Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
754.
இந்நகர் இதற்கிறைவன் ஏத்தா¢ய கீர்த்தி
 மன்னன் அபராசிதன் வயப்புலியோ டொப்பான்
 அன்னம்அனை யார்மதனன் ஆண்டகைப் புயத்தைத்
 துன்னிய வசுந்தா¢ துளும்பிய நலத்தாள்.
இத்தகு பெருமை பொருந்திய புகழ் மிக்க இந்நகர வேந்தன் அபராசிதன் என்னும் பெயருடையவன். இவன் போர்ப்புலிக்கு நிகரானவன். அன்னம் போன்ற அழகிய மகளிர்க்குக் காமன் போன்றவன். அவனது தோளைத்தழுவும் உ¡¢மை பெற்ற பட்டத்தரசி நலமனைத்தும் ஒருங்கமைந்தவள் வசுந்தா¢ என்னும் பெயா¢னள்.

755.
மழலைக்கிளி தேனமிர்தம் வான்கரும்பு நல்லியாழ்
 குழலொத்தெழும் மொழிமதனன் கொடிமயிலம் சாயல்
 உழையிற்பொலி நோக்கத்துரு வக்கொடியி னோடு
 அழல்ஒத்திடும் வேலவன்றான் அமர்ந்தொழுகும் வழிநாள்.
கிளி போன்ற குரல், தேன், அமுதம், கரும்பு, யாழ், குழல் இவற்றிற்கு நிகராகப் பல்வேறு தன்மைகள் பொருந்திய இனிமை மிக்க பேச்சினையும், காமனுடைய கொடி அடையாளமான மீன் போன்ற கண்களையும், மயில் போன்ற சாயலையும், பெண் மான் போன்ற மருண்ட பார்வையையும், மலர்க்கொடி நிகர் அழகினையுமுடைய, வசுந்தா¢யுடன், நெருப்பின் நிறமுடைய வேல் ஏந்த

756.
தேசுடைய சீயசந்தன் கேவச்சத்தின் வழுவி
 வாசமுல வும்குழலி மங்கைதன் வயிற்றுள்
 தூசுபொதி பாவையெனத் தோன்றியவன் மண்ணோர்க்கு
 ஆசைகெட வந்ததொரு மாமணிய தானான்.
முன்பே உபா¢ம உபா¢மம் என்னும் அமர உலகில் வாழ்ந்த ஒளிமிக்க 'சிம்மச்சந்திரன்' அமர வாழ்வை நீத்து மணமிக்க கூந்தலைப் பெற்ற வசுந்தா¢யின் வயிற்றில் தூய தூசினால் மூடப்பட்ட சித்திரப்பாவை போல் மகனாகப் பிறந்து இம் மண்ணுலகத்தவர் ஆசையை நிறைவேற்றும் ஒப்பற்ற இரத்தினத்துக்கு நிகராக விளங்கினான்.

757.
செக்கர்மலி வானினிடைத் திங்களென வந்தாங்கு
 அக்குலம் விளங்க அண்ணல் தோன்றிய கணத்தே
 விக்கிரம சாலிவினை யெட்டும்வெலு மென்றே
 தக்கபெய ரும்சக்க ராயுதன்என் றிட்டார்.
செந்நிற வானத்தில் தோன்றிய பிறைச் சந்திரனைப் போல் குலம் விளங்கும் வண்ணம் அவன் பிறந்த போது மிக்க வலியினையுடைய இப்புத்திரன் வினை எட்டினையும் வெல்வான் என்னும் தகுதியுடைய 'சக்ராயுதன்' எனப் பெயா¢ட்டனர்.

758.
மங்கையர்தம் கொங்கைக்குவட் டிழிந்து நிறைமதிபோல்
 பொங்குதவி சினிடைச்சிங் கப்போதகத்தின் அடிநல்
 செங்கமல நிலமடந்தைச் சென்னிமிசை யணிந்து
 பொங்கும்இமி லுடையவிடை போலநடந் தானே.
அக்குழந்தை மங்கையா¢ன் தனமாகிய மலைக்குவட்டிலிருந்து இறங்கி பிறை மதிபோல், மென்மையான இருக்கைகளில் சிங்கம் போல் தவழ்ந்து, தாமரை மலர் போன்ற பாதங்களை நிலமகளின் சிரசில் பொருத்தி அதாவது தரையில் நடை பயின்று, இமில் உயந்த ஏறு போல் ஓடி விளையாடினான்.

  சக்ராயுதன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page