Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
141.
பஞ்சம கதிக்கண் சென்ற பரமன் தன் சரமமூர்த்திக்கு
 அஞ்சலி செய்து வாழ்த்திச் சிறப்பயர்ந்து அமரர் போனார்
 வஞ்சமில் தவத்தி னான்சஞ் சயந்தனும் வணங்கிப் போகி
 எஞ்சலில் கொள்கை தாங்கி இராப்பகல் படிமம் நின்றான்.
ஐந்தாவது கதியாகிய வீட்டுலகம் எய்திய வைசயந்த பகவானுடைய இறுதி உடலுக்கு அஞ்சலி செய்து வாழ்த்தி வணங்கிப் பா¢நிர்வாணம் என்னும் சிறப்பினைச் செய்தபின் விண்ணவர் தமதிடம் சேர்ந்தனர். அடுத்த குறைவற்ற தவத்தினையுடைய சஞ்சயந்த மாமுனிவரும் இறைவனை வணங்கிச் சென்று குறைவற்ற தவ ஒழுக்கத்தினை மேற்கொண்டு இரவு பகலாகத் தியானத்திலே நிலைத்

142.
மான்கன்றும் புலியின் கன்றும் மாறியே முலையை உண்ணும்
 ஆண்கன்றும் ஆனைக்கன்றும் சிங்கத்தின் கன்றோ டாடும்
 ஊன்தின்று வாழும் சாதி அத்தொழில் ஒழிந்த உள்ளம்
 தான்சென்ற சாந்தி யார்க்கும் மாதவன் தன்மை யாலே.
மாமுனிவராகிய சஞ்சயந்தர் தவத்தினது தன்மையினாலே மான்கன்று புலியிடத்தும் புலிக்குட்டி மானிடத்தும் மாறிச் சென்று பால் உண்டன; காட்டுப் பசுவின் கன்றுகள் சிங்கக் குட்டிகளோடு சேர்ந்து விளையாடின; ஒன்றை ஒன்று கொன்று ஊன் தின்று வாழ்க்கை நடத்தும் பிராணிகளெல்லாம் கொலையை ஒழித்திருந்தன; அனைத்துயிர்களின் உள்ளத்திலேயும் அமைதி நிலவியது.

143.
எலிசென்று நாகம் தன்மேல் ஏறிடும் நாகம் கீறி
 நா¢யும்என் றஞ்ச லில்லை மானமா வாலின் முன்ளைப்
 புலிசென்று வாங்கும் புல்வாய் கிடந்துழி நடுங்கும் என்று
 நலிவுசெய் வேடர் செல்லார் செற்றமில் நற்ற வத்தால்.
செற்றத்தை அடியோடு நீக்கிய அருந்தவ முனிவனது அருளால், அச்சம் சிறிதுமின்றி எலிகள் பாம்புகளின் மேல் ஏறி விளையாடின; கீ¡¢கள் வருத்துமே என்ற பயமின்மையால் பாம்புகள் அஞ்சவில்லை, தனித் தன்மையுள்ள கவா¢மானின் வாலில் தைத்த முள்ளைப் புலியானது நீக்கியது. மற்ற உயிர்களுக்குத் துன்பத்தைத் தருகின்ற வேடர்களும் நாம் சென்றால் மான்கள் நடுங்குமெ

144.
ஒருவகைப் பட்ட உள்ளத்து இருவகைத் துறவு தன்னால்
 மருவிய குத்தி மூன்றில் சன்னைகள் நான்கும் மாற்றிப்
 பொருவில் ஐம்பொறி செறித்துப் பொருந்தி ஆவாசம் ஆறின்
 இருவகைச் செவிலித் தாயர் எழுவரைச் செறிய வைத்தான்.
 
ஒருமுகப்பட்ட உள்ளத்தினால் இருவகைத் துறவுகளை மேற்கொண்டு, மூவகை அடக்கங்களினால் நான்கு விதத் தொல்லைகளைத் தவிர்த்து இணையற்ற ஐம்பொறிகளின் ஆற்றலை அடக்கி இன்றியமையா அறுவகைக் கி¡¢யைகளை மேற்கொண்டு, புண்ணிய பாவங்களைப் போற்றி வளர்க்கும் செவிலித் தாயர்களில் எழுவரை முதலில் ஒழிக்கும் நோக்குடன் தியானத்தில் நின்றான்.

145.
சுத்திஓர் எட்டில்தூயான் ஒன்பதாம் யோகில் ஊற்றுப்
 பத்தையும் தடுக்க அங்கம் பதினொன்றில் பயின்ற ஞானம்
 சித்தம் பன்னிரண்டில் சென்று சிந்தையை முறுக்கி யிட்டுப்
 பத்துமூன் றாகி நின்ற கி¡¢யைப் பயின்றிட் டானே.
தூயோனாகிய மாமுனிவன் எட்டு வகையான தூய்மைகளினால் ஒன்பது யோகங்களை ஏற்று, பத்துவித ஊற்றுகளைத் தடுத்துப் பதினோரு ஆகம அறிவினைப் பெற்றுப் பன்னிருவகைச் சிந்தனைகளில் மனதைச் செலுத்தி அசையாத் தியானத்திலே நின்று பதின்மூன்று ஒழுக்கங்களை ஏற்கும் பயிற்சியில் நின்றான்.

  சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page