Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
357.
அமிர்தகரன் ஒளியின் முனி அறவுரை சென்றெறிப்பத்
 திமிரமென நின்றவினை தீர்த்தெழுந்த மதியிற்
 குமதமென மலர்த்துவதம் ஆற்றுவன கொண்டே
 அமலனடி மனக்கமலத் தருக்கனில் வைத்தெழுந்தான்.
முழுமதியின் குளிர்ந்த ஒளிக்கதிர்கள் படிந்தவுடனே மலரும் அல்லி மலரைப் போல் வரதர்ம முனிவா¢ன் அறவுரைகளைக் கேட்டு அறியாமை இருள் நீங்கி துலக்க மெய்திய பத்திரமித்திரன் மகிழ்ந்து தனது ஆற்றலுக் கேற்ப விரத ஒழுக்கங்களை மேற்கொள்ள உறுதி பூண்டு குற்றமற்ற கதிரவன் போன்ற இறைவனது அடிகளைத் தனது இதயத் தாமரையில் ஏற்றவனாய் நகரத்திற்குப் புற

358.
எழுந்து முனியிருகமல பாதந் தொழு தேத்திச்
 செழுங்கனக மாடமிசைச் சீயபுரம் புக்கு
 முழங்கி யெழுமுகிலிற் பொருள் முழுதும் வறியோர்க்கு
 வழங்க மனத் தழுங்கி யுரைத்தாள் அவன் தன் மாதா.
வரதர்ம முனிவரது பாத கமலங்களை வணங்கித் தொழுது சீயமாபுரத்தேயுள்ள வளமிக்க தனது மாளிகையை அடைந்த பத்திரமித்திரன் முழங்கும் மழை மேகத்தைப் போல் தனது செல்வம் அனைத்தையும் வறியோர்க்கு வழங்கத் தொடங்கினான். அதைக் கண்ட அவனது அன்னை மிகவும் வருந்தி மனம் புழுங்கி மகனை நோக்கிக் கூறினாள்.

359.
குலம் பொ¢ய குணம் அறிவு வடிவு குடிப்பிறப்பு
 பொலங் கையுடை யவர்க்கலது புகழ்ச்சி யினிதடையா
 இலங்கு மனையாளும் பொருளில்ல விடத்து இகழும்
 அலங்கல் வரை மார்ப் பொருளாதல் இனி அழியேல்.
மலைபோன்ற மார்பினையுடைய மகனே; உயர்குலம், நற்பண்பு, நல்லறிவு, அழகு, குடிப்பிறப்பு, புகழ் இவையனைத்தும் செல்வமுடையவர்க்கே சேரும், பொருள் இல்லையேல் நல்ல பண்புடைய மனைவியும் மதிக்காது இகழ்வாள். எனவே இருக்கும் செல்வத்தை வீணாக அழிக்காதே என்றாள்.

360.
காதல் மிகு தாய்மொழியில் ஆதரம் ஒன்றின்றிப்
 போதர வெணாது பொருள் முழுதும் அவன் ஈயக்
 கோதம் எ¡¢ போன்றவனைக் கொல்லும்படி சூழ்ந்து
 தீது தனக்காக்கி மனம் சிதைந் தொழுகும் வழிநாள்.
ஆசையுடன் அன்னை கூறியவற்றில் கொஞ்சமும் ஆர்வம் காட்டாத பத்திரமித்திரன் தனது செல்வத்தைப் போற்றிக்காக்க வேண்டுமென்ற எண்ணமின்றி இருப்பவற்றை ஏற்போர்க் களிக்கக்கண்ட தாயானவள் மகன் மீது தீ நிகர் செற்றம் கொண்டவளாய் இவனை ஒழித்து விட்டால் என்ன என்ற எண்ணம் கொண்டவளாய் அது பற்றியே சிந்தித்து மனம் கொதித்து அவன் மூலம் பாபத்தை மிகுத

361.
ஆங்கவன் தன் சொன் மறுத்த அழற்சியினும் பொருள்கள்
 நீங்க எழும் ஆர்த்தத்தினும் அவ்வுடம்பு நீத்துப்
 பூங்குழலி ஓங்கிய அதிங்கவனம் புக்கு
 வேங்கை மகவாய் மகன்கண் வேரத்தொடும் பிறந்தாள்.
அழகுமிக்க கூந்தலையுடைய சுமித்திரையானவள் தனது பேச்சைக் கேட்க வில்லையே என்ற ஆத்திரத்தினாலும், செல்வமெல்லாம் அழிகிறதே என்ற வருத்தத்தினாலும் வாழ்வு முடிந்து அந்நகா¢ன் அண்மையிலுள்ள ஓர் வனத்தில் மகன் மீது வைத்த வைரத்துடன் புலிக்குட்டியாகப் பிறந்தாள்.

  பூரண சந்திரன் அரசியற் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page