முகப்பு வாயில்

 


விஞ்ஞான அறிஞா˘ன் சான்று

மேலே கூறிய சைனசமயக் கொள்கையை வலியுறுத்தி பாரதநாட்டு விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் ஜெர்மனியில் நடந்த அகில உலக விஞ்ஞான மகாநாட்டில், மரம், செடிகொடிகளுக்கு உணர்ச்சியுண்டு என்பதை விஞ்ஞானக் கருவி விளக்கி காட்டுகையில் "யான் செய்துள்ள இவ்வாராய்ச்சி உண்மையைப் பாரதநாடாகிய எங்கள் நாட்டின் மிகத்தொன்மை வாய்ந்த சமயமாகிய சைன சமயந்தான் உலகுக்கு அளித்தது. யான் கண்டு பிடித்தது மரம், செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு என்னும் சைன சமயக் கொள்கையை நிருபிக்கும் கருவியே ஆகும் எனக்கூறி அதற்கு ஆதாரமாக சூத்திரம் என்னும் இரு வடமொழி நூல்களைப் படித்துக் காண்பித்தார்.


உலகம்:


இஇவ்வுலகம் எவராலும் படைக்கப்பட்டதல்ல வென்றும், ஆதியும் அந்தமும் அற்றது என்றும் ஜைன சமயம் கூறும் கொள்கையைத் தொல்காப்பியர்.

"நிலம், தீ, நீர், வளி, விசும் போடைந்தும்
கலந்த மயக்க முவகமாத லின்"
-தொல்-மரபியல் 89

என உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்..

ஊழ்வினை:

"ஒன்றே வேறே என்று இருபால் வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப,
மிக்கோள் ஆயினும் கடிவரை யின்றே"
-தொ. பொ. கள-2

என்பது ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, இவ்விருவரையும் மறுபிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாகுதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு என்னும் இளம் பூரணர் உரை யாலும் அறியலாம் ஊழிற் பெருவலியாவுள என்பது தமிழ் மறை

இவ்வாறே ஜைன சமய அறநெறிகளும், தத்துவக் கொள்கையும் தொல்காப்பியத்தில் எங்கும் காணலாம். இத்தகு தொன்மை வாய்ந்த அறநெறிகளையும், தத்துவங்களையும், கூறுகையில் "நோ˘தின் உணர்ந்தோர் நெறிபடுத்தினரே" என்றும் "நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே" என்றும் புகழ்ந்த போற்றுவதினின்றும் தொல்காப்பியா˘ன் சமயம் ஜைனமே எனக் கலங்கரை விளக்கம்போல் ஒளி விட்டு வீசுகிறது. இம்மாபெருந் தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கண நூல்களும் இருக்கின்றன. குறிப்பாகப் ;போகத்தியம், சிற்றகத்தியம் என்ற இலக்கண நூல்கள் பற்றி இன்று பேச்சளவில் இருக்கின்றன. அவைகளும் ஜைன அறவோர்களால் இயற்றப் பெற்றனவே. இங்கே ஓர் உண்மையைக் காணலாம்.

சென்னை திரு பவானந்தம் பிள்ளை அவர்கள் முதன்முதல் பதிப்பித்தப் பேரகத்தியத் திரட்டில் இறை வாழ்த்து வெளியிடப் பெற்றுள்ளது. அதில்,

"இலக்கணம் எட்டமை இறைவற்றொ ழுதெழுந்து
இலக்கணக் காண்டம் இயம்புவன் யானே"

எனும் சூத்திரத்தின் உரையில் இலக்கணம் எட்டமை இறைவர் = அனந்தஞானதி எட்டு குணங்களையுடைய அருகன் எனவும் விளக்கப்பட்டுள்ளது. எனவே பேரகத்திய ஆசிரியரும் ஜைன அறவோர் என்பதில் ஐயமும் உண்டாமோ?

இப்பேரகத்தியத்தின் உண்மையால் இதற்கு முன்னும் பல ஜைன நூல்கள் தமிழகத்தில் விளங்கி இருந்தன என்பது தெளிவாகிறது.திருக்குறள்:


திருக்குறள் இயற்றியவர் ஜைன அறவோரே.

