முகப்பு வாயில்

 


மத்திய சர்க்காரில் நிதியமைச்சராகப் பணியாற்றிய வரும் அறிஞருமான உயர்திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் 1943 ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி சென்னையில் நடந்த மகாவீர ஜெயந்தி விழாவில் தலைமை தாங்கிப்பேசிய அறிவுரையின் சுருக்கத்தையும் காண்போம்.

"இன்றைய விழாவில் கலந்து கொள்ளவும், குருதேவர் மீதுள்ள எனது பத்தியையும் அன்பையும் காட்டவும் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.

சமண சமயப் பெருமை பற்றியோ அல்லது அதன் ஸ்தாபகான் உயர்வைக் குறித்தோ பேசுவதற்கு நான் சிறிதும் ஆற்றலற்றவன் என்றே கருதுகிறேன். ஆனால் இந்தியக் கலை வளர்ச்சியில் சமணர் எடுத்துக் கொண்ட பங்கு ஒப்பற்றது என்று கூறக்கூடிய அளவு நான் படித்திருக்கிறேன் என்று சொல்ல முடியும் தமிழ இலக்கிய வளர்ச்சிக்காக சமணர்கள் மேற்கொண்ட அரும்பணி வெறும் வார்த்தைகளால் அளவிடக்கூடியதல்ல என்பதை ஒரு தமிழன் என்ற முறையில் என்னால் மறக்க முடியவில்லை தமிழ்மொழியிலுள்ள உயாய நூல்களில் சில. சமணர்களால் எழுதப் பெற்றவை என்பதைத் தமிழ் மொழியைக் கற்ற நீங்கள் யாவரும் அறிவீர்கள். குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், நாலடியார். ஆகியவை தமிழ்நாகரிகத்திற்காகவும், தமிழ்க் கலைக்காகவும் சமணர்கள் புரிந்த அருந்தொண்டின் ஞாபகச் சின்னங்களில் சில. தென்னாட்டு சமனர்கள் தமிழ் இலக்கியத்திற்காக உழைத்திராவிடின் அரிய பொக்கிஷங்கள் பலவற்றை இழந்திருப்போம்.

வாழ்க்கையின் அடிப்படையான உண்மைகளில் எல்லா உலக மதங்களும் பொதுவாக உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால், அகிம்சைக் கொள்கையினைச் சிறிதும் விட்டுக் கொடுக்காது வற்புறுத்தி வருவதில் சமணசமயம் உலகில் ஒப்புயரவற்று பிரகாசித்து வருகிறது இந்த அகிம்சாக் கொள்கை இன்றைய ஆங்கில மொழியில் "Non Violence" பலாத்காரமின்மை என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இம்மொழி பெயர்ப்பு வலுவற்றது ஏன்? தப்பானது என்றே கூறலாம். நமது நாட்டில் இதற்கு விசித்திர வியாக்கியானங்களும், வாதங்களும் ஏற்பட அது ஏதுவாக இருந்தது.

அகிம்சை என்னவென்று நாம் உணர்ந்துள்ளபடி அதனைப் பயன்படுத்தின், சமயக்கொள்கைளாயினும் சா, ஆன்மீகத் துறையிலாயினும் சா, அல்லது தினசா வாழ்க்கையிலாயினும் சா, இவ்வளவு பொய விவாதங்களுக்கு வழியிராது மனி வாழ்க்கையில் அதனை மேற்கொள்ள வேண்டுவதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக மேற்கொண்டிருப்பதால்தான் இந்தியாவிலுள்ள மதங்களில் அது ஒப்பற்றது என்று கூறத்துணிகிறேன் சமண சமயக் கொள்கைகள் அதன் வரலாறு ஆற்றிய அரும்பணிகள், ஆகியவை பற்றிய எனது அபிப்பிராயங்கள் மேலே நான்குறிப்பிட்ட தமிழ் நூல்களை ஆதாராமாகக் கொண்டவையாகும்.

