முகப்பு வாயில்

 


புகழுரைகள்:

தமிழகத்தில் ஜைன அறவோர்கள் ஆற்றிய அரும்பெரும் தமிழ்மொழி தொண்டுகளையும், சாதனைகளையும் நோதின் உணர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் பலரும் அன்றும் புகழ்ந்து பாராட்டினர், இன்றும் பாராட்டுகின்றனர் என்பதை தமிழ் உலகும் நன்கு அறியும். தமிழ் அறிஞர்களைப் போன்றே மேல் நாட்டு மொழி ஆராய்ச்சி துறைப் பேராசிரியர்கள் சூட்டியுள்ள புகழாரத்தைப் படித்து மகிழுவோம்.

ஜெர்மணி நாட்டு அறிஞர் டாக்டர் மாஸ் விண்டர் என்பவர் இந்திய இலக்கிய வரலாற்றில் ஜைன சான்றோர்கள் தொண்டினைப்பற்றி எழுதுவதாயின் ஒருபொய நூலேயாகும்" எனப் போற்றியுள்ளார்.

மற்றொரு அறிஞர் R.W. வரேசூர் என்பவர் இந்தியாவின் இலக்கிய வரலாறு என்ற நூலில் "தென்னிந்தியாவின் திராவிட இலக்கியத்தில் ஜைனர்கள் கொண்டுள்ள ஆற்றலும் புலமையும் இணையற்றது." எனப் புகழ்ந்து எழுதுகையில் பேரறிஞர் ஜி.யு. போப் அவர்களின் பேருரையை மேற்கோள்காட்டி இவ்வாறு எழுதியுள்ளார் திராவிட மொழிப் பேரறிஞர் ஜி.யு. போப் தம் அறிவார்ந்த ஆராய்ச்சி நூலில் ஜைனர்களின் தொண்டின் காரணமாகலே தென்னிந்தியா முதன்முதல் புதிய குறிக்கோளுடன் ஒளி வீசிற்று. அவர்கள் இலக்கணங்களும், இலக்கியங்களுமே சிறப்புடையன. ஜைன இலக்கியங்கள் அறிவார்ந்தவைகளாகவும் குறிக்கோள் உள்ளனவாகவும் மதச்சார்பற்ற அறநெறி கொண்ட வைகளாகவும், உலக அறிவுடனும், அழகாகவும் விளங்கின. எனவே திராவிட இலக்கியங்கள் ஜைனர்கள் ஆற்றியுள்ள தொண்டிற்காக கடமைப் பட்டுள்ளன" எனப் பாராட்டி எழுதியதினின்றும் ஜைன இலக்கியங்களின் மேன்மையும், பெருமையும், மதிப்பும் தெற்றென விளங்கும் என எழுதியுள்ளார்.

இவ்வாறெல்லாம் உலகமேதைகளால் போற்றப்பெற்ற ஜைன அறவோர்களின் அளப்பாய தமிழ்த்தொண்டின் ஆற்றலையும் சிறப்பையும் அறிந்து கொள்ள வேண்டி அப்பல்கலைச் செந்தமிழ்ச் செல்வர்களின் படைப்புகளின் பட்டியலைக் கீழே கண்டு படித்துப் போற்றிப் பூரிப்போமாக. இத் தமிழ்ச் சான்றோர்களாகிய பன்மொழிப்புலவர் பெருமக்கள் பாரத நாட்டின் அறநெறிகளை க்கொண்ட வடமொழி நூல்களும் பல இயற்றியுள்ள மகிழ்ச்சிக்குரிய செய்தியையும் இங்கு நினைவுறுத்துகின்றேன்.