"இகழ்ச்சியிற் கெடுவார்களை யெண்ணுக
மகிழ்ச்சியின் மனமைந்துறும் போழ்தெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
டிகழ்ச்சி சென்ற செம்பொருள் மடிமன்னரே"

என்ற பாவால் திருக்குறளைப் புகழ்ச்சி நூல் (Famous Book) எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார். தோலா மொழித்தேவர் தமது சூளாமணிக் காவியத்தில் கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் உள்ளத்தெழுந்த உணர்ச்சி இன்று உலக அறிஞர்களில் உள்ளத்தே உதித்தது போன்று ஈடு இணையற்ற அரிய நூல் எனத் திருக்குறளை உலகெல்லாம் போற்றிப் தங்கள் தங்கள் மொழிகளில் பெயர்த்துப் படித்து இன்புறுகின்றனர்.

இத்தகு தலைசிறந்த அறநெறி நூலை உலகுக்கு அளித்த அச்சான்றோரின் வரலாற்றை நானிதுவரை அறியவியலவில்லை. புகழ்ச்சி நூலின் ஆசிரியா˘ன் வரலாற்றையோ சமயத்தையோ எழுதிக்காட்டவில்லை.

இவ்விருபதாம் நூற்றாண்டின் புலவர் பெருமக்கள் பலர் திருக்குறளாசிரியா˘ன் சமயத்தைப்போற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். அப்புலவர்களில் சிலர் திருக்குறளை ஆழ்ந்துப் படித்து அக்கொள்கைகளை கொண்டு ஜைன சமயத்தவரே என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள் வேறு சிலர் திருக்குறள் கொள்கைகளை ஆராய்ந்தறிந்து குறளாசிரியர் சமயம் உள்ளத்தே உருவாகியும், ஏதோ காரணத்தால் திருக்குறள் ஒரு பொதுமறை என்றும், அதன் ஆசிரியர் ஒரு சமரசவாதி என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். மூன்றாவதாகக் குறிப்பிடும் புலவர்கள், ஆழ்ந்த சமயப்பற்றுடையவர்கள். திருக்குறளைத் தங்கள் சமய நூலாகக் கொள்ளவேண்டும் மென்பதையே குறிக்கோளாகக் கொண்டு அதன் ஆசிரியரைக் தங்கள் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர் என வலிந்து கூறிவருகின்றனர் திருக்குறளிலுள்ள கொள்கைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் சமயக் கொள்கைகளுக்கு முரண்பாடானது என்பதை அறிந்தும் துணிந்தும் ஆசிரியரைத் தம்மதத்தைச் சார்ந்தவரே என சாதிப்பவர்கள் ஆவர்.

இம்மூன்று துறையினரும், திருக்குறள் மறைக்குப்பின் தமிழகத்தில் பல மதங்கள் தோன்றி வளர்ந்த காலத்தில், திருக்குறளாசிரியா˘ன் மதத்தைப் பற்றி ஆராய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

திருக்குறள் அறநெறிநூல் என்பதை எவரும் ஒப்புக்கொண்ட உண்மை.

இந்நல்லறங்கள் யாவும் பகவான் விருஷபதேவர் காலம் முதல் வழிவழியாக வந்துள்ளவை. ஆரம்ப காலத்தில் அறம் என்றே அழைக்கப்பட்ட கொள்கைகள். பிற்காலத்தால் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்காக உரைத்தவையாகையால் மாணவ தருமம் அதாவது மக்கள் அறம் என அழைத்தனர். அதன் பின்னர் மாக்கா என பிராகிருத மொழியில் அழைத்தனர் மாக்கா எனில் மார்க்கம் அல்லது வழி என வழங்கப்பெற்றது. சிந்து நதிப் பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளில் ஜினதர்மம் என பொறிக்கப்பட்டுள்ளது. வேத கால மக்கள் தங்கள் வேதங்களில் விரத்ய-தருமம் அஹிம்சா தருமம் என்றும் அழைத்துள்ளனர் உபநிஷத்துகளில் அர்கத்தர்மாவென்றும் ஆத்ம தர்மம் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

