தனது வழியைப் பின்பற்றுகின்ற உயிர்களின் கோபதாபங்களைப் போக்குகின்றவனுமாகிய விமல தீர்த்தங்கரர் பாதங்களை எனது சென்னியால் வணங்குகின்றேன்.

அவையடக்கம்
2.
மேதத்க சோதி விமலன் கணத்துக்கு நாதர்
மாதக்க கீர்த்தி உயர் மந்தரர் மேருநாமர்
போதக் கடலார் புராணப் பொருளான் மனத்தைச்
சோதிக்கலுற்றேன் தமிழால் ஒன்று சொல்ல உற்றேன்.
மேன்மை மிக்க ஒளி பொருந்திய விமல தீர்த்தங்கரா¢ன் பன்னிரு கணங்களுக்குத் தலைவர்களாகிய பெருமையும், புகழுமெய்தியவர்கள், மேரு என்றும் மந்தரர் என்றும் பெயர் பெற்றவர்கள், கடல் போன்ற நூலறிவுடையவர்கள். அவர்களது புண்ணிய வரலாற்றை உரைப்பதின்மூலம் எனது மனத் திண்மையைச் சோதிக்க முற்பட்ட நான், தமிழ் மொழியால் இக்காப்பியத்தைப் படைக்கலுற்றேன்.

3.
மலை போல நின்று வெயில் வன்பனிமா¡¢ வந்தர்
நிலை பேர்தல் இல்லார் நிலையின்முன் எண்ணாது நின்றேன்
கலையான் நிறைந்தார் கடந்த கவிமாக் கடலின்
நிலையாது மெண்ணாது இது நீந்துதற்கும் எழுந்தேன்.
கொளுத்தும் வெயில், கொடிய பனி, கொட்டும் மழை ஆகிய இந்த மூன்று காலங்களிலும் மலை போலச் சலியாது நின்று தமது தவநிலையில் சற்றும் தளராத முனிவர்களின் குழுவில், தவத்தினது கடுமையை உணராது, துறவு பூண்டு நிற்கின்ற நான், நூலலறிவு முழுமையாக எய்திய மேலோர்களால் (சுருதகேவலி) கடக்கப்பட்ட மிகப்பொ¢ய நூற் கடலின் ஆழம் அறியாது கடக்க முற்பட்டுள்ளேன் (அதாவது தத்துவத்தைக் கூறும் பணியில் ஈடுபடுகிறேன்).

4.
நல்லோர்கள் போயவழி நாலடிப் போயினாலும்
பொல்லாங்கு நீங்கிப் புகழாய்ப் புண்ணியமும் ஆகும்
சொல்லால் நிறைந்த சுதகேவலி சென்றமார்க்கம்
சொல்வான் எழுந்தேற்கு ஒருதீமையுண்டாக வற்றோ.
நல்லவர்கள் சென்ற வழியை ஓரளவு பின்பற்றினாலும், தீவினைகள் நீங்கிப் புகழும் புண்ணியமும் உண்டாகும்; பயன்மிக்க சொற்களால் நிறைந்த நூலறிவு மிக்க மேலோர்களான மேரு மந்தரர்கள் மேற்கொண்ட நெறியினைச் சொல்ல முற்பட்ட எனக்கு எவ்வித இடையூறும் உண்டாகாது.

5.
பொன்னைப் பொதிந்தகிழி பொன்னோடிருந்த போழ்தில்
பொன்னைப் பொதிந்தகிழி தன்னையும் பொன்னின்வைப்பர்
புன்மைச் சொல்லேனும் புராணப் பொருளைப் பொதிந்தால்
நன்மைக்கண் வைத்தற்கு இனிநாம் இரங்கும் படித்தோ.
பொன்னோடிருக்கின்ற வரையில் அதை முடித்துவைத்த துணியும் பொன்னைப் போலவே பாதுகாப்பைப் பெறும்; அதுபோல் சொற்கள் எளிமையானவை எனினும் நல்லோர்களது புண்ணிய வரலாற்றைச் சொல்ல முற்பட்டால் உலகம் அதை மேலாக ஏற்றுக்கொள்ளும் என்பதில் ஐயத்திற்கோ கவலைக்கோ இடமில்லை.

  வைசயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Top Next Home Page