Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1048.
யோசனை பன்னிரண்டின், உம்பர் கோன் தம்பம் காணாப்
 பேசொணா வகையில் நின்ற பெருமிதம் அழிந்தது, யார்க்கும்
 ஈசனை இறைஞ்சினார்கள், எய்தினார் இறைவன் கோயில்
 வீசுவெண் சாமராதி பா¢ச்சந்தம் முழுதும் விட்டார்
பன்னிரண்டு யோசனை அளவு பரம்தமைந்த சமவ சரணத்தின் முதல் பூமியில், வீதியின் மையத்தில் அமைந்த, தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய அருக பரமனின், மானத் தம்பத்தைக் கண்டபொழுதே, சொல்லற்கா¢ய வகையில் அனைவா¢டத்தும், நிறைந்திருந்த மித்யாத்துவ கர்மமானது அழிந்தது. உடனே அரச குமாரர்கள் இருவரும் தங்களைச் சூழ வந்த அனைத்துப் பா¢வாரங்களையும் - சாமரை, வெண்குடை முதலான அரச சின்னங்களையும் விலகச் செய்து இறைவனது லயத்தை அடைந்து மூவுலக நாதனைத் தொழுதனர்.

1049.
யானையின் இழிந்து, மானாங் கணத்து, இரு காத வீதி
 மானபீடத்தை மார்பின் அளவுள மதிலை எய்திக்
 கானுறை கமலப் போதில் கைதொழுது இறைஞ்சி, வாழ்த்தி
 ஊனம் தீர் தூயத் தானாம் கணம்புக்கார், கோசம் போயே.
யானை மேலிருந்து இறங்கி குறைந்த உயரமுள்ள தூளிசாலம் என்னும் மதிலைக் கடந்து, அதன் உட்புறமாகிய பிராசாத சைத்ய பூமியை அடைந்து, நான்கு திசைகளிலிருந்தும் உள்நோக்கிச் செல்லுகின்ற, இரண்டு காத அகலமுள்ள வீதிகளின் முகப்பிலே இருக்கும் - மார்பளவு உயரமுள்ள முதல் பலி பீடத்தை அடைந்து, மலர்க்கரங்களால் தொழுது வாழ்த்தி, அங்கிருந்து ஒரு குரோச தூரம் சென்று தூய அழகிய அந்த உட்புற பூமியாகிய பிராசாத நிலத்தின் மையப்பகுதியை அடைந்தனர்.

1050.
ஆங்கு அதன் அகத்து வீதி நடுவண், நாற்காதம் ஓங்கி
 பாங்கின் மாதிசையில் பன்னீர் ஓசனை காண நின்ற
 வாங்குகாந்தம் போல், மானம் வாங்கு நன் மானத்தம்பம்
 பாங்கினால், தோரணம், வேதி மங்கலம், பலவும் சூழ்ந்த
அங்கே, வீதிகள் நடுவில், நான்குகாத உயரமுடையதாகி முறைப்படி நான்கு திக்குகளிலும் பன்னிரண்டு யோசனை தூரத்திற்கு தொ¢யுமாறு உயர்ந்து நின்று தன்னைக் காண்பவர்களது மானகர்வத்தை இரும்பைக் கவரும் காந்தம்போல், தன் பால் வாங்கிக்கொள்ளும் மானத்தம்பங்கள், தோரணங்கள் முறைப்படி அமைய மதில்கள் சூழ்ந்திருக்க அட்ட மங்கலங்கள் அமைந்திருக்க விளங்கின.

1051.
வயிரம், நற்படிகம், வயிடூ¡¢யம் அடி, நடுவண், உச்சி
 உயரத்தின் பாகமோக்கம், படிகம் மேல் கீழ வோக்கம்
 வெயில்விடு தாரைக்கீழ்மேல் ஆயிரம் நடுவிரட்டித்
 துயா¢னைக் கெடுக்கும் சித்தப்படிமை நாற்றிசையும் ஆமே.
அந்த மானத்தம்பங்களின் அடிப்பகுதியில் ஒருகாத உயரம் வயிரத்தினாலும், மையத்தில் இரண்டு காத உயரம் படிகத்தினாலும், மேலே ஒருகாத உயரம் வைடூ¡¢யத்தினாலும் அமைந்து கீழும் மேலும் ஆயிரம் ஆயிரம் பட்டைகளாகவும் அமைந்திருந்தது. மேலும் அடிப்பகுதியிலும் உச்சியிலும் நாற்புறமும் துன்பத்தைப் போக்கும் சித்த பரமேட்டிகளின் பிரதிமைகள் விளங்கின.

1052.
நான்முகப்பூதத்து உச்சி பாலிகைக் கமலப் போதின்
 மேல்வைத்த செம்பொன் கும்பத்து உச்சிமேல் பலகைதன்னில்
 பால்நிறப்பகடு பாலைப் பதுமைமேல் பொழியத் தேவி
 மேல்முடிப் பதுமராகம் இருபதுயோசனை விளக்கும்.
மானத்தம்பத்தின் உச்சியில் அமைந்திருந்த நான்கு முகங்களையுடைய பூதபிம்பத்தின் தலைமேல் பொருந்திய பலகையின் மீது தாமரை மலரைத் தாங்கிய பொன்னாலாகிய பூரண கும்பத்தின் மேல் உள்ள பலகையில் இருந்த இலக்குமி பிரதிமையின் மீது பாலைப் பொழிவதுபோல் வெண்ணிற யானைகள் இருக்கவும், தேவியின் முடிமீது, இருபது யோசனை தூரம் ஒளிவீசக்கூடிய பதுமராக ரத்தினமானது பொருந்தி ஒளிர்ந்தது.

  சமவ சரணச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page