புத்த சமய நூல்களில் நிக்கந்த தருமம் எனப் போற்றப்பட்டுள்ளது. இந்தோ கிĄŁக் வரலாற்றில் ஸ்ரமண தர்மா எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் சமயம் அல்லது மதம் என்ற பெயரால் பலகொள்கைகள் தோன்றியமையால் ஆதி ஜினரால் அருளப்பெற்ற அறநெறியை ஜினவறம் அல்லது ஜினசமயம் என மதவாதிகள் அழைத்து வருகின்றனர். இத்தகு சிறப்பமைந்த அறநெறிகளைத் தம் பெயரால் அமைக்காது அறநெறி எனப்பொது நெறியாகவே அமைத்ததால் அப்பெருமகன் வழிவந்த எல்லா அறவோர்களும் தங்கள் தங்கள் நூல்களில் அறம் அறம் என்றே அக்கொள்கைகளை அமைத்து இலக்கியங்களிலும் நீதி நூல்களிலும் இயற்றியுள்ளதை அறிஞர் பெருமக்கள் அந்நூல்களை ஆழ்ந்து படித்து அறிதல் வேண்டும்.¸கல்லிலும் அறம்:

வடஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பான்மலை என்னும் ஜினர்பள்ளி கல்வெட்டுச் செய்தியில் அறமல்லது துணையில்லை எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் திங்களூ ர் ஜினாலயத்துக் கல்வெட்டில் ஒரு முனிவர் பெயரை 'அறத்துளான்' எனக்குறிக்கப் பெற்றுள்ளது.

திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில் கல்வெட்டில் அறம் வளர்த்தான் மகன் அனந்தப்பன் சதாசேவை எனக் காணப்படுகிறது.

வேறொரு கல்வெட்டில்,வீரன் திருவறம் பேணும் வீர சங்கத்தவர் என்றும் மற்றொரு கல்வெட்டில் 'அறமல்லது துணையில்லை' என்றும் அறம்மறவற்க எனவும் செதுக்கப்பட்டுள்ளது.

இலக்கியங்களிலே சிலப்பதிகாரத்தின் இறுதி அறவுரையில் 'அறவோ ரவைக்களம் அகலாதாணுகுமின்' என்றும் கவுந்தியடிகளை அறவி என்றும் அழைத்திருப்பதைக் காண்கிறோம்.

கலிங்கத்துப்பரணி ஆசிரியர் ஜெயங்கொண்டார் தமது ஊரின் சிறப்பைக் கூறுகையில்,

"பொய்யுங் கொலையுங் களவுந் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்வார்"

என ஜைன அறவோர்களின் அறப்பணியை அறிவித்துள்ளனர்

யாப்பெருங்கலக் காரிகை உரையாசிரியர் குணசாகரர் தம் மேற்கோள்களில் வினைக்கடலை கடப்பதற்கு அறமே துணை என்பதை.

"பிறப்பென்னும் பிணி நீங்கப்
பிரிவா˘ய வினைக் கடலை
அறப்புணையே புணையாக
மறுசுரை போய்க் கரையேற"
என வலியுறுத்தியுள்ளார்

இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று நீலகேசி எனும் தர்க்கநூலில் குண்டலகேசிக்கும் நீலகேசிக்கும் நடந்த வாதப்போரில் நீலகேசி வெற்றி அடைகின்றாள். இவ்வாத போரில் நடுவராக வீற்றிருந்த அரசன் நீலகேசிக்குப் பா˘சளிக்க விழைகின்றான். இதனைக்கேட்ட நீலகேசி.

"ஆண்டகை யாசிறை யதுசொல்லக்
கேட்டவல் வறத்தகையர்
டீண்டல னணிபிற புனைவெலு
நினைவிலன் றினையனைத்தும்
வேண்டல னிலனொடு விழுநிதி
யினையவும் விறற்றகையா
யீண்டின் யறநெறி யுறுகென
வேந்திழை யியம்பினனே"

எனப்பா˘சை ஏற்காது "தங்கள் நாட்டில் அறநெறியைப்பரவச் செய்யுங்கள்" அதுவே எனக்களிக்கும் பா˘சாகும் என்பதைக் காண்கிறோம்.

