Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
930.
சக்கரைப் பிரபை தன்பால் நிற்பதற்கு ஆர்வம் வைத்துச்
 சக்கரைப் பிரபை தன்பால் நின்றவன் தன்னைக் காணா
 மிக்க வெந்துயரம் உற்றேன் அவன்துயர் நீங்க எண்ணி
 அக்கணத்து அவனைக்கூடி அறிதியோ என்னை என்றேன்.
சக்கரப்ரபை என்னும் இரண்டாம் நரகத்தில் விழுதற்குக் காரணமான பொருள் பற்றினைப் பெருக்கிய,பாபகர்மத்தின் பயனாய் இரண்டாம் நரகத்தில் விழுந்து பெருந்துன்பம் எய்தியவனைக் கண்டு மிக்க துயரமடைந்தேன். அவனது துயரம் தீருமாறு எண்ணி அக்கணமே அவனை அடைந்து நோக்கி என்னைத் தொ¢கிறதா என்றுகேட்டு எனது வரலாற்றினைக் கூறத் தொடங்கினேன்.

931.
மதுரை யான்ஆக என்பால் வாருணி மகளாய் நீ பின்
 சதுரமை தந்தையானேன் மகன் பூரசந்தனானாய்
 விதியினால் நோற்று என்னோடு மாசுக்கம் புக்கு விஞ்சைப்
 பதியில் சீதரை யானேன் என்மகள் இசோதரையுமானாய்
பல பிறவிகளுக்குமுன் நான் மதுரை என்னும் பெண்ணாகவும்,நீ எனக்கு வாருணி என்னும் மகளாகவும்,பிறகு நான் ராமதத்தையாகவும் நீ எனது மகன் பூரணச்சந்திரனாகவும் இருந்தோம்; பிறகு முறைப்படி நோற்று இருவரும் மகாசுக்ர கல்பத்து தேவராகப் பிறந்தோம். அடுத்து விஞ்ஞையர் உலகில் நான் சீதரை என்னும் பெண்ணாக பிறந்தேன். நீ எனது மகள் இசோதரையாகப் பிறந்தாய்.

932.
கந்தியாய் நோற்று என்னோடும் காவிட்டகற்பம் புக்கு
 வந்து யான் இரத மாலை மண்ணின் மேலாக,நீயும்
 அந்தரத்திழிந்து என்மைந்தன் அரதனாயுதனும் கிச்
 சிந்தை மாதவத்தோடொன்றி அச்சுதம் சென்று மீண்டோம்.
பிறகு நீ ர்யாங்கனையாகி நோற்று,என்னுடன் காபிஷ்ட கல்பத்தில் தேவனாகப் பிறந்தாய். அடுத்து நான் இம்மண்ணுலகில் இரத்தினமாலை என்னும் அரசியானேன்; நீ எனக்கு இரத்தினாயுதன் என்னும் பெயருடைய மகனாகப் பிறந்தாய்; நாம் இருவருமே தருமத்தியானத்துடன் தவத்தை மேற்கொண்டு யுள் முடிய மீண்டும் அச்சுதமென்னும் அமர உலகில் தேவர்களானோம்; தேவசுகமனுபவித்து - ஆயுள் முடிய - மறுபடியும் மண்ணுலகிற்குத் திரும்பினோம்.

933.
தாதகி தீவில் கீழைக்கந்திலை அயோத்தியின் கண்
 ஏதமில் இராமன் நான்,நீ கேசவனாய் இறந்து,இவ்
 வேதனை நரகத்து ழ்ந்தாய்,விழுத்தவத்து லாந்தம் புக்கேன்
 ஓதியான் உன்னைக்கண்டு,இங்கு உறுதியான் உரைக்க வந்தேன்.
தாதகீ கண்டத்திலே கிழக்கு விதேக நாட்டிலே அயோத்தி நகரத்தில் குற்றமற்ற பலதேவனாகப் பிறந்தேன். நீ வாசுதேவனாகத் தோன்றி வாழ்ந்து இறந்து தீவினைப் பயனால் இந்தத் துன்பமயமான நரகத்தில் வீழ்ந்தாய். நான் தபத்தின் பயனாய் லாந்தவகல்பம் அடைந்தேன். எனது அவதி ஞானத்தால் நீ இருப்பதை உணர்த்த இங்கு வந்தேன்.

934.
என்றலும் இறந்த மேலைப் பிறவிகள் அறிந்திட்டு என்னை
 வந்துடன் வணங்கி வீழ்ந்து மயங்கினான் அவனைத் தேற்றி
 இந்திரவிபவமேனும் நின்றதொன்று யார்க்கும் இல்லை
 வெந்துயர் நரகின் வீழா உயிர்களும் இல்லை என்றேன்.
என்று நான் கூறக்கேட்டு,முற்பிறவிகளைத் தன் இயல்பால் அறிந்து,விரைந்து வந்து என்னைவணங்கி சோகத்தால் மயங்கினான். நான் அவனுக்கு ஆறுதல் கூறி,இந்திர வைபவமானாலும்,நிலைத்து யாருக்கும் நின்றதில்லை. கொடுந்துன்பம் நிறைந்த நரகத்தில் வீழாத உயிர்களும் இவ்வுலகில் இல்லை என்றேன்.

  நிரையத்துள் அறவுரைச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page