முகப்பு வாயில்

 
டாக்டர் வினோத்பால் அறிவுரை

இரண்டாவது உலகப்போர் முடிந்தவுடன் கல்கத்தாவில் உலக சமாதானக் குழு விஜயம் செய்தது. அக்குழுவினரை வரவேற்று உரை நிகழ்த்திய நீதிபதி டாக்டர். இராதாவினோத்பால் அவர்கள் ஆற்றிய பல்வேறு அறிவுரைகளின் இடையில்,

"எந்த சமாதானப் பிரியர்களின் மகாநாட்டுக்கும் பிரதிநிதிகளை அழைத்து நல்வரவு கூறும் உரிமை எவருக்கேனும் உண்டெனின், அது ஜைன சமூகத்தினருக்கே உரியது.

உலக சாந்தியை அடையவல்ல அஹிம்சை கொள்கையானது ஜைன தீர்த்தங்கரர்களால் மனித குல வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அளிக்கப்பட்ட மிகச் சிறந்த தானமாகும்.

உலகச் சாந்தியைப் பற்றிப் பேசும் உரிமை பகவான் விருஷப தேவர், பாரஸ்வநாதர், மகாவீரர் ஆகிய மகான்களைப் பின்பற்றும் நெறியாளரைத் தவிர வேறு யாருக்கு உண்டு" எனப் போற்றிப் பேசியுள்ளார்.

இப்பெருந்தகை ஜைன சமயத்தவர் அல்ல. இந்து சமய வைணவப் பேரறிஞர். இவர் அறிவுரையில் நற்காட்சியின் மாட்சி பளிச்சிடுகின்றது. பல்வேறு சமய நூல்களையும் பயின்றாய்ந்த மேதையாகையால் அவைகளில் ஜைன அறநெறிகளே உலகை உய்விக்கும் எனத் தெளித்து உண்மையை உலகோர் முன்வைத்தார். இவ்வரலாற்றுச் சிறப்புரை உலக சமாதானக் குழுவினான் மாபெரும் அறிக்கை நூலில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறே உலகின் பல பாகங்களிலும் உள்ள பல பேரறிஞர்களும், விஞ்ஞானிகளும், மேதைகளும், ஜைன அறநெறிகளையும், தத்துவக் கலைகளையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். ஜைன அறநெறிகள் உலகுக்கு வழங்கியுள்ள பண்பாட்டுப் பண்டகசாலை என்றும், எக்காலத்தோ தோன்றிய அறநெறிகள் இக்காலத்துக்கும், எதிர் காத்துக்கும் பொருந்துபவை என்றும், ஆழ்ந்த தத்துவசாரம் கொண்டவை என்றும், தற்கால விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாய் நிற்பவை என்றெல்லாம் பாராட்டியுள்ளனர். இவை போன்ற பல பொன்னுரைகளை கீழே காணும் வரலாற்றைப் படித்துக் களிக்கலாம்.

நீதிபதி அவர்களின் பேருரை பாரதநாட்டு ஜைனப் பெருமக்களுக்கு ஓர் மாபெரும் அறிவுரையாகும். யான் முன்னர் கூறியது போன்றே ஜைன அறநெறிகள் உலகெங்கும் பரவ ஆவன செய்ய வேண்டும். ஜைன நெறிகளையும், தத்துவக் கலைகளையும் உலக மொழிகள் அனைத்திலும் வெளியிடவேண்டும். இக்கலாச்சாரப் பணி ஒன்றே பயனளிக்கும். இவ்வாறு பல மொழிகளிலும் நம் அறநெறிகள் பரவுமாயின் ஆங்காங்கு நற்காட்சியர் பலர் தோன்றுவர்! அறம் வளரும்; உலகம் உன்னதநிலை எய்தும்.

இன்றைய உலகிலும், பாரத நாட்டிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது தோன்றும் அறிவியக்கங்கள் அரசியல் கொள்கைகள், சமுதாய நலத் தொண்டுகள், சீர்திருத்தப் பணிகள் ஆகிய பலவும் பண்டைய அறநெறிகளின் அடிப்படையைக் கொண்டவைகளே எனும் வரலாற்று உண்மைகளை இலக்கிய ஆதாரங்களுடன் திரட்டி வெளியிட்டுள்ள கீழக்காணும் நூல்களில் விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளன.

