முகப்பு வாயில்

 


 

இதுவரை ஆய்ந்த வரலாற்றால் அப்பர், சம்பந்தர் எனும் பெயர் கொண்ட ஜைன அறவோர்களை அறிந்தோம் இவ்வுண்மையை உறுதிப்படுத்தும் வகையில் அப்பாண்டைநாதர் உலா எனும் சிற்றிலக்கியம் இயற்றியருளிய அனந்தவிசயர் அருளிச் செய்த திருநறுங்கொண்டை உலா கண்ணி 55ல்.

"அப்பர்சம் பந்தர்க்கு அன்பாய் விழிகொடுத்த
அப்பன் சினகிரிவாழ் அய்யன்தாள்"

எனப் போற்றி இவ்விரு அறவோர்களும் திருநறுங்கொண்டை அப்பாண்டை நாதான் அருளால் ஞானம் பெற்ற முனிபுங்கவர்கள் என்பதைக் கலங்கரை விளக்கம்போல் காட்டியுள்ளார். எனபே சைவ சமயப் புராணங்களில் காணும் அப்பர், சம்பநச்தர் என்போர் இவர்களிலும் வேறுபட்டவர்கள் என்பதையும் இவ்விருவரும ஜைன அறவோர்களின் பெயர்களை பிற்காலத்தில் தங்களுக்குச் சூட்டிக் கொண்டவர்கள் அல்லது சூட்டப் பெற்றவர்கள் என்பதையும் அறிய இடமளிக்கிறது.

*பேராசிரியர் டாக்டர் ஹாஜிமேகநாமூரா என்ற அறிஞர் தமது வரலாற்று ஆராய்ச்சி நூலில் சீன மொழியிலுள்ள 'பிடக்கிரந்தம்' என்னும் நூலில் "மகா சத்ய நிர்க்கிரந்த பத்ர வியாகரண சூத்திரம்" என்னும் ஜைன நூல் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு வியப்புற்றேன். மேற்படி நூலானது போதிருசி என்பவரால் கி.பி. 519ம் ஆண்டு சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெளத்த திரி பீடத்தில் அதை இணைத்துள்ள நோக்கம் சைனா வாழ் ஜைனர்களை பெளத்த மதம் தழுவும்படி செய்வதற்காகவே என்பது தெளிவாகிறது" என எழுதியுள்ளார் இவ்வரலாற்றைக் கொண்டு ஆராயின் நாம் மேலே கண்ட ஜைன அறவோர்களின் பெயர்களைச் சைவசமய நாயன்மார்கள் தங்கள் பெயர்களாகச் சூட்டிக்கொண்டதன் நோக்கம் இங்குள்ள ஜைன மக்களை மத மாற்றம் செய்யவேண்டியே என்பதில் ஐயமில்லை இதனை மெய்ப்பிக்கத் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் காலமே துணை செய்கிறது.
* காம்தா பிரசாத் ஜெயின் அவர்கள் வாய்ஸ் ஆப் அஹிம்சா என்ற இந்தி பத்ரிகையில் எழுதியதின்று எடுக்கப்பட்டது.

திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டல்ல, கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 11ம் நூற்றாண்டேயாகும். இக்கொள்கையை உறுதிப்படுத்த அவ்விருவான் தேவராப் பாடல்களின் வரலாறே பறைசாற்றுகின்றன. இப்பாடல்கள் புதையுண்டு கிடந்ததெனவும் இராஜ இராஜ சோழன் காலத்தில் அதாவது 10,10 ம் நூற்றாண்டுகளில் கண்டெடுக்கப்பட்டதெனவும் கூறப்படுகின்றன. இவ்வரலாற்றினின்றும் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் வாழ்ந்ததும், தேவாரம் பாடியதும் பத்தாம் நூற்றாண்டில் இறுதியே எனக் கொள்வதே சாலப்பொருந்தும்.இவ்வுண்மையை மறைக்கவே பிற்காலத்தில் தேவாரப் பாக்கள் புதை பொருளாகக் கிடைத்தனவென்றும் இவைகள் ஏழாம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டன வென்றும் கதைகட்டிவிட்டார்கள்.

