Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
813.
அரசனாய நல் அரதனாயுதன் 
 பிரச மார்குழல் பிணைய னாரொடும்
 வரைசெய் தோளவள் மகிழ்ந்த வார்த்தையை
 உரைசெய் வன்இனி உரக ராசனே.
நாகேந்திரனே! மிகச் சிறந்த மன்னனாகிய இரத்தினாயுதன் மலைபோன்ற வலிமைமிக்க தோளினையுடையவனாய், வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய பெண் மான் போன்ற மங்கையருடன் மகிழ்ந்திருந்த, இன்ப வாழ்வைப் பற்றி இனிக் கூறுகின்றேன் கேட்பாயாக.

814.
வாம மேகலை மயிலம் சாயலார்
 காமக் கேட்டியுள் கழுமும் காதலால்
 சேம நல்லறம் செப்பில் தீயிடை
 ஆமை போல்அவன் அவல மெய்துமே.
அழகிய மேகலையணிந்த மயில் போன்ற சாயலையுடைய, விரும்பத் தக்க மங்கையா¢டத்தில் அன்புமிக்கவனாய், நன்மை தரவல்ல நல்லறத்தின் பால் வெறுப்புற்று, அதைக் கேட்கும் போது நெருப்பிடைபட்ட ஆமை போல் துன்புற்றான்.

815.
அரசும் இன்பமும் கிளையும் ஆயுவும்
 விரைசெய் தாரவன் வீயும் என்றெணான்
 திரைஉ டுத்தஇப் படிமி சைத்தனது
 அரசு நிற்பதே யாக எண்ணுமே.
தான்யெய்திய அரசும், இன்பமும், சுற்றமும், ஆயுளும் அழியக் கூடியது என்பதை மணம் மிக்க மாலையணிந்த அவ்வேந்தன் உணராதவனாய் அலை கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் தனது ஆட்சி அழிவற்றது, நிலையானது என்று நம்பினான்.

816.
பொறியின் போகமும் புண்ணியத்தின் வந்து
 உறுவது என்றெணான் உம்பர் இன்பமும்
 மறுவில் வீடும்மற் றில்லை மாய்ந்தவர்
 பிறவி யும்இலை என்று பேசுமே.
தான் அடைகின்ற இன்பங்களானவை தனது புண்ணியத்தின் பயனாகும் என்னும் உணர்வில்லாததோடு தேவ வாழ்வோ, குற்றமற்ற வீடுபேறோ, இறப்பவர் மீண்டும் பிறப்பர் என்பதே இல்லை என்றும் பேசினான்.

817.
கற்ற மாந்தராய்க் காமச் செல்வத்தில்
 பெற்ற இன்பத்தைப் பிழைக்க விட்டுப்போய்
 மற்றும் இன்பமேல் வரவ ருந்துதல்
 உற்ற ஊன்நா¢ விட்ட தொக்குமே.
மேலும், அவன் கற்றறிந்த மனிதர்களாய் பொருந்திய செல்வத்தால் அடையும் இன்பத்தை அனுபவியாது விட்டுத் துறந்து போய் மேலும் பொ¢ய இன்பம் வேண்டி வருந்துதல் நா¢யானது நீ¡¢ல் கண்ட மீனைக் கவ்விப் பிடிக்க வாயில் வைத்திருந்த இறைச்சியை இழந்ததைப் போன்றதாகும்.

  வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page