முகப்பு வாயில்

 


பாமேலழகரும் சீவக சிந்தாமணியும்

இனி பாமேலழகான் திருக்குறள் உரையை ஆராய்வோம். பாமேலழகர் காஞ்சியில் பிறந்தவர் வைணவ சமயத்தைச் சார்ந்த அர்ச்சக மரபினர். இவர் காலத்தைப்பற்றி பலர் பலவாறாகக் கூறுகின்றனர்.

உலகோர் புகழும் திருக்குறளுக்குத் தருமர் முதல் பாமேலழகர் வரை பதின்மர் உரை எழுதியுள்ளனர். இறுதியாக எழுதியவர் பாமேலழகராவர். மக்கள் வாழக்கை நெறியாய் விளங்கும் திருக்குறளுக்கு நேர் இலக்கியம் சீவக சிந்தாமணிக் காப்பியமே என அது தோன்றிய காலத்தினின்றும் பாராட்டும் கொள்கையை மெய்ப்பிப்பது போன்று பாமேலழகர் தம் திருக்குறள் உரையில் சீவக சிந்தாமணியைப் பல குறட்பாக்களுக்கு மேற்கோள் காட்டி விளங்க வைத்துள்ளக் காட்சியே சான்றாகும்.

மேற்கோள் மட்டுமல்ல 'எனைவகையாற் றேறிய கண்ணும்' என்ற குறட்பாவின் உரை விளக்கத்தில் கட்டியங் காரன் போல் அரசவின்பத்தினை வெகி விகாரப் படுவல்லது அதனைக் குற்றமென் றொழிந்து தம் இயல்பில் நிற்பார் அரியராகலின் வேறாகுமாந்தர் பலர்' என்றார் எனக் கதைப்பகுதியையும் எடுத்தாண்டுள்ளார். என்னே, பாமேலழகான் சிந்தாமணிப் பற்று; இலக்கிய மேதையல்லவா, இலக்கிய மதிப்பை உணர்ந்த இப்பெருந்தகை, இத்துடன் நின்றாரா சீவக சிந்தாமணியின் செய்யுள் நடையைத் தம் உரையில் ஆங்காங்கே வசனநடையாக அமைத்து மகிழந்துள்ளார். அச்சிறப்பையும் கண்டுகளிப்போம்.

1. குறள்: 275
'அதன் விளைவின்கண்' அந்தோ வினையே என்றழு வாராதலின்'
(சிந்தாமணி2629)
2. குறள்: 320
'உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளையும்'
அதுவேயாதலின் நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்றார்
(சிந்தா 2762)
3. குறள்: 407
'உருவின் மிக்கதோ ருடம் பது பெறுதாதாகலான்'
(சிந்தா 2752)
4. குறள்: 450
மோதி முள்ளோடு முட்பதைக் கண்டிடல் பேது செய்து பிளந்திடல்.
(சிந்தா 1920)
5. குறள்: 624
பகடு, மருங்கொற்றியும் மூக்கூன்றியும் தாடவாழ்ந்தும் உய்க்கு மாறுபோல்
(சிந்தா 2784)
6. குறள்: 668
'ஒளி' உறங்கா நிற்கவும் தாம் உலகங்காக்கின்ற அவர்தன்மை
(சிந்தா 248)

பாமேலழகர் சீவக சிந்தாமணியை எவ்வெவ்வாறெலாம் எடுத்தாண்டுள்ளார் என்பதை நோக்குமிடத்து, சிந்தாமணி ஜைன காவியமாக இருந்ததும், தாம் வைணவர் என்பதை மறந்து உயர்ந்த இலக்கியத்தின் பாலுள்ள மதிப்பையும் அன்பையும், பாசத்தையும் உள்ளத்தில் கொண்டு போற்றியுள்ளார். இப்பெரும் புலவர் பெருமானும் பொய புராணத்தை மேற்கோள் காட்டவில்லை. உமாபதி சிவாச்சாரியான் திசைமாற்றம் தீய எண்ணத்தையும் ஏற்றுக் கொள்ளாது. இலக்கியங்களின் மதிப்பையே குறிக்கோளாகக் கொண்டு தம் அறிவாற்றலுக்கேற்ப சிறந்த இலக்கிய சேவை புரிந்து இறவாப்புகழ் பெற்றுயர்ந்து காட்சி அளிக்கின்றார்.


