முகப்பு வாயில்

 


இத்தகு சிறப்புகள் பெற்றுவிளங்கும் சீவகசிந்தாமணி நினைவு மலரைத் தங்கள் தங்கள் புலமைத்திறன் கொண்ட அறிவு சான்ற கட்டுரைகளால் அணி செய்தப் புலவர் பெருமக்களையும் வாசகர்கட்கு அறிமுகம் செய்து நன்றி கலந்த வணக்கம் செலுத்துவது என் கடமையும் பெருமையுமாகையால் மலால் உள்ளவாறு அச்சான்றோர்களின் பெயர்களை இங்கே அகம் கனிந்து அளிக்கின்றேன்.

1. திரு. கவிராஜபண்டிதர் ஜெகவீர பாண்டியனார் அவர்கள் (திருத்தக்கதேவர் துதி)
2. திரு. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் அவர்கள்
3 திரு. கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்கள்
4. திரு. தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்கள்
5. திரு. ச.த. சற்குணம், B.A., அவர்கள்
6. திரு. ராவ்சாஹிப் N. வையாபுரிப் பிள்ளை அவர்கள்
7. திரு. பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், M.A., B.L., M.O.L. அவர்கள்
8. திரு. பன்மொழிப் புலவர் வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள்
9. திரு. புலவர் க.ரா. கோவிந்தராச முதலியார் அவர்கள்
10. திரு. கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் அவர்கள்
11. திரு. கவிராஜ பண்டித வித்துவான் கனகராஜ ஐயர் அவர்கள்
12. திரு. ராவ்சாஹிப் K. கோதண்டபாணி பிள்ளை B.A., அவர்கள்
13. திரு. டாக்டர் மு. வரதராசனார் அவர்கள்
14. திரு. T.P. பழனியப்பப் பிள்ளை, B.O.L. அவர்கள்
15. திரு. வித்துவான் ஞா தேவநேயப் பாவாணர் B.O.L. அவர்கள்
16. திரு. புலவர் முத்து சு மாணிக்க வாசக முதலியார் அவர்கள்
17. திரு. யோகியார் ஸ்ரீ சுத்தானந்த் பாரதியாரவர்கள்
18. திரு. ஆ.கி. பரந்தாமனார் M.A.,அவர்கள்
19. திரு. வித்வான் பண்டிதரா நடேச நாயகர் அவர்கள்
20. திரு. அ.மு. பரமசிவானந்தமவர்கள். M.A.D.Lit.
21. திரு. ஈ.த. இராஜேஸ்வாயம்மையார் M.A.L.T. அவர்கள்
22. திரு. R. இராசரத்தினம் அம்மையார் M.A.L.T. அவர்கள்
23. திரு. பண்டிதையார் S.கிருஷ்ணவேணி அம்மையார் அவர்கள்
24. திரு. ராவ்பகதூர் C.M. இராமசந்திர செட்டியார் அவர்கள்
25. திரு. வல்லை. பாலசுப்பிரமணியம் B.A., அவர்கள்
26. திரு. தா. ஏ. ஞானமூர்த்தி, M.A.,அவர்கள்
27. திரு. கிருஷ்ணமூர்த்தி, M.A, N.C.C., அவர்கள்
28. திரு. வித்வான் பாலூர் D.கண்ணப்ப முதலியார் P.O.L அவர்கள்
29. திரு. சிந்தாமணிப் புலவர்' பண்டித வி நடேசனார் அவர்கள்
30. திரு. வித்வான் R.S. சாம்பசிவசர்மா, P.O.L அவர்கள்
31. திரு. ஐ. தங்கசாமி அவர்கள்
32. திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்
33. திரு. வித்வான் மொ. அ. துரை அரங்கசாமி M.A. M.O.L அவர்கள்
34. திரு. ரா.பி. சேதுப்பிள்ளை, B.A. B.L அவர்கள்
35. திரு. கி.வ. ஜகந்நாதன் B.O.L அவர்கள்
36. திரு. டாக்டர் மா. இராசமாணிக்கம், M.A.L.T., M.D.L. Ph. D. அவர்கள்
37. திரு. சிவநெறிச் செஞ்சொற் கொண்டல் இளவழகனார் அவர்கள்.

இம் மாபெரும் அறிஞர் பெருமக்களின் முப்பத்தேழு கலைப்படைப்புகளைக் கொண்ட இம்மலர் சீவகசிந்தாமணியை முதல் முதல் முழுமையாகப் பல்வேறு குறிப்புகளுடன் அச்சிட்டு தமிழுலகுக்குத் தந்தருளிய மகா மகோபாத்யாய, டாக்டர் உ.வே. சாமிநாத அய்யா அவர்கள் கலைமகள் இதழில் எழுதிய பவ்விய ஜீவன் என்ற கட்டுரையுடன் மலர்ந்துள்ளது.

