முகப்பு வாயில்

 


அந்நாள் முதல் நாளிது வரை எங்களிருவருக்கும் கடிதப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது. அறிஞர் பாவலர் அவர்கள் எழுதிவரும் ஒவ்வொரு மடல்களிலும் இறைவணக்கமாகத் திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம், நீலகேசி, போன்ற நூல்களின் துதிப்பாடல்கள் காட்சியளிக்கும். யான் அனுப்பிவைத்த நூல்களைப் பற்றி எழுதிய ஒரு கடிதத்தில்,

"தாங்கள் என்பால் பெருங்கருணை கூர்ந்து அனுப்பி அருளிய பெருநிதி அன்ன அரிய நன்னூற்கள் அனைத்தும் கிடைக்கும்பேறு பெற்றேன். நீண்டகாலமாக மழையை நோக்கிக் கண் கொட்டாது வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு எளிய விவசாயி பெருமழை கொட்டியவுடன், எங்ஙனம் பேரானந்தத்தோடு உழு தொழிலில் ஊக்கத்துடன் இறங்குவானோ அதுபோன்று யான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்த அறநூல்கள் மழை பொழிந்தவுடன் என் உள்ளத்தே அதைக்கெண்டு அறப்பயிர் விதைப்பதில் ஆழ்ந்து விட்டேன். நிறைந்த பசியுள்ளவன் சிறந்த உணவளிக்கும் அன்ன தாதாவுக்கு உண்ட பின்னே நன்றி சொல்வது போல யானும் இப்போது தான் தங்களுக்கு நன்றி சொல்லத் துவங்கியுள்ளேன். தாங்கள் அனுப்பிய நூல்கள் ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாப் பெருமை வாய்ந்தவைகள். திருக்குறளுக்கு உண்மையாகிய மெய்யுரை காண விரும்புகின்ற எவரும் ஐந்தவித்தான் யார்? எனும் அருமையாகிய நூலைக் காணப்பெறின் இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, ஆனந்தக் கூத்தாடுவர் என்பது உறுதி."

இவ்வாறு ஒவ்வொரு மடலிலும் தாம் பெற்ற நூல்களைப் பற்றி விமர்சனம் செய்து வந்தார். அச்செந்தமிழ்த் திருமடல்கள் அனைத்தும் அறிவுக்கு விருந்தளிக்கும் இலக்கியப் பெட்டகம் எனில் மிகையாகாது. அவைகளைப் படிக்கப் படிக்க எல்லையில்லாத இன்பத்தில் ஆழ்த்தும் பேரறிவு கொண்ட பெருமை வாய்ந்தவை. எனவே அத்திரு மடல்கள் அனைத்தையும் பலரும் படித்து இன்புற வேண்டித்தனி நூலாக வெளியிடவும் எண்ணியுள்ளேன்.

அறிஞர், பாவலர் பகவதி அவர்களின் மடல்களினின்றும் அப்பெருந்தகை நற்காட்சிக் கைவரப் பெற்றவர் என்பதை அறிகின்றோம். எனவே, என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு பாவலர் பகவதி அவர்களுக்கு "நற்காட்சி செம்மல்" எனப் பட்டம் சூட்டி அன்புடன் அழைத்துப் போற்றி வருகின்றேன். நற்காட்சி ஒளி வீசுமே அப்பெருந்தகை அறநெறிகளில் ஆழ்ந்த அறிவும் நல்லொழுக்கத்தின் பால் பற்றும், பாசமும் பெற்று ஒழுகி வருகின்றார். இத்தகு நற்காட்சிச் செம்மலின் வரவையே அறத்தின் சின்னமாகிய காளை என் கனவின் வாயிலாக அறிவித்தது எனும் உண்மையை ஐயமறத் தெளியலாம. யான் கண்ட கனவு யான் கொண்ட பொருளிலேயே அமைந்து கனவு பலித்தது எனில் மிகைபடக் கூறுவதன்று.

