Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1011.
காதியைக் கடிந்து வேந்தன், கைவலச் செல்வனானான்
 வேதியன் அமைச்சன், விஞ்சை வேந்தனாய் வியந்து போனான்
 போதணி குழலினாளும், புதல்வனும் தேவரானார்
 யாதினி இவர்கள் செய்கை என்றிடில், இயம்ப லுற்றேன்.
சிம்மசேன அரசன் பல பிறவிகளுக்குப் பின் காதிஅகாதி வினைகளைக் கெடுத்து வீடுபேறடைந்தான். ஸ்ரீபூதியாக இருந்த வித்துத்தந்தனும் வியப்பெய்தியவனாய் நல்லறிவு பெற்று தனது இடம் சேர்ந்தான். மலர்ச்சூடிய கூந்தலையுடைய ராமதத்தையும், அவளது குமாரனாகிய பூரணச்சந்திரனும் தேவர்களானார்கள். இனி இவர்தம் வரலாற்றினைக் கூறுகின்றேன்.

1012.
வேதிகை வேதண்டத்தின் வில்லுநாண் வீக்கிற்றே போல்
 ஓதநீர் உடுத்த மண்மேல்; உத்தர மதுரை என்னும் 
 போதொடு தளிர்கள் மிண்டிப் பொறிவண்டும் தேனும் பாடத்
 தாதொடு மதுக்கள் வீயும் தண்பணைச் சோலைதுண்டே.
இவ்வுலகில் லவண சமுத்திரத்தின் வேதிகை வில்லாகவும், விஜயார்த்த பர்வதம் நாணாகவும் அமைந்தது போன்ற இப்பரத கண்டத்தில் துளிரும், மலரும் நிறைந்து வண்டுகள் இசைக்கும் தேன் சொ¡¢யும், குளிர் மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட, வடமதுரை என்னும் நகரம் ஒன்று உண்டு.

1013.
பகற்கு இடைகொடாத பைம்பொன் மாளிகைப் பாவை நல்லார்
 அகில்புகை அகத்து நின்றார், அணிவரை அதனைச் சூழ்ந்த
 முகில்கொடி மின்னுப்போன்று தோன்றுவார், குழாம் முழங்கத்
 துகில்கொடி யோடும்மஞ்சை தொடங்கிய நடங்கள் ஓவா.
அந்நகா¢ல் எண்ணற்ற கொடிகள் நுடங்கும்போது உண்டாகும் ஒலிகேட்டு அதை மேகங்கள் என நினைத்த மயில் கூட்டங்கள் ஆடிக்கொண்டிருக்கும், சூ¡¢ய ஒளி விழாவண்ணம் ஓங்கி உயர்ந்த பொன் மாளிகைகளிலிருந்து கிளம்பும் அகில் புகைக்கிடையே நிற்கும் சித்திரம்போன்ற அழகிய பெண்களின் தோற்றம், மலையைச் சூழ்ந்துள்ள மேகத்தில் தோன்றும் மின்னல்களைப் போல் விளங்கும்.

1014.
காமனே கவ்வை செய்வான், கா¢களே நிகளம் பெய்வ
 தாமமே மெலியும், வண்ணம் சங்கரம் சிற்பியர்க்கே
 சேமமார் சிறைபுனற்கே, தீத்தொழில் மறையவர்க்கே
 வாம மேகலையினாரே வசியம் அந்நகரத்துள்ளே.
அந்நகரத்தில் வருத்தம் செய்யக்கூடியவன் மன்மதன் ஒருவனே. யானைகளின் கால்களே விலங்கினை அணியும். மலர்மாலைகளே வாடுபவன. வண்ண ஓவியங்களுக்காக சிற்பியர்களால் வண்ணங்களே கலக்கப்படும். புனல் நீரைத்தடுக்கும் அணைகளுக்கே காவல், தீயினால் இயற்றும் தொழில் அந்தணர்களுக்கே பிறரை வசியம் செய்பவர் அழகிய மேகலைகளை அணிந்த மகளிரே!

1015.
சினம்தலை நின்ற வேந்தர் திண்புயம் சிதைத்த வீரத்து
 அனந்தா£¡¢யன் என்பானாம் அந்நகர்க்கு இறைவன் நல்லார்
 மனந்தொறும் இருந்த காமன் வண்மையான் மா¡¢ஒப்பான்
 நனந்தலை உலகில் உள்ள நவையெலாம் தீர நின்றான்.
அந்நகா¢ன் வேந்தன், சினம்மிக்க தோள்வலிமை பெற்ற பகை வேந்தர்தம் பலத்தைத் தனது வீரத்தினால் தொலைத்தவன் அதனால் அவனுக்கு அனந்தவீ¡¢யன் என்னும் பெயர் அமைந்தது. பெண்கள் பொ¢தும் விரும்பும் மன்மதனுக்கு நிகரானவன். வா¡¢ வழங்குவதில் மேகத்தைப் போன்றவன். மிகப் பரந்த இவ்வுலகத்தின் வருத்தம் நீங்குமாறு செங்கோல் செலுத்தி வந்தான்.

  ஸ்ரீ விஹாரச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page