ஜைன சமயச் சான்றோரும் தத்துவ சூடாமணியுமாகிய பேராசிரியர் உயர்திரு. அ. சக்கரவர்த்தி நைனார்,M.A.I.E.S. (Rtd) அவர்கள், மலரைக் கலைக் களஞ்சியமாக விளங்கச் செய்து பெருமைப்படுத்திய புலவர் பெருமக்களைப் பாராட்டியும், வாழ்த்தியும், நன்றி நவின்றும் வழங்கியுள்ள முன்னுரையின் இறுதியில்.

"இந்நூல், இந்நாள் உலகில், மதக்காழ்ப்பும், வகுப்பு வேற்றுமையின்றிச் செய்யப்படும் ஆராய்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரிய காலப்பகுதியைக் குறிக்கிறது. நாம் அனைவரும் பண்டைத் தமிழ்இலக்கியங்களின் ஆராய்ச்சிப் பயிற்ச்சிக்குரிய புதிய சகாப்தத்தின் தொடக்கமாய் இது அமையுமென நம்புவோமாக"

என உளங்கனிந்து வரைந்துள்ள அரிய உரைகளோடு இம்மலர் ஆரம்பமாகியுள்ளது.

இவ் இலக்கிய மலால் கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்துள்ள அறிஞர்கள் போன்றே பல புலவர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் தனித்தனித் துறையில் சீவக சிந்தாமணி என ஆழந்து படித்துப் துய்த்து எழுதியுள்ள கட்டுரைகளும், நூல்களும் பலப்பல. அச்சான்றோர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம் உரித்தாகுக.

கவிச் சக்கரவர்த்தி திருத்தக்க தேவர் அருளிய சீவக சிந்தாமணியின் காவியச் சிறப்பையும், பெருமையையும் உலக அறிஞர்களின் மதிப்பீட்டையும், மாண்பினையும் அறிந்தோம்.

சீவக சிந்தாமணியை முதன்மையாகக் கொண்ட ஐப்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் ஜைன அறவோரே என்பதையும் அறிஞர் உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். மறுக்கவியலாத இப்பேருண்மையை மறைக்க வேண்டி புலவர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் இளங்கோவடிகள் சைவ சமயத்தவர் என எழுதி அடியார்க்கு நல்லாரின் புலமைசான்ற உரை இருக்கதாம் ஒரு உரை எழுதியதாகக் காட்ட வேண்டி, அடியார்க்கு நல்லார் உரையில் உள்ள அரிய கருத்துக்கள் சிலவற்றை மாற்றி உரை எழுதிக்குழப்பத்தை உண்டாக்கியுள்ளார். இவர் கூற்றை மறுத்த யான், "இளங்கோவடிகள் சமயம் யாது?" என்ற ஓரு ஆய்வு நூல் எழுதி இளங்கோவடிகள் ஜைன அறவோரே என்பதை விளக்கி மெய்ப்பித்துள்ளேன். திரு. வேங்கடசாமி நாட்டாரின் காழ்ப்புக் கருத்தில் மயங்காது நாம் மேலே கூறிய கருத்தை உள்ளத்தில் கொண்டும் என் ஆய்வு நூலையும் ஆழ்ந்து படித்தும் உண்மை காணுமாறு புலவர் பெருமக்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

இவ்விரு காவியங்கள் போன்றே வளையாபதியும், சிறு பஞ்ச காவியங்களாகிய சூளாமணி பெருங்கதை, யசோதர காவியம், நாககுமார காவியம் நீலகேசி ஆகிய ஐந்துடன் உதயணகுமார காவியம், மேருமந்தர புராணம், நாரதர் சாதம், சாந்தி புராணம் போன்ற பல இலக்கியங்களையும், பதினெண் கீழ்க்கணக்குகள், நீதி நூல்கள், இலக்கணங்கள் நிகண்டுகள், கணித நூல்கள், இசை நூல்கள், நாடக நூல்கள், சோதிட நூல்கள் இயற்றித் தமிழ் அன்னையை அணிபெறச் செய்து கலைக்களஞ்சிய அரியாசனத்திலே அமர்த்தி உலகோர் போற்றும் வண்ணம் காட்சியளிக்கச் செய்தனர் ஜைன அறவோர்கள் இந்நூலின் இறுதியில் மேலே குறிப்பிட்ட நூல்களின் விவரங்களையும், ஆசிரியர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியலை அளிக்கிறேன்.

