Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
சக்ராயுதன் முக்திச் சருக்கம்
749.
உலகமெனும் திருவினிடை உந்தியெனச் சம்பூத்
 தலம்நிலவு பரதமலி தருமகண்டம் அதனில்
 புலவர்புகழ் வா¢யபு¡¢ சக்ர புரமென்று
 உலகுடைய இறைவனுறை நகரமென உளதே.
உலகம் என்னும் திருமகளின் நாபியைப் போல் உள்ள சம்பூத்தீவில் அமைந்த, பரத §க்ஷத்திரத்தில் இருக்கும் தருமக் கண்டத்தில். கவிஞர்களாலும் புனைந்துரைக்க இயலாத அழகுமிக்க நகரம் 'சக்கரம்' என்பது, அது அருக பெருமான் எழுந்தருளி இருக்கும் சமவ சரணத்தைப் போல் மிகவும் எழில் பெற்று விளங்குவதாகும்.

750.
கிடங்குமதிள் தெருவுகிடை மாளிகையின் ஒழுங்கும்
 நடுஅரசன் மாளிகையின் அமர்திருந்த நகரம்
 நுடங்குதிரை வேதகையோடு ஆறுகுல மலைகள்
 நடுவடைந்த மலையுடைய தீபமது அனைத்தே.
அந்நகரைச் சூழ்ந்துள்ள அகழ், மதில், நகா¢ல் உள்ள தெருக்கள், ஒழுங்கான மாளிகைகள் இவற்றின் மத்தியில் அரண்மனையும் பொருந்தி நின்ற இந்நகரம் அலைமிக்க லவணப் பெருங்கடல், அதற்குள்ள வேதிகை அறுவகைப்பட்ட வேராறுகள், குலமலைகள் மையத்தில் மேருமலை இவ்வாறு அமைந்த சம்பூத்தீவைப் போல் விளங்கியது.

751.
தோகையனை யார்கள்நடம் ஆடுமிடம் ஒருபால்
 பாகமிதி நுதலியர்கள் பாடுமிடம் ஒருபால்
 மேகமென வேகமுடை நாகநிலை ஒருபால்
 பூகமுத லாயமலி புறம்பனைய தொருபால்.
அந்நகா¢ல் மயில் போன்ற சாயலையுடைய அழகிய மாதர்கள் நடனமாடுமிடங்கள், பிறைமதி போன்ற நெற்றியை யுடைய மகளிர் இசை பொருந்த பாடும் இடங்களும் அமைந்திருந்தன. மேலும் மழை மேகத்தைப் போன்ற நிறமுடைய சினம் மிக்க யானைகள் கட்டும் சாலைகளும், அடுத்து பாக்கு போன்ற பயன்மிக்க மரங்கள் நிறைந்த இடங்களும் சிறந்திருந்தன.

752.
வானினை அளந்துவரும் வாசிநிலை ஒருபால்
 ஊனுறையும் வேற்படை அடைக்குமிடம் ஒருபால்
 தேனுலவு கூந்தலவர் திளைக்குந்தெரு ஒருபால்
 ஆனைமிசை வரும்துணிகர் அவா¢டங்கள் ஒருபால்.
மேலும், விண்ணில் தாவிச் செல்லும் வேகமுடைய புரவிகளும், ஊன் நிறைந்த வேல், வாள் போன்ற ஆயுதங்கள் நிறைந்த ஆயுத சாலைகளும், வண்டுகள் மொய்க்கும் மலர்க் கூந்தலினை யுடைய பொதுமகளிர் வாழும் இடங்களும், யானை மீது இவர்ந்து வரும் பெருங்குடி வணிகர் இருக்கும் கடைத் தெருக்களும் நிறைந்துள்ளன.

753.
கந்தமலர் கந்தம்விழை கைவலவர் ஒருபால்
 அந்தமிலா அறிவனுறை ஆலயங்கள் ஒருபால்
 வந்துலகம் இறைஞ்சமன்னன் இருக்குமிடம் ஒருபால்
 அந்தமிலா இன்னவிடம் யார்க்குமுரைப் பா¢தே.
மணம் மிக்க மலர்களையும், நறுமணப் பொருள்களையும் இணைத்துச் செய்யும், கைவினைஞர்கள் வாழிடங்களும். அடுத்து கடையிலா ஞானத்தையுடைய அருக பெருமான் ஆலையங்களும், உலகத்தவர் வந்து வணங்கக்கூடிய மன்னனின் அரண்மனையும் பொருந்திய தாகும். எண்ணற்ற இது போன்ற இடங்களின் பெருமையை உரைத்தல் யார்க்கும் அ¡¢தாகும்.

  சக்ராயுதன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page