அறத்தையே பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடைய நீலகேசியை நீலகேசி ஆசிரியர் அறத்தகையாள் என அழைத்தும் போற்றியுள்ளதையும் காண்கிறோம்.

பண்டைய காலமுதல் பாரதநாடெங்கும் ஒளிச்சுடராய் விளங்கிய அறநெறிக்கு மாறாகச் சமயங்கள் பலதோன்றி மக்களறத்தை மறைத்துப் பக்தி மார்க்கத்தைப் பரவச் செய்வதைக் கண்டு வருந்திய அறவோராகிய உதீசி தேவர் தாம் இயற்றிய கலம்பகத்தில்.

"சமயவாதிகள் செவிதனில் அறம்புகச்
சாற்றுவன் காணீரே"

எனச் சுளுரை கூறி அறநெறியை வலியுறுத்தியுள்ளார். அம்மரபுவழித்தோன்றியது திருக்குறள். அறம்பாடும் மரபைச் சார்ந்தவர்தாம் திருக்குறளாசிரியரும் என்ற உண்மை திருக்குறள் நெறிகளை நுண்ணிதின் ஆராய்ந்தோர் அறியாமலிருக்க வியலாது.

நாம் மேலே கூறிய மூன்று துறையினர்களில் முதல் துறையினர் திருக்குறள் காட்டும் கொள்கைகளைக் கொண்டு நிலை நாட்டியவர்கள். இரண்டாம் துறையினர் குறள் கொள்கைகள் மக்கள் அறம் ஆகையால் பொது நெறி என்பதை அறிந்தவர்கள். ஆனால் குறளாசிரியர் சமயத்தைக் கூறாது சமரசவாதி எனப்பொது மனிதராகக் காட்டியுள்ளனர். இங்கே ஓர் உண்மையை அறிதல்வேண்டும். திருக்குறளாசிரியர் காலத்தில் எவரும் சமய சார்பின்றி இருக்க முடியாது. அவ்வாறு இருந்ததேயில்லை என்பது அறுதியிட்டு கூறலாம். எனவே திருக்குறளாசிரியர் சமயம் மதம் என்ற பெயரால் அமையாத அறநெறியைச் சார்ந்தவர் என உறுதியாகக் கூறலாம். இக்கொள்கை எவராலும் மறுக்கவியலாத உண்மையாகும். இவ்வாலாற் றுண்மையை அறிந்த அறிஞர்கள் பலர் வழக்காற்றைக்கொண்டு திருக்குறளாசிரியர் ஜைன சமயத்தவரே என அறுதியிட்டுக் கூறியுள்ளனர். அப்பேரறிஞர்கள்; சிலரை இங்குச் சந்திப்போம். தமிழ்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள், திரு.வி. கனகசபைப் பிள்ளை அவர்கள், சர் R.K. சண்முகம் செட்டியார் அவர்கள் திரு. ச. வையாபுரி பிள்ளை அவர்கள். திரு. மயிலை சீனிவெங்கடசாமி அவர்கள், திரு. அ.கி. பரந்தாமனார் அவர்கள் திரு. பன்மொழிப்புலவர் வித்துவான் வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள், மதுரை கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் அவர்கள். வித்துவான் திரு. மே வி வேணுகோபால் பிள்ளை அவர்கள். மற்றும் பலரும் திருக்குறலாசிரியர் ஜைன சமயத்தவரே என தெளிவாக விளக்கிக் கூறியுள்ளனர். மேனாட்டு அறிஞர்களான எல்லிஸ் கிரவுஸ் போன்ற பலர் திருக்குறளாசிரியர் ஜைனரே என அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இம்ப்ĄŁயல் கெஜட் இரண்டாம் பகுதி 438-ம் பக்கத்தின் திரு. சிங்க்லேர் ஸ்டீவென்ஸன், "திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மிகமிகப் புகழ் வாய்ந்த தலைசிறந்த தமிழிலக்கியம். இந்நூலைப் பல சமயத்தவரும் தங்களுடையது என உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் பிஷப் கால்டுவெல்துரை மகனார் மற்ற சமயக் கொள்கைகளைவிட... ஜைன சமய அறநெறிகளே சிறப்பாக இடம் பெற்றுள்ளன." என விளக்கியுள்ளதாக எழுதியுள்ளார்."

