Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
566.
சூகர மாகித் தோன்றித் துயருறும் உயிர்கள் துன்பத்து
 ஆகர மாகி நின்ற வவ்வுடம் பிடுத லாற்றா
 நாகருக் கிறைவ ராகி விண்ணினை நண்ணி வீழ்வார்
 சோகமும் துயரும் நம்மால் சொல்லலாம் படிய தொன்றோ.
இழிபிறப்பாகிய பன்றியாக பிறந்து எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், அதுவும் தனது மரணத்திற்குப் பொ¢தும் வருந்தும். அப்படியிருக்க கல்ப உலகத்து தேவர்களுக்கு தலைவராகி இன்பமுற்றோர் இறக்கும் காலத்து அவர்கள் மனம் வருந்தி எய்தும் துன்பத்தைக் கூறுதற்கும் கூடுமோ!

567.
கானொ¢ கவரப் பட்ட கற்பகம் போல வாடி
 வானவன் இருந்த போழ்தின் வந்துசா மான தேவர்
 தேனிவர் அலங்க லாய்இத் தேவர்தம் உலகிற் சின்னாள்
 வானவ ¡¢ருந்து பின்னை வழுத்தரல் மரபி தென்றார்.
அந்த வானவன் காட்டுத்தீயால் வளைக்கப்பட்ட கற்பக மரம் போல வாடிக்கிடந்து காலத்து அங்குள்ள மற்ற சாதாரண தேவர்கள் அவனை நெருங்கி, முரலும் மாலையணிந்த தேவனே! விண்ணுலகில் தேவர்களாகத் தோன்றுவோர் சில நாட்கள் இன்ப வாழ்வு வாழ்ந்து பிறகு தங்கள் ஆயுள் முடிந்து மறைந்து போதல் தொடர்ந்து வருகின்ற மரபாகும் என்று கூறினர்.

568.
கணங்கணந் தோறும் வேறாம் உடம்பினைக் கண்டு பின்னும்
 மணந்துடன் பி¡¢ந்த வற்றுக் கிரங்குவார் மதியி லாதார்
 புணர்ந்தவை பி¡¢யும் போழ்தும் புதிய வந்தடையும் போழ்தும்
 உணர்ந்துறு கவலை காதல் உள்புகா ருள்ள மிக்கார்.
மேலும் ஒவ்வொரு கணமும் மாறும் இயல்பினை உடைய இவ்வுடம்பினை தன்மையை உணர்ந்த பிறகும், நம்முடன் சேர்ந்து பி¡¢ந்து போகின்ற அவைகளுக்காக வருந்துகின்றவர்கள் அறிவிலர் ஆவர். உடன் சேர்ந்தவை பி¡¢யும் காலத்தும், புதியன வந்து சேரும் போதும் அவற்றின் இயல்பை உணர்ந்து அதற்காக நல்லறிவாளர் வருந்துவதோ மகிழ்வதோ இல்லை என்றனர்.

569.
அறம் பொருளின் பமூன்றில் ஆதியா லிரண்டு மாகும்
 இறந்ததற் கிரங்கி னாலும் யாதொன்றும் பின்னை யெய்தா
 பிறந்துழி பொ¢ய துன்பம் பிணிக்குநல் வினையை யாக்கும்
 அறம்புணர்ந்து இறைவன் பாதம் சிறப்பினோ டடைக வென்றார்.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களில் முதலில் உள்ள அறத்தின் பயனால் பொருள் இன்பம் இரண்டும் வந்தடையும். நம்மை நீங்கிப் போன எதுவொன்றும் எவ்வளவு இரங்கி வேண்டினாலும் திரும்பிவர மாட்டா. அதற்காக நாம் பொ¢தும் வருந்தி உயிர்நீத்தாலும் மீண்டும் பிறந்து பெருந்துன்பமே வாட்டும். எனவே நல்வினையாகிய புண்ணியத்தை அளிக்கும்

570.
என்றவ ருரைத்த மாற்றத் தொ¢யுறு மெழுகு நீருட்
 சென்றது போலத் திண்ணென் றிவைவனற் சிறப்போ டொன்றி
 நின்றநா ளுலப்ப மின்னி னீங்கினான் நிலத்தைச் சேர்ந்தான்
 அன்றைய நிதானத் தாலே அ¡¢வையாய் உரகர் கோவே.
மற்ற தேவர்களால் எடுத்துரைக்கப்பட்ட நல்லுரைகளால் நெருப்பில் உருகிய மெழுகுகானது நீ¡¢னால் உறுதிப்பெற்றது போல் பாஸ்கர தேவனது மனம் ஒரு நிலைப்பட்டு, அருகப்பெருமானது அர்ச்சனையில் ஈடுபட்டு, அதே சிந்தனையுடன் எஞ்சிய நாட்கள் கழிய மின்னலைப்போல் அவ்வுலக வாழ்வை நீத்து முற்பிறவியின் நிதானத்தால், மண்ணுலகில் வந்து தோன்றினான்.

  மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page