இது கற்பனைக்கதையேயன்றி உண்மையல்ல என்பதை மெய்ப்பிக்க அறிஞர் டாக்டர் (R.A. Saletor)ஆர். ஏ. சாலடோர் அவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை நமக்குத் துணை புரிகின்றது. டாக்டர் ஆர்.ஏ. சாலடோர் (R.A. Saletor)அவர்கள் தமது அகளங்கர் வரலாற்றுக்கட்டுரை என்ற நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

" I shall select that relating to the Tamil Saint Thirugnana Sambandar whom I have assigned to the last quarter of the tenth and first quarter of the eleventh century A D in my work"

இவ்வாய வரலாற்றுச் செய்தியால் நாம் ஓர் உண்மையை அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டது எனலாம் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கி பி பதினெழாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் இரு வரும் பாடிய தேவாரப் பாக்களும் அக்காலத்தவையே என்பது தெளிவாகிவிட்டது. அதுமட்டுமல்ல நாம் முன்னர் கூறிய ஜைன அறவோர்களாகிய அப்பர் சம்பந்தரருக்கும் பின்னர் தோன்றியவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தவும் துணையாகிறது. மேலும் திருநாவுக்கரசர் தேவாரம் பாடியிருப்பதைப் பொறாது ஓர் தில்லை மூவாயிரத்தைச் சார்ந்த அந்தணப் புலவர் எவரோ வேதவேள்விக்குச் சிறப்பிடம் அளிக்க வேண்டி தானே ஒரு தேவாரம் பாடி இதை இயற்றியவர் திருஞான சம்பந்தர் எனப் பெயரிட்டு பரப்பி விட்டார்கள் எனச் சில் அறிஞர்களிடையே பரவலாகப் பேசப்பட்டுவரும் கருத்துக்களைப் புறக்கணிப்தற்கில்லை. ஏனெனில் திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் வேதவேள்வியைக் குறித்து ஒரு பாடலும் பாடவில்லை என்பது ஒன்று. மற்றொன்று ஞானசம்பந்தர் பாடியதாகக் கூறும் தேவாரத்தில் ஒவ்வொரு கோயில் பாடல்களின் இறுதிப் பாட்டுகளில் ஞானசம்பந்தான் பாடல் என முத்திரையிட்டது போல பாடப் பெற்றுள்ளன.

அதுமட்டுமல்ல! தமிழ் ஞானசம்பந்தன் எனவும்சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளால் ஞானசம்பந்தரே பாடினார் என்பதையும் அவரும் திருநாவுக்கரசரைப் போன்றே தமிழர் தாம்; என்பதையும் உறுதிப்படுத்த வேண்டி மூவாயிரத்து புலவர் மேற்கொண்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என ஊகிக்க இடமளிக்கிறது. தமிழ் ஞான சம்பந்தன எனப் பாடியதற்குக் காரணம் வேத வேள்வியையும் வைதிகக் கொள்கைகளையும் தமிழன் புறக்கணிக்கவில்லை என்பதைக் காட்டித் தமிழர்களை மயக்கவே செய்த மாபெரும் சூழ்ச்சியோகும் திருநாவுக்கரசர் வேதவேள்வியை ஆதாக்காததால் தமிழர்கள் வேத வேள்வியை வெறுப்பார்கள் என்ற அச்சத்தால் தமிழன் ஏற்றுக்கொண்டுள்ளான் என்பதை அறிய வைக்கவே 'தமிழ்ஞான சம்பந்தன்' எனப் பாடி வைத்தார் எனில் மிகையாகாது. அவ்வாறின்றி ஞான சம்பந்தரே பாடியதாக வைத்துக் கொண்டாலும் அவரும் தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வழி வழி பின்பற்றி வரும் வைதிகத்தின் வழியும்,வேதவேள்வியும், காபாலிகக் கொள்கையும் தமிழர்களுக்கும் உடன்பாடே என்ற எண்ணத்தைப் புகுத்தவே ஞானசம்பந்தர் தன்னை தமிழ் ஞான சம்பந்தன் எனப் பறைச்சாற்றிக் கொண்டுள்ளார் என ஐயமறத் தெளியலாம். ஞானசமபந்தருடன் வாழ்ந்து தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் தமிழராய் இருந்ததும் தன்னை "தமிழறிஞன் திருநாவுக்கரசர், என கூறிக்கொள்வுமில்லை. தம் பாக்களின் இறுதியில் தன் பெயரைக் குறிக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் காய்தல் உவத்தலின்றி ஆழ்ந்தறிந்து காணின் நாம் முன்னர்கூறியது போன்று ஜைன சமயத்தவர்கள் மனதைக் குழப்பத்தில் ஆழ்த்தவே சைன அறவோர்களின் பெயர்களைத் தங்கள் சமயத் தொண்டர்களுக்குச் சூட்டியிருக்க வேண்டும் என்ற உண்மையைத் தெளிவாக அறிவர். இதற்கு எடுத்துக் காட்டாகத் தேவாரங்களுக்கு அடுத்து இயற்றப் பெற்ற பொயபுராணம், திருவிளையாடற் புராணங்களே சான்றாகும். அப்புராணங்களில் காணும் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் கதைகளில் கமணசமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்குத் தேவராங்கள் ஆதாரமே கிடையா குறிப்பாக திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர் ஜைன மடத்தில் கல்வி கற்றார் என்பதும், அம்மடத்திற்குத் தலைவராகி தருமசேனர் எனப் பட்டம் பெற்றார் என்பதும் அகச் சான்றற்ற செய்திகளே இக்கற்பனை போன்றதே மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரை யானைக்காலில் இடரவிட்டது, சுண்ணாம்புக் கால்வாயில் தள்ளியது, கல்லைக்கட்டி கடலில் விட்டது. மகேந்திர பல்லவர் சமணத்தை விட்டு சைவம் புகுந்தது ஆகியவைகள் இக்கற்பனைக்காக சேக்கிழார் எடுத்துக்காட்டியுள்ள தேவாரப் பாக்களில் அகச்சான்றேயில்லை.