இவ்வாறு நோ˘தின் ஆராய்ந்தறிந்த அறிஞர்களின் கருத்துக் கருவூலங்களால் திருக்குறளாசிரியர் ஜைன அறவோரே எனத் தெளிவாகிறது.

இறுதியாக ஓர் உண்மையை விளக்கி மேலே செல்வோம். திருக்குறளில் காணும் கொல்லாமை. பொய்யாமை பிறர்மனை நயவாமை, மிகுபொருள் விரும்பாமை, ஊனுன்ணாமை, களவாமை, கள்ளுண்ணாமை போன்ற அறநெறிகளும் துறவற நெறிகளும் முதன் முதல் பகவான் விருஷடதேவரால் அருளப்பெற்றவை என்ற உண்மையை வைதிகவேதங்களும், மற்ற பிறசமய நூல்களும் ஒருமுகமாக ஏற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புடையவை. எனவேதான் திருக்குறளாசிரியர்; இப்பேரங்களைக் குறிப்பிடும் பல குறள்களில் 'நூலோர் தொகுத்தவற்றுளெல்லாந் தலை' எனக் கூறிப்போந்தார். தொல்காப்பியத்திலும் முனைவன் கண்டது முதல் நூல்' எனப்புலப்படுத்தியுள்ளார்.

இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கின் பாரத நாட்டுச் சமயங்களில் எச்சமயத்திலும் இத்தகைய அறநெறிகளை முதன்முதல் வகுத்தருளியவர்கள் எவருமில்லை. என்பது உறுதி. எனவே திருக்குறளாசிரியர் மேற்கண்ட அறநெறிகளுக்கு முதல் நூல் பகவான் விருஷப தேவர் அருளியவைகளேயாகும் இப்பேருண்மையைச் சிந்தாமணியாசிரியர் திருத்தக்கதேவர்.

"இறைவனூற் காட்சி கொல்லா
ஓழுக்கொடு ஊன்துறத்தல் கண்டாய்"

என வலியுறுத்தியுள்ளார். இதனால் மற்றோர் உண்மையைக் காணலாம். கொல்லா விரத்தத்திற்குப் புலாலுண்ணாமை இன்றியமையாதது. ஜைன நூல்கள் பலவற்றிலும் கொல்லாமையையும் புலாலுண்ணாமையையும் வற்புறுத்தப்பட்டிருக்கும். இவ்விரு அறங்களுக்கும் திருக்குறளாசிரியர் தனித்தனியாக இரண்டு அதிகாரங்களைப் படைத்துள்ளார். பண்டைய நூல்களில் இவ்விரு அறங்களையும் வற்புறுத்தியுள்ள நூல்களெல்லாம் ஜைன அறவோர்களால் அருளியவை என ஐயமறக் கூறிவிடலாம்.

வைதிக சமயமோ, புத்த சமயமோ, சைவ வைஷ்ணவ சமயங்களோ, புலாலுண்ணாமையை வற்புறுத்தவே இல்லை வற்புறுத்தாதது மட்டுமல்ல. ஊனுண்ணாமையைக் கேவி செய்துள்ள சில நூல்களும் உள்ளன. இவ்வுண்மையை உலகுக்கு அறிவிக்கவே நீலகேசி உரையாசிரியர் சமய திவாகரமாமுனிவர் திருக்குறளை மேற்கோள் காட்டும்போதெல்லாம் "இˇது எம்மோத்தாதலால்' எம்மோதலால் என உரிமையுடன் கூறியுள்ளனார். நாம் இதுவரை கண்ட உண்மைகளால் திருக்குறாசிரியர் ஜைன அறவோரே என்பதை ஐயமின்றிக் கொண்டாடுவோம். மற்ற விவரங்களை "திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன்" என்ற என் நூலில் விளக்கமாகக் காணலாம்.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com