சமணர் இயற்றிய இந்நூல்களின் ஆசிரியர் யார் என்பது குறித்துச்சில தமிழ் அறிஞர்களிடையே அபிப்ராய பேதங்கள் சமீபத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இளங்கோவடிகளும், திரு வள்ளுவரும் சமணர்களல்ல, சைவ சித்தாந்திகள் தான் என்பதை நிலை நாட்ட ஆராய்ச்சிக் கட்டடுரைகளும், விரிவான நூலாராய்ச்சிகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அத்தகைய பேரறிஞர்களைத் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றுமக்கள் கூறுவதில் ஆச்சாயப்படுவதற் கேதுவுமில்லை. சாத்தர ஞானமுள்ளவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இத்தகைய உணர்ச்சி கொண்டிருத்தல் தவறு என நான் கருதுகிறேன்.

திருவள்ளுவர் ஒரு சமணராகவிருந்த காரணத்தால் சைவ சித்தாந்தமோ அல்லது ஹிந்து மதமோ தனது ஒப்புயர்வற்ற பெருமைகளில் எதையும் இழந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை இப்பேராசிரியர்கள் எழுதிய நூல்கள் அவர்கள் தம் மதத்தில் சேர்ந்தவர்கள் என்று கூறக்கூடிய தன்மையதாக இருப்பதொன்றே அவர்களின் சமரச மனப்பான்மையையும், பரந்த நோக்கத்தையும் தெளிவுறுத்துகின்றன. எந்தச் சமயங்களும் திருவள்ளுவர் தம் மதத்தினர் என்று கொள்வதில் பெருமையடையவது சகஜமே.

இந்தியாவின் இவ்வுயர் சமயத்தின் உண்மையான பெருமையின் அடிப்படையான காரணம் ஏதுவாயிருக்கும் என்று அறிந்து கொள்வது ஒரு ருசிகரமான சாத்திர ஆராய்ச்சியாகும் எனத் தோன்றுகிறது. மிகத் தெளிவான மறுக்க முடியாத-உண்மையான சாத்திர ஆதாரங்கள் எதுவும் மில்லாத நிலையில் ஏதேனும் ஒன்றை ஊகித்துக் கொள்வதற்கு இடமுண்டு. எனவே, எனது ஊக்கமும், அவ்வித உணர்ச்சியின் பாற்பட்டதே யாகும். அத்தகைய அபிப்ராயத்தோடு இப்பெருஞ் சம்பவத்தை நோக்கின் இதுவே இந்தியாவில் குடியேறியபோது, பாஞ்சாலத்தில் வேதங்கள் தொகுக்கப் பெற்றபோது மிக உன்னத நிலையில் பரவியிருந்ததென்று எண்ணத் தூண்டுகிறது.

மகாவீரப் பெருமானின் ஆன்மீக சக்தியே புத்தபிரானை தோற்றுவித்தது எனலாம். மகாவீரப் பெருமானும் புத்த பிரானும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்குப் சான்றுகள் உள்ளன. மகாவீரர் தோற்றுவித்த தவப் புரட்சிக் கொள்கையையே புத்தர் பின்னர் எங்கும் பரவச் செய்தார். சாத்திர உண்மைகள் எவ்வாறாயினும், நாம் எச்சமயத்தைச் சார்ந்தவர்களாயினும், சமணம் போன்ற ஒப்புயர்வற்ற சமயத்தை உலகிற்களித்த பொயோர்களுக்குத் தலை வணங்குதல் நம் கடனாகும்.

இந்து சமயாசாரிகள் தங்கள் சமயத்தை தென்நாட்டில் புனருத்தாரணம் செய்வதற்காகவும், சமண சமயத்தை ஒழிப்பதற்காகவும் மிகக் கொடுமையான முறைகளைக் கூட கையாள வேண்டியிருந்தது. என்றவிஷயம் ஒன்றே சமண சமய தென்நாட்டு மக்களின் உள்ளத்தில் வேரூன்றியிருந்த தென்பதை நிரூபிக்கப் போதியது. சமீபத்திலுள்ள சாத்திர சிலாசாசன ஆராய்ச்சிகள், ஆரியர் இந்நாட்டுக்கு வருமுன்னர் இந்தியாவில் மிகவும் பொய நாகாகம் இருந்து வந்ததென்று அறிஞர்களை எண்ணச் செய்துள்ளன. இதனை, வசதியை முன்னிட்டு, நான் திராவிட நாகாகம் என்று அழைக்க விரும்புகிறேன். ஏனெனில், இந்நாளில் திராவிட நாகாகம் என்ற வார்த்தைகள் வீண்விதண்டா வாதங்களைக் கிளப்பியுள்ளன. வாயினும், ஆரியர் வருமுன்னர் இங்கு வசித்து வந்த திராவிட மக்களின் சமயம் சமணமாக இருந்ததால், திராவிட நாகாகம் என்று கூறுவதே சரி என்று நான் கருதுகிறேன். ஆரியர் தங்களது தனிக் கொள்கையின்படி சடங்குகளும், உயிர்பலிகளும் செய்பவர்களாக இருந்து வந்தனர். இப்புதுக் கொள்கை சமண சமயத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முற்றும் முரணாக இருந்ததால், மக்கிளடையே பெரும் புரட்சி மன்ப பான்மையை உண்டுபண்ணிற்று. எனவே மகாவீரப் பெருமானின் காலத்தில் அகிம்சாக் கொள்கையை மீண்டும் வற்புறுத்தி அதற்கு முதல் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று.