திருஞான சம்பந்தர் கதையில் சமணர்கள் சம்பந்தர் மடத்தில் தீ வைத்ததற்கும் எண்ணாயிரம் ஜைன முனிவர்களை கழுவேற்றி வாதப்போர் நடந்ததற்கும், பாண்டிய மன்னன் மதம் மாறியதற்கும். யானை, நாகத்தை, பசுவை ஏவிய கதைக்கும் தேவாரத்தில் ஆதாரம் இல்லை. அகச்சான்ற புராணக் கதைகளை வைத்துக்கொண்டு அன்றுமுதல் இன்று வரை சைவப் புராணிகர்களும், புலவர்களும்; சில எழுத்தாளர்களும் சொற்பொழிவு வாயிலாகவும் கட்டுரை வாயிலாகவும் கதா காலக்ஷபம் வாயிலாகவும் ஜைன சமயத்தைப் பழித்து வருவதைத் தமிழக மக்கள் நன்கு அறிவர்.

எவ்வாறெல்லாம் பழிக்கின்றார்கள். திரித்துக் கூறியுள்ளார்கள் என்பவற்றை முன்னரே எழுதியுள்ளோம். இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று திரு. மு அருணாசலம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாறு என்ற வாசையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு நூல்கள் பற்றி எழுதிய நூலில், அத்தியாயம் 10, சைன இலக்கியம் என்ற தலைப்பின் முன்னுரையின் முதல் பாராவில்.