சீவக சிந்தாமணியும் அறிஞர் பெஸ்கியும்:


இத்தாலிநாட்டினின்றும் தமிழகத்திற்கு விஜயம் செய்த அறிஞர் பெஸ்கி (Constantius Beschi) என்பார் தமிழ்மொழி கற்றுத் தமிழில் சிறந்த புலமைப் பெற்று விளங்கினார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். இங்கு வாழ்ந்து தமிழ் மொழி யின்று அறிஞராக விளங்கியதற் கறிகுறியாகத் தம் பெயரை வீரமா முனிவர் எனத் தமிழ்ப் பெயராக அமைத்துக் கொண்டார். இம்மேனாட்டுத் தமிழ் அறிஞர் தமிழ் இலக்கயிங்களிலே சீவக சிந்தாமணியின்பால் பொதும் ஈடுபாடுடைய வரானார். சிந்தாமணியை நன்கு பயின்று மகிழ்ந்து வந்தார். அப்பெருந்தகை தாம் பெற்ற தமிழ் அறிவால் ஐந்திலக்கணத் தொன்னூல் எனும் ஒரு இலக்கண நூலை இயற்றினார். அவ்விலக்கண நூலின் விளக்கத்துள் சீவக சிந்தாமணி காப்பிய செய்யுட்களையே பொதும் பெய்து மேற்கோள் காட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, இப்பேரறிஞர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் போன்றே சீவக சிந்தாமணியை வழியாகக் கொண்டு தேம்பாவணி என்ற கிறிஸ்துவ சமயக் காப்பியம் ஒன்றை இயற்றியுள்ளார் எனும் உண்மையைத் தமிழுலகம் நன்கு அறியும். அறிஞர் வீரமா முனிவர் சீவக சிந்தாமணியை இவ்வாறெல்லாம் மதித்துப் போற்றியதைக் குறித்து அவர் தம்முடைய நூலொன்றில் "சீவக சிந்தாமணியைப் படைத்தருளிய திருத்தக்கதேவர் தமிழ்க் கவிஞர்களுள் தலைசிறந்த சக்கரவர்த்தி" என உளம் கனிந்து புகழ்ந்து எழுதியுள்ளார்.

வாழும் இலக்கியமாக வழிகாட்டும் காவியமாக விளங்கும் சீவக சிந்தாமணியின் வனப்பு சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை அணிச்சுவை, ஆகியப் பல்வேறு சுவைகளைச் சுவைத்து இன்பங்கண்டு போற்றிய வீரமா முனிவர் போன்றே பல மேனாட்டு அறிஞர்கள சீவக சிந்தாமணியைப் போற்றி மகிழ்ந்துள்ளப் புகழுரைகளையும் இங்கே அளிக்கின்றேன்.

'சீவக சிந்தாமணி தமிழ்இலக்கியங்களில் தலைசிறந்தது. உலகமகா காவியங்களில் இலியாத் (Iliad) ஓடிஸியா (oddesseya) என்னும் பிரசித்தப் பெற்றக் கிக் நாட்டுக் காவியங்களுக்கு இணையான தமிழ்க்காவியம்."
-டாக்டர் ஜி யு போப்

"தமிழ்க் காவியங்களில் மிகப் புகழ் வாய்ந்தது சீவக சிந்தாமணி அந்நூலில் காவிய நயமில்லாமலிருந்தால் என்றோ மறைந்திருக்கும். அக்காவியம் புலவர்களின் உள்ளத்தைக் கவரும் சக்திவாய்ந்தது.
-ஜுலியன் வின்ஸன்
(பிரென்சு மொழி ஆராய்ச்சி நிபுணர்)

"விருத்தயாப்பைக் கையாளுவதிலும், உருவகம் முதலிய நயங்களிலும் தமிழ்ச் செய்யுள் வரலாற்றில் திருத்தக்கதேவர் ஒப்பாகும் மிக்காரு மின்றி விளங்குகிறார்."
-டாக்டர் கமில்சுவலெபில்
(செக்கோஸ்கோலோவேகியா)


சீவகசிந்தாமணியும் ஆங்கில பொழிப்புரையும்:


நாம் மேலே கண்ட ஆங்கில அறிஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட சீவக சிந்தாமணி மற்றொரு ஆங்கில அறிஞான H. பெளலர் (H. Foular) என்பவரையும் ஈர்த்துள்ளது. இப் பேரறிஞர் தமிழகம் வந்து தமிழ்மொழி கற்றுத் தமிழ் இலக்கியங்களை நன்கு ஆராய்ந்து வந்தார். பல இலக்கியங்களைப் பயின்ற இவர் சீவக சிந்தாமணியில் ஒன்றி விட்டார். படித்து படித்து இன்புற்றார். போலக்கியங்களை படிக்குந்தோறும் புதியபுதிய கருத்துக்களை வெளியிடுபவை எனும் அறிஞர் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சீவக சிந்தாமணியே என்பதை அறிந்து மகிழ்ந்தார். சீவக சிந்தாமணியைத் தமிழுலகம் படித்து இன்புறுவது போன்று ஆங்கில உலகும் படித்து மகிழ வேண்டும் என விழைந்தார்.

"தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்"

எனும் திருக்குறளின் திருமொழியை மேற்கொண்டார். சீவக சிந்தாமணியின் நாமகளிலம்பகத்தின் ஒவ்வொரு கவியையும் நன்கு ஆராய்ந்து அவ்விலம்பக முழுமைக்கும் ஆங்கிலத்தில் பொழிப்புரையாக எழுதிமுடித்தார். அத்துடன் அவர் ஆர்வம் அடங்கவில்லை.ஏன் எனில் ஆங்கில உலகம் இப்போலக்கியத்தைப் படித்து இன்புறவேண்டும் என்ற உணர்ச்சி வயப்பட்டவரல்லவா? அவ்வுள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்து முகத்தாள் தன் சொந்த பொருள் செலவிலேயே 1869-ஆம் ஆண்டில் அந்நூலை வெளியிட்டு மேல்நாடெங்கும் அனுப்பி மகிழ்ந்தார். தமிழகத்திலுள்ள அக்கால தமிழறிஞர்கள் பலரும் H.பெளலர் அவர்களின் செயற்காய இலக்கியச் சேவையைப் பொதும் பாராட்டிப் புகழ்ந்தனர். தமிழ்த்தாயின் பெருமைக்கும் சிறப்பிற்கும் உரிய ஐம்பெருங்காப்பியங்களில் தலைசிறந்து விளங்கும் சீவக சிந்தாமணியை உலகறியச் செய்த இலக்கியமேதை H. பெளலர் எனப் போற்றினர். தமிழ்மொழியின் வரலாற்றில் முதன் முதல் ஆங்கில மொழிப்பெயர்ப்புப் பெற்று விளங்கும் நூல் சீவக சிந்தாமணியே யாகும். இத்தகு தனிப்பெருமையைத் தேடித்தந்த அறிஞர் பெளலர் அவர்கள் சீவகசிந்தாமணியின் பால் எத்தகைய ஈடுபாடு உடையவராக விளங்கினார் என்பதை அந்நூலின் முகவுரையில் திருத்தக்கதேவரை கவிச்சக்கரவர்த்தி (prince of Poets)எனப் புகழ்ந்து எழுதி இருப்பதினின்றும் புலனாகிறது.

தமிழலக்கியங்கலையும், நீதிநூல்களையும் வேற்றுமொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்ற எண்ணமே தோன்றாத காலத்தில் காவிய வழிகாட்டி எனப் போற்றப்பெறும் சீவக சிந்தாமணியை முதன் முதல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்ட அறிஞர் பெளலர் எனப் புகழ்வது மிகையாகாது. தமிழகம் இப்பேரறிஞருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது.

இம்மேநாட்டறிஞர்களைப் போன்றே தமிழகத்திலுள்ள கிருஸ்துவப் பேரறிஞர்கள் சீவக சிந்தாமணியைப் போற்றிப் புகழும் அரிய பொன்மொழிகளையும் காண்போம்.

"கொடுங்கோல் மன்னன் ஒருவன் இந்நாட்டைக் கைப்பற்றி, இந்நாட்டிலுள்ள நூல்களையெல்லாம் எரியிலிட்டு அழிக்கக் கருதி ஒருங்கு தொகுத்து, தீ வைப்பதற்கு முன் அழைத்து இந்நூற்றொகுதியிலிருந்து நீ விரும்பும் ஒரு நூலை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று கட்டளை இடுவானாயின் யான் விரைந்தோடி சீவக சிந்தாமணியை எடுத்துக்கொள்வேன். அதுபோன்று உயர்ந்த நூல் பிறிதின்மையின்" என்று அறிஞர் ச.த. சற்குணம்,M.A, முன்னாள் கிருத்துவக் கல்லூரித் தலைமைத் தமிழ் பேராசிரியர் அவர்கள் கூறியுள்ளார்.

"சீவக சிந்தாமணியைப் பின்பற்றிய பின்னருங் கூடக் கலைத்திறத்தில் வறுமைப்பட்டும் அணித்திறத்தில் அழகிழந்தும், தீர்ப்பியலில் நடுத்திறம்பியும், பிற்கால நூல்கள் பொலிவற்றிருப்பது சிந்தாமணியை மேன்மேலும் சிறப்பிப்பதாகும்" என்று அறிஞர் தேவநேயப் பாவாணர், தமிழ்மொழி ஆராய்ச்சி நிபுணர் அவர்கள் கூறியுள்ளார்.

