Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
561.
வெற்றிவேல் வேந்தனும் வேந்தன் தேவியும்
 கொற்றவக் குமரரும் கோவை யெய்தினார்
 மற்றிந்த நிலத்திடை வந்து நால்வரும்
 உற்றன உரைப்பன்கேள் உரக ராசனே.
ஆதித்யாப தேவன் தரணேந்திரனை நோக்கிக் கூறுவான்: தரணேந்திரனே! வெற்றி தரும் வேலினையுடைய சிம்மசேன மன்னனும் அவன் தேவியும் அரச குமாரர்கள் இருவரும் தத்தம் தகுதிகளுக்கேற்ப முறையாக விண்ணுலக வாழ்வை எய்தினர். மீண்டும் அவர்கள் நால்வரும் இம்மண்ணுலகில் தோன்றி அடைந்தனவற்றைக் கூறுகின்றேன் கேட்பாயாக.

562.
பாகரப் பிரபனாம் பாவை யாயுகம்
 சாகரத் துள்ளது பதினை நாளென
 நாகா¢ற் பி¡¢வெனா நடுங்கிற் றாற்றவும்
 பாகரப் பிரபையுட் பா¡¢ சாதமே.
முன்பு இராமதத்தையாக இருந்து இப்போது பாகரப்ரபனாக உள்ள தேவனது பதினாறு கடற்கால ஆயுள் முடிய இன்னும் பதினைந்து நாள்களே உள்ள என்ற நிலையில், இவன் அமரர்களிடமிருந்து பி¡¢யப்போகின்றான் என்பதற்கடையாளமாக பா¡¢சாத கற்பக விருட்சங்களானவை நடுங்கத்தொடங்கின.

563.
கற்பகம் சலிப்பது கண்ட தேவரும்
 மற்றவர் சிந்தையுள் நடுங்கி வாடினார்
 கற்பகத் தொடையலும் கண்ட மாலையும்
 பொற்பழிந் தணிகளும் மாசு போர்த்தவே.
அவ்வாறு கற்பகத் தருக்கள் நடுங்குவதைக் கண்ட தேவர்களும் மற்ற தேவ மாதர்களும் மனம் கலங்கித் சோர்த்தனர். பாகரப்ரபன் அணிந்திருந்த கற்பக மலர்மாலைகள் வாடத் தொடங்கின. கழுத்தில் அணிந்திருந்த மணி மாலைகளும் பொலிவிழந்து மாசு படிந்து மங்கிப் போவதைக் கண்டு தேவன் மிகவும் வாட்டமுற்றான்.

564.
மதியொளி பதினை நாடோறு மாய்ந்திடா
 விதியொளி மாசுறீஇ வீயு மாறுபோல்
 முதிர்மதி யனையொளி மூர்த்தி மாசுறீக்
 கதிர்கழன் றிடுவது கண்டு வாடினான்.
ஒளிமிக்க முழுமதியானது பதினைந்து தினங்களில் நாள்தோறும் முறையாகத் தேய்ந்து முற்றும் ஒளியிழத்தல் போல் பொலிவுற்ற அவனது தேகம் மாசுற்று ஒளி அழிவதைக் கண்டு மிகவும் வாட்டமுற்றான்.

565.
தேவனாய் அமளியைச் செறிந்த நாள்முதல்
 ஓவிலா வகையவன் உற்ற இன்பமோர்
 தாவமாய்த் திரண்டுவந் தடுவ தொக்குமாம்
 மூவைநா ளகவையின் முடிந்த துன்பமே.
அவன் அமரப் பிறவியை எய்தியது முதல் இதுவரை அதாவது பதினாறு கடற்காலம் வரையில் எய்திய குறைவற்ற இன்பமெல்லாம் ஒன்றுதிரண்டு காட்டுத்தீயாக மாறி தன்னைச் சுடுவது போன்ற துன்பத்தை எய்தினான்.

  மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page