நாளடைவில் அவர் போதித்த (மகாவீரர்) சினதருமம் தெற்கே நோக்கிப் பரவி, ஐந்நூறு ஆண்டுகளில் தமிழ் நாட்டிலும் அணுகி வந்தது. பின்னரும் ஐந்நூறு ஆண்டுகளில், பல்லவ, பாண்டிய நாடுகள் முழுமையும் வியாபித்து, பிற ஆத்திக சமயங்களுடன் இடையூறு செய்யவே அப்பர், சம்பந்தர் போன்ற அருளாளர் தோன்றி சமணர் குறும்படக்கிச் சைவத்தை நிலை நாட்டினார்கள்" என எழுதியுள்ளார் வரலாறு என்ற பெயரால் ஜைன இலக்கியம் எனத் தலைப்பிட்டு ஆரம்பத்திலேயே இவ்வாறு எழுதுவது சமயற்காழ்ப்பின் குறும்புத்தனமேயாகும். வரலாறாயின் ஜைனர்கள் என்னென்ன இடையுறுகள் புரிந்தார்கள் என்பதை விளக்கிக்காட்டி இத்தகு குறும்புகளை அடக்கினார்கள் என எழுதுவதே வரலாற்றுத் துறையினான் மரபாகும். அவ்வாறின்றி இடையூறு செய்தார்கள் என மொட்டையாக எழுதிக் குற்றஞ்சாட்டுவது வரலாற்று நூலாகாது சமயக் காழ்ப்பு நூலேயாகும். இத்தகைய ஆதாரமற்ற நூல்களை வரலாற்றுத் துறை மாணவ மாணவிகள் படித்தால் தங்கள் சிந்தையிலே சீறி எள்ளி நகையாடுவார்கள். அறிஞர் உலகைப்பரப்பற்றி யாம் கூறவேண்டியதில்லை. வரலாறு என்ற சிறப்புத் துறைக்கு இழுக்கைத் தேடித்தரும் குறும்புத்தனம் எனப் புறக்கணிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. திரு. மு.அருணாசலம் அவர்கள் சமணர்கள் இடையூறு செய்யவே என மொட்டையாக எழுதியதற்குக் காரணம் அவர் இடையூறாக நினைக்கும் செயல்கள் யாவும் அவர் சார்ந்துள்ள சமயத்தின் கொள்கைகளாதலால் அவை வெளிப்பட்டுவிடுமே என்ற அச்சமேயாகும். எனவேஇவர் பழிக்கூற்றில் முகமூடியைக் கிழித்தெறிந்து உண்மை காண வேண்டியது இன்றியமையாததாகையால் அவற்றை இங்கு விள்க்க கடமைப்பட்டுள்ளோம். அதுமட்டுமல்ல அவை இன்றியமையாதனவா என்பதை வாசகர்கள் அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாகும். சமணர்களுக்கும் ஞானசம்பந்தருக்கும் நடந்த சமயப்போரை முன்னரே எழுதியுள்ளோமெனினும் இங்கு சுருக்கமாகக் கூறுவோம். தமிழகத்தில் மாய்ந்துபோன வேதவேள்வியாகிய கொலை வேள்வியும் கபாலிகத்தை கையிலேந்தி கள்ளையும், ஊனையும் நிரப்பிக்கொண்டு, மண்டைஓடுகளையும் எலும்புகளையும் மாலையாகக் தாத்து கொண்டு தத்தம் மனைவிகளோடு நமச்சிவாயா! நமச்சிவாயா!வென வீதிகள் தோறும் குடித்துக் திரியும் கபாலிகர்கள். காளமுகர்களின் கோரச் செயல்களையும், தெய்வத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் விலங்குபலி நரபலி ஆகியவற்றைச் செய்யும் மூடநம்பிக்கைகளையும், பிறப்பின் பெயரால் ஜாதி மதங்களைக் கற்பித்து மக்கள் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வைக் கொண்ட சமுக விரோத செயலையும் பரப்பி வருவதைக் கண்டித்தார்கள். மக்களின் அறியாமையைப் போக்கி அறிவையும், பண்டைய அறநெறிகளையும் வளர்க்கவே சமணர்கள் பாடுபட்டார்கள். இவைதான் உண்மை வரலாறு இவ்வரலாற்றை ஞானசம்பந்தர் தேவாரத்திலும், திருநாவுக்கரசர் தேவராத்திலும் காணலாம். இத்தகைய அறநெறியை சமணர்கள் பரப்பியதால் மேலே கண்ட திருஞானசம்பந்தான் வேத சம்பந்தமான வைதீக கொள்கைகளுக்கு இடையூறாகிவிட்டது. இவ்வரலாற்று சிறப்பமைந்த இடையூறைதான் திரு. மு. அருணாசலம் அவர்கள் இருட்டடிப்புச் செய்து விட்டார்.

இவர் இத்துடன் நிற்கவில்லை. அதே பகுதியில் 3-வது பாராவில் இவ்வாறு எழுதியுள்ளார்.

"ஒரு கருத்தை மட்டும் இங்குச் சுட்டிக்காட்டி விட்டு மேல் செல்வோம். சைனர் தமிழ் நாட்டில் முற்றிலும்; அன்னிய சமயத்தினர் என்பது மட்டுமல்ல, இனத்தாலும், நாகாகத்தாலும், மொழியாலுமே முழு அன்னியர் ஆதியில் இவர்கள் தமிழ் நாட்டுக்குள் பிரவேசித்தபோது கி.பி. முதல் நூற்றாண்டு அல்லது அதற்கு பின்-இந்நாட்டில் மொழியும், நாகாகமும், சமயமும் மிகவும் வளர்ந்து சிறப்பாக ஓங்கி வளரக் கண்டார்கள் கண்டு இவற்றொடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள்."


அன்னியர் யார்?

