முகப்பு வாயில்

 

வெண்பா

நாற்பதுமோ ரேழும் நடந்துமுயர் நல்லறத்தின்
பாற்பொருந்தல் செய்யாப் 'பதரெ'னையே நூற்பொருந்து
தெள்ளு'மணி' யாக்கும் திருக்கருணை ஸ்ரீ பாலாம்
வள்ளலுக்கே அர்ப்பணமென் வாழ்வு.

என்வகை யோகம் = அட்டாங்கயோகம், நாலும்+இரண்டும்
ஆமென = ஆறு ஆதாரங்கள் ஆமென. காலும் = வாயுவும்
சாலம் = வேடம். மூலமந்திரம் = ஓம்

முக்குடையான் நல்லறத்தின் முழக்கந்தானே

தென்னாட்டு நற்சமணக் குலத்தோர் நாங்கள்
தீயரவம் வைதீகந் தீண்டப்பெற்றே
பன்னாட்கள் நிகைவிழந்தோம்! பாதை மாறிப்
பரதவித்தோம்! சைவரெனப் பட்டம் ஏற்றோம்!
இன்னாட்கள் நல்லறிஞர் செய்யும் ஆய்வால்
எங்களையாம் அறிந்திட்டோம் எழுந்தேம் பொங்கி
முன்னாட் போல் இனிமயங்கேம்! செய்வேம் இங்கே
முக்குடையான் நல்லறத்தின் முழக்கந் தானே!

அறமோம்பும் நற்சமணக் குலத்தோர் நாங்கள்
ஆண்டுசில நூறுக்கு முன்னர் இங்கே
மறமோம்பும் மாற்றாரின் மாயை யாலே
மதிமறந்தோம்! நீ ரேற்றேம்! சைவமானேம்
திறமோங்கு நல்லறிஞர் ஆய்வால் இன்றெம்
சிந்தையிலே தெளிவுற்றேம்! தெளிந்த இந்த
முறைநீங்கேம்! பொதார்ப்போம் எந்த நாளும்
முக்குடையான் நல்லறத்தின் முழக்கந்தானே!

பக்தியது ஒழுக்கம்தான் என்ன வாழ்ந்த
பண்பட்ட நல்நெல்லைச் சமணர் நாங்கள்
எத்தரது ஏமாற்றால், அவர்கள் செய்த
இரக்கமிலா கொலைகளினால், பாதைமாறி
மெத்தவுமே வேறானேம், ஆனால் இந்நாள்
மீட்டும் எம் நிலையறிந்தே மேவினேம்! நல்
முத்தனுக்கே ஆளானேம்! ஓயோம் அந்த
முக்குடையான் நல்லறத்தின் முழக்கந்தானே!

சங்குதனை வன்நெருப்பில் சுட்டபோதும்
சார்ந்துள்ள வெண்மையது சாகாப் போல
இங்கெமது மாறுதலாம் காலந் தூடும்
ஏற்றோமோ புலைமதுவிங் கில்லை யில்லை!
மங்களமாம் சிவந்தனையே ஏற்றிப் போற்றி
மனையிருந்தேம்! மீண்டும்நல் அறமாம் வாரி
முங்கியெழுந்திட்டேமால், ஆர்ப்போம்! ஆர்ப்போம்!
முக்கடையான் நல்லறத்தின் முழக்கந்தானே

எங்களைப்போற் சமணர்சிலர் முன்னர் நாளில்
இணைந்ததினா லேயன்றோ மாற்றார் கூடப்
பங்கமுறுங் கொலையதுவும், புலைப்பு சிப்பும்
பரவலதாக் கைவிட்டார்! பூசை கட்கும்
மங்களமாம் மலர்களையே வைப்பாரானார்!
மறியறுக்கும் தீச்செயலை மறந்து போனார்
முன்னெங்கள் தவறுக்கும் நன்மை தந்த
முக்குடையான் நல்லறத்தின் முழக்கந்தானே!
5-12-78

வாசகப் பெருமக்களே! பகுத்தறிவுப் பூஞ்சோலைப் பாக்களைக் கருத்தூன்றிப் படித்தீர்களா? புதிய உறவுப் பூத்துக் குலுங்குகின்றது! அறநெறி உறவு! தெய்வ நெறி உறவு! ஆன்மீக உறவு! சகோதர உறவு! (மைத்ரிபாவம்) ஆகிய புனித உறவுகள் பெருமைக்குரிய திரு. பாவலர் அவர்களின் பாக்களில் பளிச்சிடுகின்றன! ஒளிமயமான இம்மாபெரும் உறவினரை வரவேற்று வாழ்த்துக் கூற உள்ளம் துடிக்கின்றது! வாழ்த்துரைகளைத் தேடித்தேடி அலைகின்றது! ஒப்புவமையற்ற உரைகள் கிடைக்காது மயங்குகின்றது. நற்காட்சி செம்மல் திரு. பாவலர் அவர்களைப் பாராட்ட அப்பெருந்தகை ஆய்ந்து அமைத்துக்கொண்ட பண்டைய இலக்கியச் சான்றோர்களின் தெய்வீகத் திருமொழிகளையே அவருக்குச் சூட்டி வாழ்த்துவோம்.

