Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
224.
மந்தரம் நடுவ தாகக் குலமலை ஆறின் வந்த
 அந்தரத்து ஏழு நாடாம் ஆறும் ஈரேழ தாகிச்
 சுந்தரத் தடங்கள் ஆறில் சூழ்ந்தவே திகைத்து மாகி
 நந்திய மதியின் நின்ற நாவலம் தீவினுள்ளால்.

உலகின் மையப் பகுதியில் மேருமலையும், பக்கங்களில் ஆறுகுல மலைகளும், இடையே பரதம் முதலிய ஏழு நாடுகளும், பதிநான்கு நதிகளும், அழகிய பொய்கைகள் ஆறும் இவற்றைச் சூழ்ந்து மாபெரும் உப்புக் கடலானது பலம்மிக்க அகழி போல் இருக்க முழுமதி போல் வட்டமாக நிலைபெற்றிருந்த 'சம்புத் தீவிலே-

225.
பாகதுண் டத்தைப் போலும் பரதகண் டத்துச் செம்பொன்
 நாகதுண் டத்தை ஒக்கும் தருமகண் டத்து நல்ல
 போகதுண் டத்தைப் போலும் சீயமா புரத்தைச் சூழ்ந்து
 மேகதுண் டங்கள் மேயும் சோலைநா டுண்டு திங்கள்.

அரைச்சந்திரனைப் போன்ற பரத கண்டத்தில், பொன்மயமான விண்ணுலகத்தைப் போன்ற நல்ல தரும கண்டத்திலே, போகபூமிக்கு நிகரான 'சீயமாபுரம்' என்னும் நகரத்தைத் தலைமையாகப் பெற்று, கார்முகில்கள் தவழும் சோலைகள் நிறைந்த நாடு ஒன்று விளங்கியது.

226.
சீயமா புரத்தின் தன்மை செப்புவன் சிறிது கேண்மோ
 காயம் ஆறாகச் செல்வோர் கண்டபின் கடந்து போகார்
 தூயவாம் தலம் செய் குன்றம் சோலைகள் மாடம் தம்மால்
 சேயிழை மட நல் லார்போல் சித்தத்துக் கினிய தொன்றே.

இனி சீயமாபுரத்தின் சிறப்பினைச் சிறிது சொல்லுகின்றேன் கேட்பீர்களாக! விண்ணிலே செல்லுகின்ற வானவர்கள் இதைக் கண்ணுறின் மேலே போகமாட்டார்கள்; பல்வேறு தூய இடங்களும், செய் குன்றுகளும், சோலைகளும், மாட மாளிகைகளும் காண்பதற்கு அணிகளை அணிந்த மடமையும், அழகும் மிக்க மங்கையர்களைப் போல் உள்ளத்திற்கினிய தோற்றத்துடன் காட்சியளித்தன.

227.
செப்பிய நகர்க்கு நாதன் சீயமா சேனன் என்பான்
 வெப்பம்நின்று அறாத வேலான் வேந்தரை வென்ற பெற்றிக்கு
 ஒப்புமை இன்றி நின்றான் உதவிகற் பகத்தை ஒப்பான்
 துப்புறழ் தொண்டை வாயார் தொழுதெழு காமன் கண்டாய்.

மேலே கூறப்பட்ட சீயமாபுரத்தின் மன்னன் சீயசேனன், பகைவர்கள் மீது கொண்ட சினம் தணியாத வேலினை யுடையவன்; மாற்றார்களை வெல்வதில் நிகரற்று விளங்கியவன், வா¡¢ வழங்குவதில் கற்பகத்துக்கு இணையானவன், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையுடைய மங்கையர் மகிழ்ந்து வணங்கும் காமனுக்கு ஒப்பானவன்.

228.
ஊன் உமிழ்ந்து இலங்கும் வைவேல் மன்னவன் உள்ளத் துள்ளான்
 தேன் உமிழ்ந்து இலங்கும் ஐம்பால் தேவிதான் இராம தத்தை
 வான் உமிழ்ந்து இலங்கும் மின் போல் வருந்து நுண் இடையாள் வா¡¢
 தான் உமிழ்ந்து பெய்த கலசம் போல் தனத்தி னாளே.

ஊன் சிந்தி இலங்கும் கூர் வேலினையுடைய மன்னனது உள்ளத்தே உறைபவள், தேன்சிந்தும் ஒளிமலர்களுடைய ஐந்து விதமாக அலங்கா¢க்கப்பட்ட கூந்தலையுடையவள், வானத்து மின்னலைப்போன்ற இடையுடையவள், பாற்கடலில் தோன்றிய அமுத கலயத்தைப்போன்ற தனங்களையுடையவள், இவளே மன்னன்தேவி 'இராமதத்தை' என்பவள்.

  பத்ரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page