(1) பகுத்தறிவு இயக்கத்தின் பழைமை, (2) ஆதி பகவனும் ஆச்சார்ய வினோபாவேவும் (3) நில உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகாகமே, (4) சட்டம் பேசுகிறது, (5) ஜைனமும், லெனினியமும், (6) ஜைன நெறிகளும் வள்ளலார் புரட்சியும், (7) திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன், (8) எம்மான் கோவில், (9) இளங்கோவடிகள் சமயம். (10) தமிழகத்தில் ஜைனம், (11) ஆவி உலகப் பேச்சு, (12) சமணர் மலை செல்வோம், (13) ஜினர்மலைகள் அல்லது அறவோர்பள்ளிகள், (14) ஐந்தவித்தான் போன்றவைகளாகும். இவ்வாய்வு நூல்களின் பெயர்களிலேயே நூல்களின் குறிக்கோளும், ஆதாரங்களாகிய வரலாற்றுச் சிறப்புகளும் வெள்ளிடை மலைபோல் விளங்கும்.

இவ்வாய்வு நூல்களை தமிழக அறிஞர்களும், புலவர் பெருமக்களும், ஆய்வு அறிஞர்களும், வரலாற்றுத் துறை பேராசிரியர்களும், பத்திரிகை ஆசிரியர்கள் மதிப்புரைகளும் நன்கு வரவேற்று கடிதங்கள் வாயிலாகவும் பாராட்டி எழுதியுள்ளனர். மற்றும் சில பேராசிரியர்கள் தங்கள் தங்கள் நூல்களில் மேற்கண்ட ஆய்வு நூல்களினின்றும் பல கருத்துக்களை மேற்கோள் காட்டியும் சிறப்பித்துள்ளார்கள். அறிஞர்களின் கடிதங்களையும், மதிப்புரைகளையும் திரட்டி வெளியிடின் சுமார் நானூறு பக்கங்கள் கொண்ட பொய நூலாகும்.

அம்மடல்களில் மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போன்று மதித்தல், பொருளிட்டுதலை வரையறுத்தல், பகுத்துண்டு வாழ்தல், பொதுவுடைமைக் கொள்கை, பகுத்தறிவின் பாங்கு, சாதி சமயமின்மை, சகோதரத்துவம், சமத்துவம், மூடநம்பிக்கைகளகற்றல், எவ்வுயிர்களிடத்தும் அன்பு போன்ற மனிதனின் உயர்ந்த பண்புகள் அனைத்தும் நிறைந்துள்ள இலக்கியங்களும், நீதி நூல்களும் காட்சியளிக்கும் தமிழகத்தில் தவமே தவம், என உளங் கொண்டு எழுதியுள்ளனர். இவை மட்டுமல்ல, இத்தகைய அறிவியல் அறநெறி நூல்கள் இடம்பெற்றுள்ள தமிழகத்தில் தெய்வத்தின் பெயரால் எத்தகைய தீமையும் புரியலாம் எனும் நூல்கள் எவ்வாறு நுழைந்தனவோ! எனவும் வியப்புற்றுள்ளனர். அறநெறிகள் கூறும் ஒழுக்கங்களை எவரும் மேற்கொண்டு வாழ்க்கை நடத்த முடியும். ஆனால். பக்தியின் பெயரால் கூறப்பட்டுள்ள புராணக் கூற்றுக்களைப் பின்பற்ற இயலுமா? மனிதக் கொலையை (நரபலி) இக்காலச் சட்டங்கள் அனுமதிக்குமா? தூக்குமேடைக்கன்றோ அனுப்பிவிடும்! எந்தத் தெய்வத்தின் பெயரால் கொலை முதலிய பயங்கரக் குற்றங்களைச் செய்ய முற்பட்டோமோ, அந்த தெய்வங்களாகிலும் அபயம் அளிக்குமா? நிரபராதியாகவன்றோ நடுத்தெருவில் நிற்க வேண்டும். இத்தகு அபாயகரமான கொள்கைகளைப் புகுத்தி மக்களை திசைமாற்றி திருப்பிவிட்டார்களே என வருந்தியுள்ளார். இச்சான்றோர்களின் அறிவார்ந்த மடல்களை படித்தறியின் இப்பொயோர்கள் நற்காட்சி நிழலில் இளைப்பாறுபவர்கள் எனின் பொருந்தும். விரைவில் அறத்தின் வழிநிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. எடுத்துக்காட்டாக ஒரு மாபெரும் புலவர் தம் சமயம் துறந்து, அறநெறி தழுவிய அற்புத நிகழ்ச்சியை இங்கு காண்போம்.