வேளாளர் மரபு

நற்காட்சிச் செம்மல் திரு. பகவதி அவர்கள் தாம் சார்ந்துள்ள சைவ சமயத்தைத் துறந்து, அறநெறி தழுவியது புதுமை அல்ல. அது அப்பெருந்தகையின் முற்பிறவியின் பாரம்பர்யக் கொள்கை, வியப்புக்குரிய அச்செய்தி வரலாற்றுச் சிறப்புடையது. நம் தமிழகப் பண்டைய வரலாற்றில் வேளிர் அல்லது வேளாளர் என அழைக்கப்பெறும் வகுப்பினரைப் பற்றி அறிந்துள்ளோம். அவ்வேளாள வகுப்பினர் ஜைனர்கள் எனும் வரலாற்றையும் நன்கு அறிவோம். எனவே ஜைனர் எனில் வேளாளர், வேளாளர் எனில் ஜைனர் என்பது தெளிவாகிறது. கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் வேத வேள்வி, காபாலிகம், காளாமுகம் சம்பந்தமாகச் சமயப் போர் நிகழ்ந்தது. காபாலிகக் கொள்கையையும் வேத வேள்விக் கொலையும் கண்டிக்கும் சமண (ஜைன) சமயத்தை சைவ சமயத்தினர் எதிர்த்துப் போர் தொடுத்தனர். இப்போரில் சைவ சமயத்தவர் பலாத்காரத்தைக் கையாண்டனர். அகிம்ஸையின் வழி நிற்கும் ஜைனர்கள் சைவ சமயத்தாரின் கொடுஞ் செயலுக்கு அஞ்சிப் பெரும்பாலான ஜைனர்கள் நெற்றியில் நீறு பூசிக்கொண்டும், கழுத்தில் லிங்கச்சின்னத்தை அணிந்துகொண்டும் சைவ சமயம் புகுந்துவிட்டனர்.

சமணம் கலந்த சைவ சமயம்

இப்புதுப்பெயர் பூண்ட வேளாளர் சைவம் புகுத்தும், தங்கள் இறைவன் நூலில் வற்புறுத்தியுள்ள கொல்லா நெறியையும், ஊன் உண்ணாமையையும் தொடர்ந்து கடைபிடித்து வாழ்ந்து வந்தனர். சைவ சமயத்தவான் காபாலிகக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாது, நாளாவட்டத்தில், அத்தீய கொள்கைகளைச் சைவ சமயத்தினின்றும் அறவே அகற்றியும் விட்டனர். அதனாற்றான் சைவ சமயத்தவர் காபாலிகக் கொள்கைகளைத் தங்கள் பக்திமார்க்க நூல்களில் படித்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்காது கைவிட்டனர். எனவே இன்றுள்ள சைவ சமயம் சமணம் கலந்த சமயமாகக் காட்சி அளிக்கிறது. மேற்கண்ட புரட்சி வேளாளர்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் திருச்செந்தூர் தாலூகா அமிர்தவளநகர் எனும் புனிதக் கிராமத்தில் சைவ வேளாளர் குடும்பத்தினர் பலர் வாழ்கின்றனர். அக்குடும்பங்களில் ஓர் உயர் குடியில் பேரறிஞரும், சிறந்த ஓவியருமாய் விளங்கிய திரு. ச. இராமநாதப்பிள்ளை அவர்களுக்கும்; திருமதி. இராமலட்சுமி அம்மான் அவர்களுக்கும் மகவாகத் தோன்றியவர் நம் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய திரு. பாவலர் இரா. பகவதி அவர்கள். இவர்கள் சைவ வேளாள மரபினர் எனும்போதே நாம் முன்னர் கூறிய வரலாற்றின்படி இக் குடும்பத்தினர் பண்டைய ஜைன மரபினர் என்பது வெள்ளிடைமலை, இப்புனித குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாநகால் குடியேறி விட்டனர். இப்பெருந்தகையாரின் மனைவியார் திருமதி. பாலம்மாள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் செல்வி பா. மீனாட்சிசுந்தா M.A., பட்டடதாரி. முதல் வகுப்பில் தேர்வு பெற்று புகழ் படைத்துக்கொண்டவர். தந்தை அறிவு மகள் அறிவு எனும் தேவர் மொழிக்கு இலக்காக விளங்குகிறார். இப் பெற்றிய சிறப்புடையச் செல்வி Ph.D. எழுத ஜைன நூல்களையே எடுத்துக்கொள்வதென முடிவு செய்துள்ளார். தந்தையைப் போன்றே செல்வி. மீனாட்சி சுந்தாக்கும் அறநெறியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம். பிற சந்தானம் என்கின்ற மகனும், மேகலா என்கின்ற மகளும் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இத்தகு அறிவு நலம் சார்ந்த புகழ்மிக்க சைவ வேளாளர் உயர்குடியில் பிறந்து, வாழ்ந்துவரும் நம் அன்பிற்கல்நத நற்காட்சிச் செம்மல் திரு. பாவலர் இரா. பகவதி அவர்கள் தம் பழம் பிறப்புணர்வு மேலீட்டால் தம் பாரம்பாய அறநெறிகளைத் தழுவி தூய வேளாளர் (ஜைனர்) ஆனார். எழு பிறப்பும் ஏமாப்புடைத்து என்பது தேவர் திருமொழி அல்லவா?

