முகப்பு வாயில்

 


பண்டைய அறநெறியின் பகைவர்கள்

இப்பெற்றிய அறநெறி நூலை வைதீக சமயசார்புடையதாகக் காட்ட வேண்டியே பாமேலழகர் தம் உரையில் ஆங்காங்கு வைதீக சமயக் கொள்கைகளை வலிந்து புகுத்தி உரை எழுதிப் பரப்பினார். இச்செயலை பாமேலழகர் தம் உரைகளின் விளக்கத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார். தாம் தம் சமயக் கொள்கைகளை புகுத்திய இடங்களில் "இவ்வாறு கூறுவாரு முளர்" எனக் கீழே குறிப்பிட்டுச் செல்கின்றார். அக் குறிப்புகள்யாவும் பண்டைய அறநெறிகளின் சார்புடையனவேயாகும். அது மட்டுமல்ல, நாம் முன்னர் கூறியது போன்று பாமேலழகர் தம் உரைகளில் பெரும்பாலும் ஜைன நூல்களையே மேற்கோள் காட்டியுள்ளார்.

எனவே பாமேலழகர் ஜைன உரையாசிரியராகிய தருமர் உரையையே அங்கும் இங்கும் மாற்றி உரை எழுதியுள்ளார் எனில் மிகைபடக் கூறுவதன்று மறுக்க வியலாத இவ்வுண்மைகளால் பாமேலழகர் மக்கள் அறமாய், பொது நெறியாய் விளங்கும் திருக்குறள் அறநெறிகளை ஒரு சமயச் சார்புடையதாக அதாவது வைதீக சமய சார்புடையதாகக் காட்ட வேண்டி உரை எழுதிய சூழ்ச்சிகளில் ஒன்று தான் ஐந்த வித்துயர்ந்த அறவோர்களின் இயல்புக்கு மாறாக வைதீகப் புராணங்கள் கூறும் இந்திரன் கதையைத் திருக்குறளில் புகுத்தியது. அக்காலத்தில் பாமேலழகர், கையாண்ட குறுகிய மனப்போக்கைப் போன்றதே இக் காலத்தில் திரு.தெய்வநாயகம் மேற்கொண்ட செயல் திருவள்ளுவர்,

"ஐந்துவித்தான் ஆற்றல் அகல் விசும்புனார்
கோமான் இந்திரனே சாலும் கா"

என இந்திரனைக் குறிப்பிட்டது நாம் முன்னர் கூறிய வரலாற்றுப்படி, இந்திரன் ஐந்தவித்தோரின் ஆற்றலைக் வரலாற்றுப்படி, இந்திரன் ஐந்தவித்தோரின் ஆற்றலைக் கண்டு வியந்து, அத்தூயோரை வழிபடும் உயாய காட்சியையே சாட்சி எனக் குறிப்பிட்டாரேயன்றி சாட்சி கூறினார் எனக் குறிப்பிடவில்லை. எனவே திருக்குறளாசிரியர் ஐந்தவித்துயர்ந்தோரின் மாண்பினையும்; இந்திரனின் பெருந்தன்மையையும் இக்குறளால் வெளிப்படுத்தியுள்ளார் என்பதுதான் உண்மை.

இம்மாபெரும் மரபை, அகச்சான்றை, ஆட்சியை, இலக்கியங்கள் கூறும் உண்மைகளைப் புறகணித்துவிட்டுத் திரு. தெய்வநாயகம் அவர்கள் தம் கிறித்துவ சமயக் கொள்கையாகிய சான்று பகர்தல் எனும் ஆதாரமற்ற பொருளைத் திருக்குறளில் புகுத்தி இலக்கிய உலகில் மாபெருந் தவறை இழைத்துள்ளார்.

திருவள்ளுவர் மேற்கொண்ட முதல் நூலிலும் திருக்குறளிலும் ஆண்டவனைப் பற்றியோ, அவன் நீதிபதியாக விளங்கி நீதிபகர்பவனென்றோ, அவன் அடிக்கடி உலகில் தோன்றுவானென்றோ, பாவம் செய்தோரை மன்னித்து விடுவானென்றோ, இறந்த மனிதர்கள் மறுபடியும் பிறவாமல் ஆண்டவன் நீதியைப் பெறச் செல்வார்களென்றோ எங்கும் கூறவுமில்லை, அக்கொள்கைகள் உடன்பாடுமல்ல.

இவைகளுக்கு மாறாக இறந்த மனிதர்கள் அல்லது மற்ற ஜீவராசிகள் பிறந்தேயாக வேண்டும். இப்பிறவிகள் அவரவர் புரிந்த நல்வினைத் தீவினைகளுக்கேற்ப தன்மையும் தீமையும் அடையும் எனும் உண்மைகளை, சான்றுகளை முன்னரே கூறியுள்ளோம். அறிவியலோடு பொருந்தும் பண்டைய அறநெறிகளைக் கொண்ட தத்துவக் கொள்கைகளோ, ஆட்சியோ, அகச்சான்றோ ஒரு சிறிதும் கிறித்துவ நூல்களில் காணவியலாது. எனவே திரு. தெய்வநாயகம் அவர்கள் எழுதியுள்ள "ஐந்தவித்தான் யார்" எனும் நூலில் காணும் கூற்றுக்கள் யாவும் பொருந்தாக் கூற்றுகளேயாகும். நோதின் ஆராய்ந்தறியும் தமிழக அறிஞர்களேயன்றிப் பாரத நாட்டுப் பல்வேறு சமய அறிஞர்களும் திரு. தெய்வநாயகம் கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன்? கிறித்துவ அறிஞர்களும் வெறுப்படைவர் என்பது திண்ணம்.

வாழிய நல்லறம்
 

1  2  3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com