சமண சமயம் மட்டும் இந்தியாவில் வலிவுற்று நிலைத்து இருந்தால் இன்று கிடைத்திருப்பதைவிட சிறந்த ஒற்றுமையும் பெருமையும்வாய்ந்த இந்தியாவை நாம் ஒருவேளை பெற்றிருக்க இயலும் என நான் நம்புகிறேன்" - Liberator: 19-4-1943

மகாவீரர் வரலாற்றை முழுமையாக முதன் முதல் தமிழில் எழுதியவரும், சமயப்பற்றை மறந்து உண்மையை உலகுக்கு உரைக்க வேண்டும் என்றபரந்த நோக்கங்கொண்ட எழுத்தாளருமான உயர்திரு A.L. நடராஜன் அவர்கள் எழுதியுள்ள மகாவீரர் வரலாற்றில் தமிழக இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதுகையில்.

"தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஜைனர்களின் பெருமைக்குரிய வகையில் அரும்பெரும் தொண்டு செய்து இருக்கிறார்கள். சைவர்கள், வைஷ்ணவர்கள், பெளத்தவர்கள் ஆகியோர் ஆற்றி இருக்கும் தமிழ் நூல்களை எல்லாம் ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்கூட, ஜைனர்கள் செய்திருக்கும் அளவுக்குத் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப், பிற மதத்தவர்கள் பிரமாதமாக எதுவும் செய்யவில்லை என்னும் உண்மை திண்ணமாகத்தொயவரும்."

சைவர்களும் வைஷ்ணவர்களும் தமிழில் தோத்திரபாக்கள் நிறையப்பாடி இருக்கிறார்கள். கலம்பகங்கள் தாதிகள், புராணங்கள் முதலியன பாடி இருக்கிறார்கள். இவையாவும் சமயச் சார்புடைய நூல்கள் ஆகும் என விளக்கியுள்ளார்கள்.

இவ்வாறே அறிஞர்கள் சிலர் தமிழ் இலக்கியங்கள் வரலாறு என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூல்களில் ஜைன அறவோர்களின் தமிழ்த் தொண்டின் சிறப்பினைப் பாராட்டி எழுதியுள்ளார்கள் அப்பொயோர்களில் சிலர் பெயர்களையும் நூல்களையும் பற்றி மட்டும் குறித்துச் சொல்லுகின்றேன்

1 History of Tamils
திரு P.T. ஸ்ரீனிவாச அய்யங்கரர் அவர்கள்

2. History of Tamil Language and Literature,
திரு. S. வையாபுரி பிள்ளை அவர்கள்
3. Tamil Varalaru, திரு. K. ஸ்ரீனிவாசப் பிள்ளை

4. History of Tamil Literature
திரு.T.K. சதாசிவபண்டாரத்தார் அவர்கள்
5. Tamil Varalaru. திரு. R. ராகவ அய்யங்கார் அவர்கள்

6. History of Tamil Literature.
திரு. M.S. பூர்ணரலிங்கம் பிள்ளை அவர்கள்
7. Tamils 1800 years ago.
திரு. கனகசபை பிள்ளை அவர்கள்
8. தமிழும் சமணமும்
திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்

மற்றும் பல அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களில் காணலாம்.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com