Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
891.
மந்தி¡¢ மன்னன் தம்மின் மாறுமா றாகிக் கீழ்மேல்
 இந்தியம் ஐந்தும் செல்லும் எல்லையை முடியச் சென்றார்
 வந்தவர் தம்மில் கூடும் அளவினின் றிளைய னாய
 மைந்தனும் தாயும் உற்ற மாற்றுஇனி உரைக்க லுற்றேன்.
அமைச்சனான சத்தியகோடனும் அரசன் சிம்மசேனனும் வேறு வேறான குணங்களையுடையராய் இருந்தமையால், நற்குணமுடைய ஐந்து பொறிகளையுடைய ஜீவன் அடையும் நற்கதியின் மேல் எல்லையாகிய சர்வார்த்த சித்தியில் மன்னனும், தீய பண்புகளையுடைய ஐம்பொறி ஜீவன்கள் அடையும் கீழ் எல்லையாகிய, ஏழாம் நரகத்தில் சத்தியகோடனும் எய்தினர். அவர்கள் அந்த இடங்களிலிருந்து மீண்டும் இம் மண்ணுலகிற்கு வந்து சந்திப்பதற்குள், இளைய மகன் பூரணச் சந்திரன், அவன் தாய் இராமதத்தை இவர்கள் இருவரும் அடைந்த பிறவிகளைப் பற்றிக் கூறுகின்றேன், என்றான் ஆதித்யாபன்.

892.
போதொடு தளிர்கள் செற்றிப் பொறிவண்டும் ஞிமிறும் பாடத்
 தாதொடு மதுக்கள் வீயும் தாதகி யுடைய தீபம்
 ஓதிய புகைகள் நானூ றாயிரம் உள்ள கன்று
 வேதிகை இரண்டில் சக்க வாளத்தின் விளங்கு நின்றே.
மலர்களும், தளிரும், நெருங்கி வண்டுகளும், ஞிமிறும் சேர்ந்து, ஒளிக்க, மகரந்தத்துடன் தேன் சிந்தும் தாதகி மரங்களை நெருக்கமாகவுடைய தாதகிஷண்ட தீபமானது நான்கு லட்சம் யோசனை அகன்றதாகும். அதன் உட்புறத்திலும், வெளிப்பக்கத்திலும் லவண, காளோதக பெருங்கடல்களின் வேதிகைகள் சக்ரவாள மலையைப் போல் வட்டமாகச் சூழ்ந்து விளங்குகிறது.

893.
மந்தரம் இரண்டும் மாண்ட குலமலை பன்னி ரண்டின்
 அந்தரத்தாறு நாலே ழாம்அத னகத்துக் கீழ்பால்
 மந்தர மதற்கு மேல்பால் சீதுதை வடக ரைக்கண்
 கந்திலை என்னும் நாடு காமுறும் தகைய துண்டே.
அந்தத் தாதகி கண்டத்தின் கிழக்கே ஒரு மேருமலையும் மேற்கே ஒரு மேமலையும், குல மலைகள் பக்கத்திற்கு ஆறாகப் பன்னிரண்டும் பக்கத்திற்குப் பதிநான்காக இருபத்தெட்டு ஆறுகளும் பொருந்தியுள்ளன. கிழக்கு மேரு மலைக்கு மேற்கே ஓடும் சீதோதா நதியின் வட கரையில் அனைவரும் விரும்பத்தக்க நாட்டின் பெயர் கந்திலை என்பதாகும்.

894.
விலங்கல்வீழ் அருவி வேழ மும்மதம் தேறல் வோ¢
 கலந்துடன் செல்லும் ஆறு கயந்தலைப் பட்ட காலைச்
 சலஞ்சலம் பி¡¢ந்த காத லார்தமைக் கண்ட போழ்தில்
 அலங்கலம் குழவி னார்போல் அமர்ந்தினிது ஒழுகு நாட்டுள்.
அந்த நாட்டின் மலைவீழ் அருவி நீருடன், ஆண் யானைகளின் மும்மத நீரும், மலைத்தேனும் மற்ற நறுமணப் பொருள்களும் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடி மடுக்களை அடையும்போது மடுக்களிலுள்ள சலஞ்சலம் என்னும் சங்கினங்கள், தம்மைப் பி¡¢ந்து சென்ற அன்புடைய காதலர்கள் திரும்பி வந்ததைக் கண்டு பொங்கும் மணமுடைய பெண்களைப் போல் நிறைந்த நகரத்தின் பெயர் 'அயோத்தி' என்பதாகும்.

895.
கதலியின் குலைகள் செம்பொன் கொழுங்கனி கான்று நான்று
 மதலையைச் செறிந்த வற்றை மயிலன்ன சாய லார்தம்
 மதலையம் புதல்வர்க் குண்ணக் கொடுத்தெடுத் துவர்க்கும் செம்பொன்
 குதலைஅம் மாட மூதூர் அயோத்திமா நகர மாமே.
அந்நாட்டில் நெடிது வளர்ந்த வாழை மரங்களின் பொன் போன்ற நிறமுடைய பழக்குலைகள் மாளிகை விளிம்பில் சாய்ந்திருக்கவும் மாடியில் உள்ள மயில் போன்ற மகளிர் குதலை மொழி பேசும் தங்கள் குழந்தைகளுக்கு அக்கனிகளை உண்ணும்படி கொடுத்து அவர்களை எடுத்துக் கொஞ்சும் மாளிகைகள் நிறைந்த நகரத்தின் பெயர் அயோத்தி என்பதாகும்.

  பலதேவன் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page