Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
746.
மறுவிலாக் குணத்தி னார்போய் வானவ ராக மாயாக்
 கறுவினால் பாந்தள் போகி நரகநான் காவ தெய்தி
 அறுபதோ டிரண்ட ரையாம் புகையுயர்ந் தெழுந்து வீழும்
 அறுபதோ டிரண்ட ரைவில் உயர்ந்ததோர் உடம்பு பெற்றான்.
மாசுமறுவற்ற ஒழுக்க நிலைகளில் உயர்ந்தவர்களான அம்மூவரும் தேவர்களாகத் தோன்ற, மலைப் பாம்பாகிக் கிடந்த சத்தியகோடன் வைர பாவனையால் மா¢த்து நான்காவது நரகத்தில் விழுந்து அறுபத்திரண்டு யோசனை உயரம் எழும்பி மீண்டும் விழத்தக்க அறுபத்திரண்டரை வில் உயரமுள்ள நரக உடலைப் பெற்றான்.

747.
அறத்தினூங்கு ஆக்க மில்லை என்பதும் இதனை ஆய்ந்து
 மறத்தினூங் கில்லை கேடும் என்பது மதித்தி வர்தம்
 திறத்தினே யறிந்து கொண்மின் தீக்கதிப் பிறவி யஞ்சில்
 மறத்தைநீத்து அறத்தோ டொன்றி வாழுநீர் வையத்தீரே.
உலக மக்களே! இதிலிருந்து உயர் அறத்தைக் காட்டிலும் உயர்ந்தது இல்லை, பாபத்தைக் காட்டிலும் கொடியதுமில்லை என்பதை இந்த வரலாற்றின் மூலம் உணர்ந்து இந்நால்வா¢ன் தன்மையினால் அறிந்துகொள்ளுங்கள். தீக்கதிப் பாபத்தை ஒழித்து அறத்தைப் பொருந்தி வாழ்வீராக.!

748.
மன்னனும் தேவியும் இளைய மைந்தனும்
 இன்னவ ராயினார் இனிய கேவச்சச்
 சென்னியிலி ருந்தஅச் சீய சந்திரன்
 தன்வர வுரைப்பன்கேள் தரண வேன்றனன்.
தரணேந்திரனே : மன்னன் சிம்மசேனனும் அவன் தேவி இராமதத்தையும் அவர் தம் இளைய மகன் பூரண சந்திரனும் இவ்வாறு காபிட்ட கல்பத்து தேவர்களானார்கள். அடுத்து மிகவும் சிறந்த உபா¢ம உபா¢ம கிரை வேயகத்தில் அகமிந்திர தேவனாக இருக்கும் சிம்மசேன மன்னனின் மூத்த மகன் சிம்ம சந்திரன் மீண்டும் பூமியில் வந்து பிறந்த வரலாற்றைக் கூறுகின்றேன் கேள்

  மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page