Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
970.
நிறை பொறை சாந்தி ஓம்பி நின்றது ஒன்றின்மை சிந்தித்து
 அறிவன் சரணம் மூழ்கி ஆருயிர்க்கு அருளி அந்தம்
 பிறவியின் ஒருவிச் சித்த விரதம் பெய் இரும்பிற் பெற்ற
 அறநெறி அதனின் வந்திங்கு அரசிளம் குமரனானான்
மனநிறைவு, பொறுமை, அமைதி ஆகிய பண்புகளை ஏற்று வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்து அருகனது திருவடிகளை மனங்கொண்டு, அனைத்து உயிர்களிடத்தும் அருள்பூண்டு, சித்தரசம் பெய்த இரும்பினைப் போல் ஒளிபெற்று அறநெறி மேற்கொண்டதால் - அந்த நரகத்தினின்றும் விடுபட்டு, இம்மண்ணுலகில் அரச குமாரனாக அவதா¢த்தனன்.

971.
மற்று இந்தத் தீபத்தின்கண் இரேவதத்து அயோத்தி ஆளும்
 கொற்றவன் சி¡¢வர்மாவின் காதலி சுசிமைக் கொம்பின்
 பெற்றியாள் வயிற்றுச் சீதாமா எனும் சிறுவனாசிக்
 கொற்றவர் குலங்கள் என்னும் குலமலை விளக்கை ஒத்தான்
இந்தச் சம்பூத்தீவிலே ஐராவத §க்ஷத்திரத்தில் அயோத்தி நகரத்தின் அரசன் ஸ்ரீவர்மாவுக்கும், அவனால் அன்புடன் நேசிக்கப்பட்ட தேவி 'சுசிமை' என்பாள் வயிற்றிலே 'சீதாமா' என்னும் மகனாகப் பிறந்து, அரச குலங்கள் என்னும் மலைகளுக்கு ஒளி அளிக்கும் விளக்கைப் போல் விளங்கினான்.

972.
வினையத்தின் முனிவன் ஒத்து விஞ்சையின் வளர்ந்த வீரன்
 நினைஒத்துத் தீயவேந்தர் நிலைகெடுத்து அரசுமேவி
 கணமொத்து எவ்வுயிர்க்கும் ஈந்து கமலப்பூந்தடத்து வெய்யோன்
 தனைஒத்து மரைமுகத்தார் தம்முலைத் தொய்யிற் பட்டான்.
முனிவருக்கு நிகரான பணிவுடையவனாகி, அரசர்களுக்கேற்ற கலைகளுடன் வளர்ந்து வீரனாக விளங்கிய அரச குமாரன் தனது சிந்தனையை நந்நெறியிற் செலுத்தி, பகைவேந்தர்தம் ஆற்றலை அடக்கி, அரசு மேற்கொண்டு, மழை மேகம் போல் எல்லா உயிர்களுக்கும் உதவிசெய்து, தாமரைக் குளத்தினை ஒளிபெறச் செய்யும் கதிரவனைப் போல் விளங்கி, தாமரை மலர்போன்ற முகமுடைய அழகிய பெண்களின் தொய்யில் எழுதப்பட்ட மார்பகங்களில் மகிழ்ச்சியை எய்தினான்.

973.
அழலிடை வந்த மைந்தன் அவ்வழல் தணியும் எல்லை
 நிழலிடை இருப்பதே போல் நிரயத்துத் துயரம் தீரக்
 குழலன மொழியினார்தம் குவிமுலைத்தடத்து வைகிப்
 பழவினை துணிக்க நின்ற பான்மை வந்துதித்த நாளால்
நெருப்பிலே கிடந்து வந்தவன் அந்த அழலின் வெப்பம் தீரும்வரை நிழலிலே நிற்பதைப் போல்; நரகத்துன்பம் தீருமாறு குழல் போன்ற இனிய மொழியினையுடைய அழகிய பெண்களின் மார்பகம் பொருந்திக் கிடந்தபோது, பழைய வினைகள் தீரும்படியான பான்மையானது தோன்றியது.

974.
அந்தமில் வினைக்கு மாறாம் அனந்தமா முனிவன் பாதம்
 வந்துஅவன் வணங்கி மாற்றின் வடிவெலாம் முடியக் கேட்டிட்டு
 இந்திர விபவம் தன்னை எ¡¢யுறு சருகின் நீக்கி
 வெந்திறல் வேந்தர் வீரன் மெய்த்தவத்து அரசன் ஆனான்
ஆன்ம குணங்களை அழிக்கும் தீவினைகளுக்கு எதிராகிய முழுமையான மெய்ஞ்ஞானங்களையுடைய பாதங்களைச் சேர்ந்து வணங்கி, அவரால் அருளப்பட்டசம்சார இயல்பினைக் கேட்டு ஏற்றுக்கொண்ட சீதாமா, தேவவைபவம் போன்ற அரச பதவியை நெருப்பிலே விழுந்தவுடன் கருகிப்போகும் சருகுக்கு நிகராக எண்ணி அரசைத் துறந்து, மெய்த்தவம் என்னும் மேலான அரசினை மேவினான்; அதாவது துறந்து முனிவனானான்.

  பிறவி முடிச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page