ஜைன அறவோர்கள் இயற்றியருளிய தமிழ் நூல்கள்:

1. இலக்கியம்

1. பேரகத்தியம்
2. தொல்காப்பியம் *
3. திருக்குறள் *
4. சிலப்பதிகாரம் *
5. சீவகசிந்தாமணி *
6. நாவிருத்தம் *
7. சூளாமணி *
8. பெருங்கதை *
9. வளையாபதி
10. மேருமந்தரபுராணம் *
11. நாரதர் சாதம்
12. சாந்திபுராணம்
13. உதயணகுமார விஜயம் *
14. நாககுமார காவியம் *
15. கலிங்கத்துப் பரணி *
16. யசோதர காவியம் *
17. இராமகாதை
18. கிளிவிருத்தம்
19. எலிவிருத்தம்
20. இளந்திரையம்

1. புராணசாகரம்
2. அமிர்பதி
3. மல்லிநாதர் புராணம்
4. பிங்கல சாதை
5. வாமனசாதை
6. வர்த்தமானம்


2. இலக்கணம்

1. நன்னூல் *
2. நம்பியகப்பொருள் *
3. யாப்பெருங்கலம் *
4. யாப்பெருங்கலத் காரிகை *
5. நேமிநாதம் *
6. அவிநயம்
7. வெண்பா பாட்டியல் *
8. சந்தநூல்
9. இந்திர காணியம்
10. அணியியல்
11. வாய்ப்பியம்
12. மொழிவரி
13. கடிய நன்னியம்
14. காக்கைப்பாடினியம்
15. சங்கயாப்பு
16. செய்யுளியல்
17. நக்கீரர் அடிநூல்
18. கைக்கிளைச் சூத்திரம்
19. நத்தத்தம்
20. தக்காணியம்


3. நீதி நூல்கள்

1. நாலடியார் *
2. பழமொழி நானூறு *
3. ஏலாதி *
4. சிறுபஞ்சமூலம் *
5. திணைமாலை நூற்றைம்பது *
6. ஆசாரக்கோவை *
7. அறநெறிச்சாரம் *
8. அருங்கலச்செப்பு *
9. ஜிவசம் போதனை *
10. ஒளவை (அகத்தில்சூடி) *
11. நான்மணிக்கடிகை *
12. இன்னா நாற்பது *
13. இனியவை நாற்பது *
14. திரிகடுகம். *


4. தர்க்க நூல்கள்

1. நீலகேசி *
2. பிங்கலகேசி
3. அஞ்சனகேசி
4. தத்துவதாசனம்
5. தத்துவார்த்த சூத்கை (தமிழ்)


5. இசை நூல்கள்

1. பெருங்குருகு
2. பெருநாரை
3. சேயிற்றியம்
4. பரதசேனாபதியம்
5. சயந்தம்
6. இசைத்தமிழ் செய்யுட் கோவை
7. இசை நுணுக்கம்
8. சிற்றிசை
9. போசை


6. நாடக நூல்கள்


1. குணநூல்
2. அகத்தியம்
3. கூத்தநூல் சந்தம்


7. ஓவிய நூல்கள்


1. ஓவியநூல்
2. கலைகோட்டுதண்டம் (நிகண்டனார் இயற்றியது)


8. நிகண்டுகள்

1. சூடாமணி நிகண்டு *
2. திவாகரம் *
3. பிங்கலந்தை *


9. கணித நூல்கள்

1. கெட்டி எண்சுவடி *
2. கணக்கதிகாரம்
3. நல்லிலக்க வாய்ப்பாடு *
4. சிறுகுழி வாயப்பாடு *
5. கீழ்வாய் இலக்கம்
6. பெருக்கல் வாய்ப்பாடு
7. அவினந்த மாலை


10. சோதிட நூல்கள்

1. ஜினேந்திரமாலை *
2. உள்ளமுடையான் *


11. பிரபந்தங்கள்

1. தோத்திரத்திட்டு *
2. திருக்கலம்பகம் *
3. திருநூற்றந்தாதி *
4. திருவெம்பாவை *
5. திருப்பாமாலை *
6. திருப்புகழ் *
7. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் *
8. அப்பாண்டைநாதர் உலா *
9. திருமேற்றிசையந்தாதி *
10. தர்ம தேவியந்தாதி
11. திருநாதர் குன்றத்துப் பத்தும் பதிகம் *


12. சதகங்கள்

1. கொங்கு மண்டல சதகம்
2. நேமிநாத சதகம்.

* இக்குறியிட்டுள்ள நூல்கள் வெளியாகிய நூல்கள், மற்றவை மறைந்து போனவை உரை ஆசிரியர்களின் மேற்கோள்களினின்றும் திரட்டப்பட்டவைகளாகும்.

.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com