தமிழ் மொழியின் சிறப்பிற்கும் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்றே வடமொழியிலும் தமிழக ஜைன அறவோர்கள் இலக்கியங்களும், தத்துவக் கலைகளும், தர்க்க நூல்களும், நீதி நூல்களும் இயற்றி வளம்பெறச் செய்துள்ளனர். குறிப்பாக குந்தகுந்தாச்சாரியார், சமந்தபத்திராசாரியார், அகளங்க தேவர், ஜின சேனாசாரியார், குணபத்திராசாரியார், வித்தியாநந்தி, புஷ்பதந்தர், மகாவீராசாரியார், நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, மல்லிசேனர், வீரநந்தி, சமயதிவாகரவாமன முனிவர், வாதீப சிம்மர் போன்று பலராவர். இச்சான்றோர்கள் அனைவரும் தமிழகத்திலே பிறந்து வளர்ந்த வாழ்ந்து-துறவறம் பூண்டு, வடமொழி-தமிழ் மொழியில் மேதைகளாகத் திகழ்ந்தவர்கள். மேலே கண்ட வாதீப சிம்மர் தாம் இயற்றிய க்ஷத்திரசூடாமணி என்னும் வடமொழி நூலில் ராஜராஜ சோழனைப் புகழ்ந்துள்ளார்.

தமிழக மலைக்குகைளில் விளங்கும் பள்ளிகளில் காணும் கல்வெட்டுச் செய்திகளில் பொறிக்கப் பெற்றுள்ள சில அறவோர்களின் பெயர்களையும், மகளிர் துறவியர்களில் பெயர்களையும் இங்கே தருகின்றேன். இப்புனிதப் பெயர்களை அறிந்தால் நம் உள்ளம் பூரிப்படையும்.

1. அச்சணந்தி ஆசாரியர் 2. அரிட்டநேமி பொயார் 3. அஷ்ட உபவாசி பட்டாரர் 4. பத்திரபாகு 5. சந்திரகாந்தி ஆசாரியார் 6. தயாபாலர் 7. தர்மதேவ ஆசாரியார் 8. ஏலாச் சாரியார் 9. குணகீர்த்தி படாரர் 10. குணசேனர் 11. குணவீரர் 12. குணவீரக் குரவடிகள் 13. இளையபடாரர் 14. இந்திரசேனார் 15. கனகநந்திப் பொயார் 16. கனகசந்திர பண்டிதர் 17. பலதேவர் மாணாக்கர் கனக வீரர் 18. குரந்தி கனக நந்தி படாரர் 19. குரந்தி தீர்த்த படாரர் 2. குருக்கள் சந்திர கீர்த்தி 21. மகாநந்தி 22.மலையத்துவசர் 23. மல்லிசேனப் பொயார் 24. மல்லி சேன வாமானாச்சாரியார் 25.மதிசாகரர் 26. மெளனி படாரர் 27. மிங்கை குமன் 28. முனிசர்வ நந்தி 29. ஆசான் ஸ்ரீபாலன் 30. மாகணந்திபட்டாரர் 31. அரையங்காவிதி சங்க நம்பி 32. நாக நந்தி 33. நால்கூர் அமலநேமி படாரர் 34. நாட்டிய படாரர் 35.பரவாதி மல்லிபுஷ்ப சேன வாமனா சாரியார் 36. பார்ஸ்வ படாரர் 37. பட்டினி படாரர் 38. பூராண சந்திரர் 39. புஷ்ப சேன வாமனா சாரியார் 40. சாந்திவீர குரவர் 41. ஸ்ரீ நந்தி 42. ஸ்ரீமலைக்குளம் ஸ்ரீவர்த்தமானார் 43. உத்த நந்தி அடிகள் 44. வாதிராசர் 45. வச்சிர நந்தி 46. வேலிகொங்கரையர் புத்தடிகள் 47. விசாகாசாரியார் 48. வேலிகெங்கரையர் யுத்தடிகள் 47. விசாகாசாரியார் 48. வினய பாசுர குருவடிகள் 48. திருக்குரண்டி பாதமூலத்தான் 50. குணசாகரர் 51. பவணந்தி 52. வீரசேனார் 53. நேமிசந்திரர் 54. அகளங்கர் 55. அபயநந்தி 56. வீரநந்தி ஆசாரியார் 57. இந்திர நந்தி 58. குணபத்திர மாமுனிவர் 59. வசுதேவசித்தாந்த பட்டாரகர்.

மகளிர் துறவிகள் (ஆரியாங்கனைகள்):-

1. அரிட்டநேமி குரத்தியார் 2. அவ்வையார் 3. குணம் தாங்கிச் குரத்தியார் 4. இளநேகரத்துக் குரத்தியார் 5. கவுந்தியடிகள் 6. கனகவீரக் குரத்தியார் 7. கூடல் குரத்தியார் 8. மம்மை குரத்தியார் 9. மிழலூர் குரத்தியார் 10. நல்கூர் குரத்தியார் 11. அரிஷ்டநேமி பட்டாரர் மாணாக்கி பட்டினி குரத்தி அடிகள் 12. பேரூர் குரத்தியார் 13.பிச்சைக் குரத்தியார் 14. பூர்வ நந்தி குரத்தியார் 15. சங்கக் குரத்தியார் 16. திருவிசைக் குரத்தியார் 17. ஸ்ரீவிசயக் குரத்தியார் 18. திருமலைக் குரத்தியார் 19. திருப்பருத்திக் குரத்தியார் 20. திருச்சாரணத்துக் குரத்தியார். மேலும் பலர் உள்ளனர்.

