Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
454.
வாசநின் றறதா சோலை மழையென மதுக்கள் பெய்து
மூசுதேன் முழங்க மஞ்சை முகிலென அகவி முத்தின்
தூசுலாம் அலங்க லார் போல் தொடங்கிய நடங்கள் ஓவாக்
கோசலை என்ப துண்டுஇக் குவலயம் புகழும் நாடே.
நறுமணம் நிறைந்து நிற்கும் மலாச்சோலையில் மலர்களிலிருந்து மழை போல் சொ¡¢யும் தேனை உண்டு முழங்கும் தேனீக்களின் கூட்டு ஒலியினை மேகத்தின் முழக்கமாக நினைத்து மயில்கள், முத்துக்கள் தொடுத்த முன்தானைப் பூந்துகில் புனைந்து எழில் பெற ஆடும் இள நங்கையர் போல், அழகிய தோகையை வி¡¢த்து அழகாக ஆடும். இத்தகு உலகம் புகழும் கோசலை என்னும் பெ

455.
திருத்தகு நாடி தற்குத் திலகமாய்த் திகழ்ந்து சென்றர்
வருத்தந் தீர் மாட மூதூர் மறையவ ருறையும் மாண்ட
விருத்தநல் கிராமம் தன்னுள் மிருகாயணன் என்று மிக்கான்
ஒருத்தனங் குளனற் சாந்தி உருவு கொண்டனைய நீரான்.
செல்வம் செழித்த இந்த நாட்டிற்குத் திலகம் போல் விளங்கித் தன்னை அடைந்தவர்களுடைய துன்பங்களைத் துடைப்பதும், மாட மாளிகைகள் நிறைந்த மிகப் பழைமையானதும், அந்தணர்கள் வாழ்விடமாகவும் விளங்கிய மாண்புமிக்க அதன் பெயர் விருத்த கிராமம் என்பது. அங்கே மிகச் சிறந்தவனும் அமைதியே உருவானவனுமாகிய 'மிருகாயணன்' என்பவன் வாழ்ந்து வந்தான்.

456.
அதிர்பட நடத்தல் இல்லாள் அவன் மனைக் கிழத்தி அஞ்சொல்
மதுரையென் றுரைக்கப் பட்டாள் மகளும்வா ருணியா முத்தின்
கதிர்நகைக் கருங்கண் செவ்வாய்க் கால்பரந் தெழுந்து பொன்னின்
பிதிர்பரந் திருந்த கொங்கைப் பிணையனாள் ஒருத்தி யானாள்.
மென்மையான நடையும், இனிய சொற்களையுமுடைய 'மதுரை' என்பவள் அந்த அந்தணனுக்கு மனைவியாக விளங்கினாள். அவர்களுக்கு ஒரே மகள் 'வாருணி'. அவள் முத்துப் போன்ற பற்களையும், சிவந்த வாயினையும், தேமல் படர்ந்த தனங்களையுமுடையவளாய் பெண் மான் போன்ற அழகுடன் பொலிந்தாள்.

457.
கதிர்மறை பொழுதிற் கான்ற கமலமும் குவளையும்போல்
மதுரையும் மகளும் வாட மறையவன் மா¢த்துப் போகி
எதிர்வரு பிறவி யில்லார் இடையறா அயோத்தி யாளும்
மகிபலன் தனக்குத் தேவி சுமதிக்கும் அ¡¢வை யானான்.
கதிரவன் மறையும் மாலை நேரத்தில் தாமரையும், குவளையும் அழகிழந்து வாடுவதுபோல் மனைவியும், மகளும் மனம் கலங்க அந்தணனாகிய மிருகாயணன் இறந்து போய் பிறவியைப் போக்கும் புண்ணிய நகரமான அயோத்தி நகரத்தின் மன்னன் மகிபாலனுக்கும் மனைவி சுமதிக்கும் மகளாகப் பிறந்தான். (அவள் பெயர் இரணியவதி)

458.
இரணிய வதியென் பாள்பேர் இளமயில் அனைய சாயல்
வா¢சிலைப் புருவச் செவ்வாய் வல்லிதான் வளர்ந்த பின்னைத்
தரணிமேல் அரச ரெல்லாம் தையலைத் தருக என்னச்
சுரமைநா டுடைய தோன்றல் திண்புயம் துன்னு வித்தார்.
இரணியவதி என்னும் பெயருடைய அரசிளங்குமா¢ மயில் போன்ற சாயலையும், வளைந்த வில் போன்ற புருவங்களையும், செந்நிற வாயினையும் பெற்று மலர்க்கொடிபோல் உலகத்து மன்னர்களெல்லாம் அவளை மணம் விரும்பி வேண்ட இறுதியில் சுரமை நாட்டின் வலிமை மிக்க தோள்களையுடைய வேந்தன் பூரசந்திரனுக்கு மணம் முடிக்கப்பட்டாள்.

  நால்வரும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page