கனவில் காட்சியளித்த காளை

22-8-1978ஆம் தேதி இரவு, விடியற்காலை சுமார் நான்கு மணியிருக்கும். அப்போது ஓர் அற்புதக் கனவு கண்டேன். சென்னை மொனா கடற்கரை மணலில் அமர்ந்து கடற்காற்று சுகத்தில் திளைத்திருக்கின்றேன். அலைகளின் ஆரவாரம் களிப்பை ஊட்டியது. இவ்வாறு களிப்புற்றிருக்கும்போது திடீரென அலைகள் நின்றுவிட்டன. கண்களுக்கு எட்டிய தூரம்வரை நீலநிறக் கடல் அமைதியாகக் காட்சியளிக்தது. வியப்போடு கடற்பரப்பின் காட்சியைக் கண்டுகளிக்கின்றேன். அந்நிலையில் ஒரு காளை (ஓர் எருது) கடலினின்றும் நீந்திக்கொண்டு கரையை நோக்கி வேகமாக வருகின்றது. இக்காட்சியைக் கண்டு வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தேன். கடலில் நீந்தி வரும் காளையின் ஆற்றலைக்கண்டு வியப்புற்றேன். கடலில் திடீரென்று அலைகள் தோன்றிடின் இக்காளையின் கதி என்ன ஆகுமோ என்ற கவலை மேலிட்டது. எனவே, அக்காளை விரைவில் கரை சேரவேண்டுமே என்ற ஆவலோடு கண் இமையாமல் அதன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் கவலையும், ஆவலும் என்னைக் கண்விழிக்கச் செய்தன. விழித்தேன். யான் கண்டது கனவு என்கிற உணர்வு வந்ததும் கனவு காட்சியைப் பற்றி சிந்திக்கலானேன்.

காளை அறத்தின் சின்னமாகவும், அறம் கடல்போன்ற பெருமையுடையதெனவும் ஊகித்துக்கொண்டேன். இவ்விரண்டையும் ஒருசேரக் கண்டதால் அறமே நமக்குக் காட்சி அளித்தது என மகிழ்ந்தேன். உடனே ஆதியில் அறம் அருளிய ஆதிபகவனின் திருவடிகளைப் போற்றும் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டேன். பொழுதும் புலர்ந்தது. "புலராய் வாழி பொழுதேநீ! எனப் பொழுதையும் வரவேற்றுப்போற்றினேன். பின்னர் காலைக்கடனை முடித்துக்கொண்டு, என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் அரும்பெரும் கனவைப் பற்றிச் சிந்திக்கலானேன். கனவுகள் நினைவின் தோற்றமேயாதலால் யான் சதா சர்வ காலமும் அறநெறிகள் பற்றியும், அறத்தின் சின்னம் காளையெனும் வரலாற்றைக் குறித்தும் பேசியும், எழுதியும் வருவதால் அந்நினைவுகள் கனவாகத் தோன்றினவோ என எண்ணினேன். எனினும் கடலையும், அக்கடலில் நீந்திவரும் காளையையும் கனவில் கண்டதால், அக்கனவை மற்றக் கனவுகளைப் போல அலட்சியம் செய்யவியலவில்லை. இக் கனவைப் பெரும் பேறாகவே நினைத்தேன். இதன் உட்பொருள் காண ஆர்வமாக கொண்டு ஆராய்ந்தேன்.

கடலில் காளை நீந்தி வரக்கண்டதால் அறத்தைப் பற்றிய நற்செய்தி ஏதேனும் வரலாம் அல்லது நிகழலாம் என்றும், கடலைக் கண்டதால் அக்கடலைப் போன்ற மாபெரும் நிகழ்ச்சி நேரலாம் என்றும் யூகம் செய்துகொண்டேன். இக்கனவு பளிக்கும் என்ற உறுதியும், நம்பிக்கையும் என் உள்ளத்தில் உண்டாயின."

கனவு பலித்தது!

நற்காட்சி நிழலில் இளைப்பாறும் சான்றோர்கள் பற்றி முன்னர் கண்டோம். அப்பொயார்கள் வாழ்த்து, வளர்ந்து வரும் அறநெறிகள் பால் எப்பொழுதுமே மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள். தங்கள் தங்கள் இதயங்களில் அறநெறிகள் பற்றி ஆழமானப் பாவு உணர்ச்சி கொண்டவர்கள். அதனாற்றான் அச்சான்றோர்கள் ஜைன இலக்கியங்கள், தத்துவக்கலைகள், நீதிநூல்கள் ஆகியவற்றின் அறிவியல் கொள்கைகளை வியந்து போற்றியுள்ளனர். இத்தகு நோய உள்ளமும் நிறைந்த அறிவும் ஆர்வமும் கொண்ட சான்றோர்களில் மதுரை பாவலர். இரா. பகவதி அவர்கள் ஒருவர் ஆவர். அப்பெருந்தகையை அறிமுகப்படுத்தும் காட்சியே யான் கண்ட காளையின் கனவு. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பழமொழிப்படி அறநெறித் தழுவிய பேரறிஞர் ஒருவரை முன்கூட்டியே அறிவிக்க கனவில் காளை காட்சியளித்தது என உள்ளம் நெகிழ்ந்தேன். அக்கனவு பலித்தப் பாங்கினைக் காண்போம்.