திரு. பாவலர் அவர்களின் மேற்கண்ட உறவுகள் எவரும் எண்ணிப் பார்க்க இயலாத செயற்காய செயலாகும். எனவே திருக்குறள் தந்த தேவர் பெருந்தகைத் தம் தமிழ் மறையில் பாராட்டும் 'செயற்காய செய்வர் பொயர்' எனும் புகழுரைக்கு இலக்கணமாய் அமைந்த நம் பாவலர் அவர்களைப் பொயர்தம் பொயர்க்கும் பொயீர் எனவும்! இளங்கோவடிகள் தம் செந்தமிழ்ச் சிலப்பதிகாரத்தின் இறுதி அறவுரையில் 'தெய்வம் தெளிமின்' எனும் திருமொழி வழிநின்று; தெய்வம் தெளிந்தவராகத் திகழ்வதால் 'திருத்தகு நல்லீர்' எனவும்,

"அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்"

எனும் அறிவுரையை அரணாக அமைத்துக்கொண்டுள்ளதால் 'அறமாண்புடையீர்' எனவும்;

காவிய வழிகாட்டி எனக் கற்றோரால் போற்றப்பெறும் திருத்தக்கதேவர் தம் சீவக சிந்தாமணியில்,

'அறிவினாற் பொய நீரார்
அருவினைக் கழிய நின்ற
நெறியினைக் குறுகி யின்ப
நிறைகட லகத்து நின்றார்'

எனும் ஞானமொழி யேற்று ஆன்மீக மேம்பாட்டின் மெய் நெறி தழுவிய 'அறிவினார் பொய நீரார்' எனவும் போற்றிப் புகழ்ந்து, வாழ்த்தி வணங்கி வருக வருக என வரவேற்று மகிழ்வோம்.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த இப்பேருறவுகள் நற்காட்சியின் தனித்தன்மையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது. இம் மகத்தான நற்காட்சியை ஆழமாகவும், உறுதியாகவும் கடைபிடித்துயர்ந்த நம் மதிப்பிற்குரிய நற்காட்சி செம்மல் திரு. பாவலர் இரா. பகவதி அவர்களை ஜைன உலகமும், குறிப்பாகத் தமிழக ஜைனப் பெருமக்களும் எக்காலத்தும் போற்றக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.

சென்னை ஜீவரட்சக பிரச்சார சபையில் யான் பலி விலக்குப் பிரசாரம் செய்துவந்த போது, தமிழகத்தின் பல பாகங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான இந்து சமய மக்கள் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் உயிர் பலியிடும் மூடபழக்க வழக்கத்தை அடியோடு துறந்துதுமன்றி, இனி எக்காலத்தும் இத்தகைய உயிர் பலியைச் செய்யமாட்டோம் என்று உறுதியுமளித்தனர். இவ்வுறுதி மொழியை வலியுறுத்தும் வகையில் என்னுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு என்னை மகிழ்வித்தனர். இவ்வெற்றி அஹிம்சையின் வெற்றியென உளம் பூரித்தேன். பூரித்தும் வருகின்றேன். அப்பெரு மக்களை இன்றும் நினைவு கூர்ந்து, வாழ்த்தி வருகின்றேன்.

நம் அன்பிற்குரிய திரு. பாவலர் பகவதி அவர்களின் மனமாற்றத்தையும், கொள்கை மாற்றத்தையும் இன்று கண்டுகளிக்கும் பெரும் வாய்ப்புப் பெற்றேன். உயிர்பலி வழிபாட்டைக் கைவிட்ட மக்கள் அறநெறிகளில் ஒரு கொள்கையை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள், நம் நற்காட்சிச் செம்மல் திரு. பாவலர் அவர்களோ, அறநெறிகளனைத்தையும் ஏற்றுக்கொண்டு தூய அறத்தினராகக் காட்சி அளிப்பவர். இப்பெருந்தகையின் வீரம் செறிந்த உணர்வும் செயற்காய செயலும் எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றன. இப்புண்ணிய சீலரை ஏழேழு பிறப்பிலும் மறக்கவியலாது. அறிஞர்கள் எவரும் போற்றுதற்குரிய திரு. பாவலர் அவர்களே உளம் கலந்து, உயிர் கலந்து வாழ்த்துகிறேன்.