"தென்னாட்டில் சமண சமயம் தழைத்தோங்கிய காலத்தில் எழுந்த சமண நூல்கள் எண்ணற்றவை. அவற்றுள் தலை சிறந்த பெருங்காப்பியம் சீவகசிந்தாமணி தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெற விரும்புவோர் எவரும் இதனை கற்காமலிருக்க முடியாது. இதுவோர் சமண காவியமாயினும் பண்டும், இன்றும் யாவராலும் பியலப்பட்டு வருதல் கண்கூடு. அத்துணைச் சுவை மலிந்த இலக்கியம்! இன்பச் சுவையின் இருப்பிடம். வீரச் சுவையின் விளைநிலம் இது! பண்டைக்காலத் தமிழர்களின் பழக்கவழக்கங்கள் பலவற்றை இதன்கண் நன்கு தெளியலாம்" என்று அறிஞர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்;


வரலாற்றுச் சிறப்பமைந்த சிந்தாமணி மலர்:


வானத்தில் கதிரவன் நிலைபெற்றிருப்பது போன்று இலக்கிய உலகில் அணையாத அறிவுச் சுடராய் அனைத்துலக அறிஞர் பெருமக்களால் புகழ்ந்து போற்றி வரும் சீவக சிந்தாமணியின் பெருமையையும், இலக்கிய சுவையையும், காப்பிய நயத்தையும் பண்டைய காலத் தமிழ் புலவர் பெருமக்களின் பாராட்டுரைகளின் வாயிலாக முன்னர் கண்டுகளித்தது போன்று நாம் வாழும் இக்கால தமிழ் அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும், பாராடடுதலையும் அறியவேண்டுமல்லவா? அதற்கோர் வாய்ப்புக் கிடைத்தது.

1950-ஆம் ஆண்டில் வித்துவான் திரு. மே. வி. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார்கள். அதுசமயம் யான் காஞ்சிபுரம் bசன்று அந்நகர ஜைன பெருமக்களைக் கலந்துபேசி காஞ்சி ஜைன தமிழ் இலக்கியமன்றம் அமைத்து அதன் ஆதரவில் என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய பெருந்தகை வித்துவான் மே.வி.வேணுகோபால பிள்ளை அவர்களைக் கொண்டு சீவக சிந்தாமணி சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தேன். ஒவ்வொரு ஞாயிறுதோறும் திரு பிள்ளை அவர்கள் சிந்தாமணி சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். திரு. வித்துவான் பிள்ளை அவர்களின் அறிவுசான்ற சொற்பொழிவைக் கேட்ட ஜைன பெருமக்களே அன்றி பிறசமய அறிஞர்களும் தவறாமல் வருகைதந்து கேட்டும் இன்புற்றனர். இத்தொடர் சொற்பொழிவு 1952-ல் சிறப்பாக முடிவடைந்தது. காஞ்சி ஜைனத்தமிழ் இலக்கிய மன்றத்தினர் இப் போலக்கியச் சொற்பொழிவின் நினைவாக ஒரு மலர் வெளியிட விழைந்தனர். அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்ய முயற்சி எடுத்துக்கொண்டு தமிழகத்தின் தலைசிறந்த பல புலவர் பெருமக்களையும், அறிஞர்களையும் நேரே அணுகியும், கடிதம் வாயிலாகவும் சீவக சிந்தாமணிபற்றிய கட்டுரைகள் அருளுமாறு வேண்டிக்கொண்டேன். என்பால் அன்பு கொண்டுள்ள அத்தனைப்புலவர்களும் சீவக சிந்தாமணியைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கற்றார் போற்றும் கருந்தனமாய் விளங்கும் அரும்பெரும் கட்டுரைகளோடு சீவக சிந்தாமணியில் பெறலரும் பெருமையையும் புகழ்ந்து கனிந்த அன்புடன் எழுதி அளித்து உதவினர். இவர்களில் புலமை சான்ற மூன்று பெண்ணரசிகளும் கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளனர். இவ்அறிவார்ந்த கட்டுரைகளை வாசைப்படுத்திச் சீவகசிந்தாமணி சொற்பொழிவு நினைவு மலர் எனப் பெயர் சூட்டி மலராக உருவிக்கினோம். அறிவுக்கு விருந்தளிக்கும் இவ்விலக்கிய மலரை 1954ம் ஆண்டில் காஞ்சீபுரத்தில் மாண்புமிகு முன்னாள் கல்வி அமைச்சர் திரு. M. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் வெளியீட்டு விழா நடத்திச் சிறப்பித்தோம். அவ்விழாவன்று வித்துவான் உயர்திரு. மே. வி. வேணுகோபால் பிள்ளை அவர்கட்கு அவ் விழாவில் பாராட்டுரை வழங்கிய புலவர் பெருமக்கள் "சிந்தாமணிச் செல்வர்" எனும் பட்டமளித்துப் பெருமைப்படுத்தி மகிழந்தனர்.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com