கார்மேகம் கலைந்தவுடன் கதிரவன் தன் ஒளிக்கதிரைப் பரப்பி வருவதுபோன்று நம் பாவலர், அவர்களைச் சூழ்ந்திருந்த இடைக்காலச் சமய இருள் நீங்கியதும் சன்மார்க்கப் பேரொளியில் உலா வருகின்றார். பாலுடன் சேர்ந்த நீர் நெருப்பில் வைத்துக்கய்ச்சிய பின் பாலைவிட்டு நீங்கி விடுதல் போல தூய அமுதாய்க் காட்சி அளிக்கின்றார்.

மேல்நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்கள் மகாத்மா காந்தியடிகளின் குமாரர் தேவதாஸ் காந்தி அவர்களைச் சந்தித்துப் பேசியபொழுது "இந்தியாவில் உள்ள மதங்களில் ஜைன சமய அறநெறிகளே உயர்ந்ததென யான் மதிக்கின்றேன். யான் என் சிறு வயதிலிருந்தே என் வாழ்க்கையில் கொல்லாமையையும், ஊன் உண்ணாமையையும், மது அருந்தாமையையும் உறுதியாக மேற்கொண்டுள்ளேன். இக் கொள்கைகள் ஜைன சமயக் கொள்கையோடும் பொருந்தியிருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். அதனால் யான் அடுத்துப் பிறவியில் ஒரு ஜைன குடும்பத்தில் பிறக்கவே விரும்புகிறேன். அகிம்சா தர்மத்தை ஜைன சமயம் வற்புறுத்துவது போன்று வேறு எந்த சமயமும் வற்புறுத்தவில்லை. எனவே ஜைன சமயம் உலக மதமாகவே விளங்கிப் பரவ வேண்டுமென்பது என் பேரவா" எனக் கூறிய ஒப்பற்றச் செய்தி உலகறிந்த உண்மையாகும். எனவே இவ்வரலாற்றுப் பேருரைகளால் அறிஞர் ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களை நற்காட்சிச் சுடர் எனப் போற்றுவது மிகையாகாது.