அறம் வென்றது

கனவின் ஆற்றல்மேலும் ஒரு வெற்றியைத் தந்துள்ளது. 1978-ம் ஆண்டில் சென்னை அபிராமி எண்டர்பிரைசஸ் என்ற திரைப்பட நிறுவனத்தார், திருஞானசம்பந்தர் ஞானக்குழந்தை எனும் பெயரால் திரைப்படம் எடுக்க முயன்று வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இதனைக் கண்ணுற்ற யான் மேல்கண்ட திரைப்பட நிறுவன உரிமையாளருக்கு தமிழ்நாடு ஜைன சமங்க சார்பில் ஞானக் குழந்தை திரைப்படம் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் கதையாகையால் அதை வெளியிடக்கூடாதென எதிர்ப்புத் தொவித்து கடிதம் எழுதினேன். அக்கடிதத்தில் திருஞானசம்பந்தர் கதை ஜைன சமயத்தைப் பழித்தூற்றும் கதை என்றும், சமயக் காழ்ப்புக் காரணமாக கற்பனையாகப் புனைந்த புராணக் கதையே அன்றி வரலாற்று நிகழ்ச்சி அல்ல என்றும் தக்க ஆதாரங்களுடன் விளக்கி எழுதினேன். அத்துடன் 1937-ம் ஆண்டில் கல்கத்தா இஸ் மாஸ்டர்'ஸ் வாய்ஸ் இசைத்தட்டு கம்பெனியார் மேற்படி திருஞானசம்பந்தர் கதையை இசைத்தட்டுகளாக தயார் செய்து விட்டனர். இதனை அறிந்து யான் தமிழ்நாடு ஜெயின் சங்க சார்பில் அக்கதையை எதிர்த்து வழக்குத் தொடுத்தேன். அப்பொழுது ஆட்சிப் புரிந்துவந்த ஆங்கில ஆட்சியாளர் வழக்கை விசாரணை செய்து திருஞானசம்பந்தர் கதை வரலாற்று நிகழ்ச்சி அல்லவென்றும், சமயக்காழ்ப்பின் காரணமாக எழுதப்பெற்றக் கற்பனைக் கதையென்றும் தீர்ப்புக்கூறி அந்த இசைத்தட்டுகளைப் பறிமுதல் செய்த நிகழ்ச்சியையும், பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் மேற்படி திருஞானசம்பந்தர் கதையையும், திருநாவுக்கரசர் கதையையும் திரைப்படங்களாக எடுக்க முயற்சித்ததையும், நாடகங்களாக நடத்தி வந்ததையும் தமிழ்நாடு ஜெயின சங்கம் அவைகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து காங்கிரஸ் சர்க்காரால் தடைசெய்யப்பட்ட சாதனைகளை விளக்கி தக்க ஆதாரங்களுடன் கடிதம் எழுதி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தேன். என் அறிக்கைகள் சென்னை தினகரன் இதழிலும், விடுதலை இதழிலும் வெளிவந்தன. ஏற்கனவே என் கடிதத்தை ஆழ்ந்து படித்த அத்திரைப்பட நிறுவன உரிமையாளர் என் எதிர்ப்புக்கு பதில் அளிக்குமாறு, "ஞானக் குழந்தை" கதை வசனம் எழுதிய ஆசிரியரை பணித்தார். அவரும் எனக்கு பதில் எழுதும் வகையில் 13-7-78-ம் நாள் தினகரன் இதழில் அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில்,

"எங்கள் ஞானக்குழந்தை கதையில் எந்த ஒரு மதத்தையோ, இனத்தையோ தனி மனிதரையோ புண்படுத்தும் சம்பவங்களும் வசனங்களும் எங்கள் திரைப்படக் கதையில் இல்லை என்பதை தொவித்துக்கொள்கிறோம்"

எனக் குறிப்பிட்டு வெளியிட்டனர். இக்குறிப்பு ஒரு விதத்தில் நம்பிக்கையூட்டினாலும் படம் வெளிவரும் நாளை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. 1979 ஜுன் மாதத்தில் படம் திரையிடப்பட்டது. அந்நிறுவனத்தார் தங்கள் அறிக்கையில் குறித்தவாறு அப்படத்தில் ஜைன சம்பந்தமான சம்பவங்கள் ஏதுமின்றி படம் அமைந்திருந்தது. அந்நிறுவனத்தாரின் முற்போக்குக் தன்மையை நாம் பாராட்டுகிறோம். இம்மாபெரும் வெற்றி அறநெறிகளின் மாண்பினைக் காட்டுகிறது. காலைக் கனவு கைமேல் பலனை அளித்துள்ளதெனின் மிகைபடக் கூறுவதன்று.

 

1   2   3   4   5   6   7   8   9


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com