இவர் கூற்று இவருக்கே பொருந்தும், தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய நம் பாரத நாட்டின் ஒருபகுதியே தமிழ்நாடு என்பதை எவராலும் மறுக்கவியலாது எனவே தமிழ் நாடு வேறொரு அன்னிய நாட்டின் பகுதி அல்லவென்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, பாரத நாட்டில் வாழும் மக்கள் பலரும் பாரத நாட்டு மக்களேயாவர் என்று சொல்லாமலே விளங்கும். பாரத நாட்டின் மற்றப் பகுதியினரை தமிழ்நாட்டிற்கு அன்னியர், சமயத்தாலும் அன்னியர், இனத்தாலும் அன்னியர் எனில் திரு.மு அருணாசலம் அவர்கள் வழிபடும் சிவன் அன்னியர் கடவுள், கடவுள்மட்டுமல்ல, அவர் போற்றிப்பாடும் தேவாரங்களில், குறிப்பாக ஞானசம்பந்தர் தேவாரத்தில் காணும் வேதவேள்வி, காபாலிகம், காளாமுகம் பாசுபதம், வாம மார்க்கம் போன்றவைகள் அன்னியர் கொள்கைகளே. இந்த அன்னியர் கொள்கைகளையும், கடவுளையும், தமிழகத்திற்குள் புகுத்திப் போற்றிவரும் அனைவரும் சமயத்தாலும், இனத்தாலும் நாட்டிற்கு அன்னியரே யாவர்.

பாரத நாட்டின் பழம் பெருங் கொள்கை அஹிம்ஸா தருமத்தின் அடிப்படையில் அமைந்த அறநெறிகளே யாகும். இந்த அறநெறிகளே தமிழகத்தில் தொன்று தொட்டு வளர்ந்துவந்துள்ளது. இவ்வுண்மையை தொல்காப்பியம், திருக்குறள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, நாலடியார் போன்ற பண்டைய இலக்கியங்களிலும் நீதி நூல்களிலும் காணலாம். மக்கள் அறிவுக்கும் வாழ்க்கைப் பண்பிற்கும் உரிய அருளறத்திற்கு மாறாக நாம் ;முன்னர் கூறிய வேதவேள்வி காபாலிகம் போன்ற அன்னிய கொள்கைகள் தமிழகத்தில் திணிக்கபட்டன. இத்திணிப்புக் கொள்கைகள் தமிழகத்திற்கும் புறம்பானவை. தமிழர் ஏற்க மாட்டார்கள். என்பதை நன்கு உணர்ந்தே ஞானசம்பந்தர் தம் தேவாரப் பாக்களில் தமிழ் ஞானசம்பந்தன் எனப்பாடித் தம்மைத் தமிழனாகக் காட்டி தமிழ் மக்களின் சிலரை ஏறகச் செய்தார். இவ்வரலாற்றுண்மையை கி.பி. 9,10-நூற்றாண்டினின்றும் தோன்றிய தேவாரம், பொயபுராணம் திருவிளையாடற் புராணங்கள் வாயிலாக அறியலாம். எனவே திரு.மு. அருணாசலம் அவர்களின் கூற்றுப்படி அன்னியர் கடவுள், அன்னியர் கொள்கைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட பலரும் தமிழகத்திற்கு அன்னியராவர். சமயத்தாலும் அன்னியர், தர்க தியாகவும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் ஆராயின் திரு.மு. அருணாசலம் அவர்களின் கூற்று அவருக்கே பொருந்திக்கண்ணாடி போல் காட்சி அளிக்கிறது. வேதவேள்வி போன்றவை தமிழகத்திற்கு அன்னியர் கொள்கைகள் என கண்டது. போன்றே பாரத நாட்டிற்கும், அன்னியர் என்ற வரலாற்றைக் கண்டால் திரு.மு. அருணாசலம் அவர்கள் தன் தவற்றை உணர்ந்து வருந்துவார் என்பதில் ஐயமில்லை.

அயர்லாந்து தேபக்தர் காலம் சென்ற மாக்ஸ்வினி என்ற பேரறிஞர், "அந்தந்த நாட்டு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களின் அறிவையும், நாகாகத்தையும் வளர்க்கும் அயல்நாட்டு அசராங்கம் மக்களின் அறியாமையையும், அநாகாகத்தையும் வளர்க்கும்" எனக் கூறிய பொன்மொழி சமயங்களுக்கும் பொருந்தும். ஜைன அறவோர்களின் நூல்களையும் அறிவுரைகளையும் ஒரு பக்கத்தே அமைத்து அருளாளர் எனக்கூறும் ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களையும் அவர்கள் கூறும் வேதவேள்வி, கபாலிகம் போன்ற பிரசாரத்தையும் மற்றொரு பக்கத்தில் வைத்துக் கணித்துக் காணின்யார் உள்நாட்டினர், யார் அன்னியர் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி போல் விளங்கும்.
 

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com