இம் மாபெரும் இரு சான்றோர்களின் வாழ்க்கைப் பண்புகளும், அறிவாற்றல்களும், உணர்வுகளும், எண்ணங்களும் ஒன்றாகவே பாணமிக்கின்றன. இதனால் அறிஞர் அவர்களும் முற்பிறவியில் ஜைனராகவே பிறந்திருக்க வேண்டுமென உறுதியாக நம்பலாம். அறிஞர் ஷா அவர்கள் வாழ்ந்த மேல் நாட்டில் ஜைன சமயம் இல்லாததால் அடுத்தப் பிறவியில் இந்தியாவிலுள்ள ஒரு ஜைனக் குடும்பத்தில் பிறக்க வேண்டுமெனும் ஆர்வங்கொண்டார்.

நற்காட்சிச் செம்மல் திரு. பாவலர் அவர்கள் முற்பவத் தவத்தால் ஜைனம் பிறந்த நாட்டிலேயே பிறந்துள்ளதால் அப்பெருந்தகை அடுத்தப் பிறவியை எதிர்பாராது இப்பிறவியிலேயே ஜைன அறநெறிகளைத் தழுவி ஜைன சமயத்தாருடன் ஒன்றாகக் கலந்துகொண்டார். நற்காட்சிச் செம்மல் திரு. பாவலர் இரா. பகவதி அவர்கள் தாம் பெற்றுயர்ந்த பேற்றை, புரட்சியை, மனமாற்றத்தை, உள்ளுணர்வை, உடன்பாட்டு உறுதியை தமக்கே உரிய அறிவாற்றலால் இலக்கிய மணம் கமழும் கவிதைகள் வாயிலாக வழங்கியுள்ள அரும்பெரும் பாக்களைப் படித்து இன்புறுவோம்.


திருவறம் வாழ்க

சீலமிங் கிதுவென நல்லறம் ஓர்கிலாச்
சிறுமையும், வறுமையும், கீழவர் புரியலங்
கோலமிங் குயர்ந்த நெறியெனப் போற்றுங்
குழப்பமும், மழுப்படை வாளொடு வில்வேற்
சூலமிங் கேந்தித் திரிதரு தேவரைத்
தொழுதிடும் பழுததும் தூவுரு லாம்ஸ்ரீ
பாலெனுங் கதிரோன் திருமுகந் தோன்றிடப்
பனியெனக் கனவெனப் பறந்துபோயினவே! - 1

தூலமிங் கிதனை யெண்வகை யோகத்
தோய்வினில் ஆய்வொடு படுத்திமுன், நூலோர்
நாலுமிங் கிரண்டு மாமெனச் சொன்ன
நலமுள மலரெனு மவையவை யேறிக்
காலுமிங் கடக்கின் வீடெளி தெனத்திரி
கசடதும் அசடதும், கருணை திகழ் ஸ்ரீ
பாலெனுங் கதிரோன் திருமுகந் தோன்றிடப்
பனியெனக் கனவெனப் பறந்துபோ யினவே! - 2

ஓலமிங் கிட்டுப் புன்னெறிப் பன்னூல்
ஓதலும் போதலுஞ் சடை, பொடி, நாமச்
சாலமிங் கேந்தித் திரிபவர் தம்பாற்
சார்வதும் நேர்வதும் தீவினைக் கேயநு
கூலமிங் காமெனு மறிவது மின்றிக்
குழைதலு மிழைதலுங் கோதிலாப் புகழ் ஸ்ரீ
பாலெனுங் கதிரோன் திருமுகந் தோன்றிடப்
பனியெனக் கனவெனப் பறந்துபோ யினவ் - 3

சாலநன் குயர்ந்த ஐவரர்ந்த ஐவர்தந் திருப்பேர்
சார்முதல் சீரெழுத் தின்னறுஞ் சுருக்கம்
முலமந்தி ரமெனத் திகழுவ தறியா
மூடனேன் கேடதுங், கொலை நெறிச் சமய
மாலுமிங் கந்நெறிப் பழக்கமும், அவரையே
மதிப்பதும் துதிப்பதும், மாசிலா மணிஸ்ரீ
பாலெனுங் கதிரோன் திருமுகந் தோன்றிடப்
பனியெனக் கனவெனப் பறந்துப் போ யினவே!


 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com