என் அன்பிற்கும், மதிப்பிற்கும், பெருமைக்கும் உரிய பாவலர் அவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர். சைவ சமய நூல்களை ஆழ்ந்து படித்த சமய அறிவு குறைவறப் பெற்றவர். எனினும் ஜைன சமய இலக்கியங்களிலும் நல்ல புலமைப் பெற்றவர். இப்பேரறிவால் இளம் வயதிலேயே கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்று விளங்கினார். தாம் சார்ந்துள்ள பக்திமார்க்க கொள்கைகளின் அடிப்படையில் பல கட்டுரைகளும், கவிதைகளும் இயற்றிப் பேரும் புகழும் பெற்றவர். இவர்தம் கவிதை இயற்றும் திறனையும், சிறப்பையும் பாராட்டி புலவர், குழந்தை அவர்கள் இவருக்குப் பாவலர் எனப்பட்டம் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் எனும் மூதுரைக்கேற்ப, மதுரைத் தமிழ்ச்சங்க அறிஞர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மற்றும் பல புலவர்களும் இவாடம் நட்பு கொண்டனர். மதுரையிலும், மதுரைப் பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு கவியரங்குகளிலும், இலக்கிய சமய சொற்பொழிவு நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு புகழ் எய்தி வருபவர்.

இத்தகு சிறப்புகள் அமைந்த தண்தமிழ்ப் புலவர் பாவலர் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. மடலைப் பிரித்துப் படித்தேன். ஆரம்பத்தில் வணக்கம் செலுத்திய பின்னர், "தங்களை இதற்கு முன் கண்டிராத வனும் கடித மூலமாகவேனும் பாச்சயமில்லாதவனுமாகிய சைவ சமயத்தில் பிறந்த ஒருவனாகிய யான் தாங்களுக்கு இக்கடிதத்தை எழுதுமாறு ஏற்படுத்திய பஞ்ச பரமேஸ்டிகளின் திருவருள் விலாசப் பெருங்கருணைக்கு மகிழ்ந்து நன்றி கூறுகிறேன். யான் மேருமந்திர புராணம், யசோதர காவியம், நீலகேசி, சிந்தாமணி போன்ற சில ஜைன இலக்கியங்களை விரும்பிக்கற்று பயனடைந்து வருகின்றேன். இந்நூல் முகப்பில் எல்லாம் தங்கள் திருநாமம் காணப்பெற்றேன். ஆதலாலும், எனது அருமை நண்பர் எழுத்தாளர், சென்னை திருசெல்வராஜன் அவர்களும் என் உடன் பிறவா சகோதரர் கீரம்பாண்டி திரு. மா.ஆ. பிச்சைமுத்து அவர்களும் தங்களைப் பற்றியும் தங்கள் ஆய்வு நூல்கள் பற்றியும் எனக்குத் தொவித்துள்ள செய்திகளின் ஆதரவினாலும் தங்களுக்கு இவ்விண்ணப்பத்தை எழுதலானேன். எனது சமண தாகத்திற்கு ஏற்ப எனக்கு வேண்டிய பல அருமை வாய்ந்த நூல்கள் இங்கு கிடைப்பது அரிதாயிருக்கின்றன. எனவே, எனக்கு திருவிருத்தம், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்ற நூல்களும் தங்களால் எழுதப்பெற்ற ஆய்வு நூல்கள் பலவற்றையும் விலைப்பட்டியலுடன் வி.பி.பி.யில் அனப்பி என் சமண தாகத்தை தீர்த்துவைக்குமாறு தங்களைப் பொதும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என எழுதியிருந்தார். இம்மடலைப் படித்ததும் யான் பெரும் மகிழ்வெய்தினேன். திரு பாவலர் அவர்கள் பஞ்ச பரமேஸ்டி திருவருள் என்றும், தாம் தம்மைச் சமண தாகம் கொண்டவர் எனவும் பாசத்தோடு வரைந்திருந்த வாகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அவரைப் பக்குவம் பெற்ற பவ்விய ஜீவன் என என் உள்ளத்தால் போற்றி மகிழ்ந்தேன். எனவே அப்பொயாருக்கு என்னிடமிருந்த ஆதிநாதர் பிள்ளைத்தமிழ், அருங்கலச்செப்பு, திருவெம்பாவை, ஜீவக சிந்தாமணி மலர், திருநூற்றந்தாதி ஆகியவற்றுடன், என் ஆய்வு நூல்கள் அனைத்தையும் அனுப்பி வைத்துப் பாவலர் அவர்களின் சமண தாகத்தையும், அறநெறிகளின்பால் உள்ள அவர்தம் ஆர்வத்தையும் பாராட்டிக் கடிதம் எழுதினேன்.
 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com