செங்காயபர் என்ற ஜைன முனிவர் தவமியற்றிய
புகழி மலையும் சேரமன்னர் சேவையும்

கருவூரிலிருந்து எட்டு மைல் தூரத்தில் புகழிமலை அல்லது ஆறுநாட்டான் மலை என்ற வரலாற்றுச் சிறப்பமைந்த மலை என்று உள்ளது.

அம் மலைக்குகையில் செங்காயபர் என்ற ஜைன முனிவர் தவமியற்றி வந்தார். அம்முனிவான் பெருமையையும் பேரறிவையும் அறிந்த சேரமன்னர் இளங்கடுங்கோ அப்புனித மலைக்குச் சென்று செங்காயப முனிவரைத்தாசித்து அறவுரை, கேட்டு மகிழ்ந்தான். அத்துடன் முனிவர் தங்குமிடத்தில் பாழியமைத்துப் படுக்கையும் செதுக்கி வைத்தான்.

இச்செய்தி அறிந்து சங்ககால மன்னர்களும் அங்கு சென்று அம்முனிவரை வணங்கி அறங்கேட்டு வந்தனர்.

குறிப்பாக, பொன்வணிகன் கோசிபன், பிட்டன், ஆதன் கொற்றன் கீரன், ஓரி ஆகிய நால்வருமாவர்.

இவ்வரலாற்றுச் செய்திகள்யாவும் அம்மலைக்குகையில் தாமிழி அல்லது பிராமி எழுத்துக்களில் நான்கு இடங்களில் பொறிக்கப் பெற்றுள்ளன.

சேரமன்னர் வரலாற்றைச் குறிக்கும் கல்வெட்டு செய்தி இதொன்றே எனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இதுபோன்றே மேற்குறிப்பிட்டுள்ள அறவோர்களும் குரத்தியர்களும் (ஆர்யாங்கனைகள்) வரலாற்றுச் சிறப்புடையச் செய்திகளைக் கொண்டவர்களே.

இதுவரை கண்ட எல்லா அறவோர்களும் பகவான் விருஷபதேவர் அருளிய அஹிம்ஸா தருமத்தின் அடிப்படையில் இல்லறம் -துறவறம் ஆகிய இரு பேரறங்களை நூல்கள் வாயிலாக படைத்தும், நாடெங்கும் சென்று அறவுரைகளாற்றியும், தங்கள் தங்கள் பள்ளிகளில்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வி அறிவையும் பல்வேறு கலைகளையும் கற்பித்தும், மக்கள் வாழ்க்கைப் பண்பை வளர்த்தத் தமிழ் சான்றோர்களாவர். இவர்கள் நூல்களும், உபதேசங்களும் அறநெறியின்பால் அமைந்தவை. சமயம் என்ற பெயரே காணவியலாத பொது நெறிகளாகும்.

இல்லறம் துறவறம்; ஆகிய இரு அறநெறிகளில் இல்லற நெறிகளைக் காண்போம். திருக்கலம்பகம் ஆசிரியர் உதீசிதேவர் இல்லற நெறிகளைத் தொகுத்து அமைத்துள்ள பாடலில்

"விரையார் மலர்மிசை வருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார் பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனையுவலார்
மிகுபொருள் உவவார் வெஞ்
சுரையால் உணர்வினை யழியார் யழிதசை துவ்வார்
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார் இரவுணல் புகழார்
குரவரை இகழாரே."
திருக்கலம்பகம்

கொல்லாமை (அஹிம்ஸை) பொய்யாமை-கள்ளாமை-பிறர்மனை நயவாமை மிகுபொருள் விரும்பாமை, கள் குடியாமை ஊனுண்ணாமை-தேனுண்ணாமை, இரவுண்ணாமை, பொயோரை நிந்தியாமை, ஆகிய பத்து நெறிகளையும் மேற்கொண்டு வாழ்தலே, இல்லறத்தார் அறம் என விளக்கியுள்ளார் இக் கொள்கைகளை திருவறம் என அழைத்திருப்பதினின்றே இவைகள் மக்கள் பலருக்கும் உரிய கொள்கைகள் என்பது கலங்கரை விளக்கம்போல் தெளிவாகின்றன. எனவே இப்பேரறங்களை வகுத்தருளிய மலர்மிசை நடந்த ஆதி அருகனின் உள்ளக் கிடக்கையும் புலனாகிறது.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com