Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
559.
வாளா¢ யுழுவை கைம்மா வலையிடைப் பட்டு முய்வ
 நீளர ணாய நல்ல வினையது நின்ற போழ்தில்
 கோளா¢ ஏறு தன்னைக் குறுநா¢ யேனுங் கொல்லும்
 நீளர ணாய நல்ல வினையது நீங்கி னாங்கே.
ஆன்மாவிற்குப் பெருங்காவலாக அமைந்த அரண் போன்ற புண்ணியத்தால் வலிமைமிக்க சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகள் வலையில் சிக்கினாலும் தப்பிப் பிழைத்துப்போகும்; நல்வினைத் துணை நீங்குமானால் சிறு நா¢யும் பலம்மிக்க சிங்கத்தையும் கொன்றுவிடும்.

560.
தீக்கதிச் செலவினை நீக்கிச் சிந்தையின்
 நோக்கிலாப் பொருளையும் நோக்கி யின்பத்தை
 வீக்கியிம் மாற்றினை நீக்கி வீட்டினை 
 ஆக்கும்நல் லறத்தினை அமர்ந்து செய்மினே.
பவ்யர்களே! நரகம் முதலிய தீய கதிகளில் செலுத்தும் சினம், ஆசை போன்ற ஆன்ம விரோதத் தன்மைகளை ஒழித்து புலன்களால் உணரமுடியாத உயிர் முதலிய பொருட் தன்மைகளை உயர் ஞானத்தால் உணர்ந்து, ஆன்ம இன்பத்தை நிலையாக நிறுத்தி பிறத்தல், இறத்தலாகிய சம்சார வாழ்வை நீக்கி, வீடுபேற்றினை அளிக்கும் நல்லறத்தினை விரும்பி செய்வீர்களாக.

  நால்வரும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page