முகப்பு வாயில்

 


இவ்வேறுபாட்டின் காரணத்தை இரண்டு வகையாகக் குறிப்பிடலாம். வேத வாதிகளின் இந்திரனால் ஜைன சமயத்தை அழிக்கவியலாமை ஒன்று; மற்றொன்று தமிழகத்தில் வேதவாதிகளின் கொள்கையில் நம்பிக்கைக் கொண்ட மக்களை தம் வயப்படுத்த வேண்டித் தமிழ் மக்களில் சிலர் வழிபட்டுவரும் ருத்ரனைத் தாமும் வழிபடுவதாகக் காட்டிக் கொள்ளும் குறிக்கோளுடன் ஞான சம்பந்தர் கையாண்டுள்ள சூழ்ச்சி வரலாற்று வழியில் நோக்கிடினும் வேதவாதிகள் பாரத நாட்டில் வேரூன்றி வளர்ந்து வருகையில் அவர்கள் பாரதநாட்டு மக்கள் வழிபட்டுவரும் பல்வேறு தெய்வங்களை ஏற்றுக் கொண்டு இந்திரணை, வாயுவை, வருணணை அடியோடு கைவிட்டு விட்டனர் என்பது தெளிவாகிறது. எனவே ஞானசம்பந்தரும், அவரைச் சார்ந்தவர்களும் வேத வேள்வியை நிலை நாட்டப் பக்திமார்க்கக் கொள்கையைக் கடைபிடித்து ஜைன பெளத்த மதங்களை அழிக்க வழிசெய்துக் கொண்டனர் என்பதுதான் உண்மை. மறுக்கவியலாத இவ்வுண்மையை ஞான சம்பந்தர் தேவாரப் பாக்களிலேயே கண்ணாடிபோல் காணலாம்.

ஞானசம்பந்தர் பாடிய பாக்களில் சமண பெளத்தர்கள் சைவ சமயத்தின் பகைவர்கள் என்றோ சைவ சமயத்தைப் பழிக்கின்றவர்கள், என்றோ எங்கும் பாடவில்லை. வேள்வியை எதிர்ப்பவர்கள், அந்தணாளர்க்கு அடிமையாகாதவர்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுக்களையே சமண பெளத்தர் போல் சாட்டிப் பாடியுள்ளார். எனவே ஞான சம்பந்தான் குறிக்கோள் வேத வேள்வியைப் பரப்புவதேயன்றி சைவ சமயத்தைப் பரப்புவதல்ல என்பது தெளிவு. இவ்வுண்மையை சமயக் கண் கொண்டு பாராது வரலாற்றுக் கண் கொண்டு ஆராயும் அறிஞர்களும், நேர்மையுள்ளம் படைத்தப் புலவர்களும் ஒருமுகமாக ஒப்புக்கொள்வார்கள் என்பது திண்ணம், மேலும் சைவ சமயம் வேத வேள்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தொயவில்லை. ஞான சம்பந்தர் பொருள் திரட்டிப் பசுக்களை கொன்று ஆங்காங்கு வேள்விபுரிவதையும் இக்கொலை வேள்வியைத் தில்லைவாழ் சிவபெருமானும், அடியார்களும் ஆதாப்பதாகவும்

"பறப்பை படுத் தெங்கும் பசுவேட் டொயோம்பும்
சிறப்பர் வாழ் தில்லை"

எனப் பாடியுள்ளார். இப் பாதாபச் செயலைக் கண்டு தில்லை திருவாய்மொழி பாடிய புலவர்.

"பொதாய முத்தியை பல்லோர்க் கருளும் நற்பிள்ளை பெற்றும்
அரிதாப பொன்கொண்டு சீர்காழி அந்தணனாம் கிழவன்
பாதாபமின்றி பசுவதைத்தான் என்ன பாவம் அந்தோ எரிதாங்கி நின்ற என் அப்பனே.... ... ..."

என வருந்திப் பாடிக் கண்டித்துள்ளார். இப் பாடலில் உள்ளக் கருத்தை ஆராயின் ஞானசம்பந்தர் சிவபெருமான் போல் பழிபோட்டும், பக்தி மார்க்கப் பிரசாரம் எனக் காட்டிக்கொண்டும் சைவ சமயத் தமிழர்களின் ஆதரவோடு வேத வேள்வியை பரப்பிவரும் மறைமுகமான சதியே என்பதை களங்கரை விளக்கம் போல் காட்டுகிறது. அது மட்டுமல்ல. இந்த வேதவிள்விக் கண்டனப் பாவிலே இழையோடிச் செல்லும் ஒரு அரிய வரலாறும் அடங்கியுளளது. பழம்பெரும் பகையை உள்ளத்தேகொண்டும்,வேத வேள்வியை வெற்றிகரமாக தமிழ் நாட்டில் புரிந்து வரும் பக்திமார்க்கப் போர்வையில் சைவ சமயத் தமிழர்களைக் தவறானபாதையில் திருப்பி ஜைன சமயத்தலைவர்களை எதிர்த்து போராடத்தூண்டி விட்டுள்ளார் ஞானசம்பந்தர் என்பதையும் அறிகின்றோம்.

இங்கே ஒரு கேள்வி பிறக்கலாம். ஞானசம்பந்தர் பக்தி மார்க்கக் கொள்கையை மேற்கொண்டதற்குக் காரணம் யாது என்பதே அக்கேள்வி. தமிழக மக்கள் வாழ்க்கை நிலையை முன்னரே விளக்கியுள்ளேன். இங்குள்ள மக்களின் பலர் அறநெறி பூண்டவர்களாய் விளங்கினர். சிலர் தாங்கள் வழிபடும் தெய்வங்களை தங்கள் தங்கள் பண்பாட்டிற்கேற்ப அத் தெய்வங்களுக்கு உயிர்ப்பலியும், கள்ளும் படைத்து வழிபட்டு வந்தனர். இதனாற்றான் கபாலிகமும், காளாமுகமும் வந்து கலந்தன.

இவைகளே பக்தி மார்க்கமாகப் பாணமித்தன. இக்கொள்கைகள் வேத வேள்விக் கொள்கையோடு பொதும் ஒத்திருந்தன இப் பக்தி மார்க்கக் கொள்கையைக் கூட்டணியாகக் கொண்டு ஞான சம்பந்தர் வேத வேள்விப் பகைவர்களாகிய அறநெறியாளர்களை அழிக்க வழிவகைத் தேடிக்கொண்டார் என்பதை எவராலும் மறுக்கவியலாது.

நாம் மேலே கண்ட சமயப் போரின் கோரச் சம்பவங்களைப்பற்றி ஜைன அறவோர்கள் ஒரு குறிப்பும் எழுதி வைக்கவில்லை. வேலதவேள்வியின் ஆதரவாளர்கள் இழைத்த பயங்கர மான படுநாசங்களை எழுதி வைக்க எண்ணியிருந்தால். அச் சான்றோர்கள், துயரக் காவியம், படுகொலைப் புராணம், தீமையின் திருவிளையாடல் போன்ற தலைப்புகளில் பல்வேறு நூல்களை எழுதி வைத்திருப்பாளர்கள். அத்தகு அறிவாற்றல் படைத்தவர்கள் ஜைன மேதைகள் என்பதை உலகறியும். குறிப்பாகத் தமிழகம் நன்கு அறியும். அவ்வாறு விளைந்த அக்கொடிய சம்பவங்களை உலகத்தார் முன்வைத்துப் பழிக்கவில்லை ஏன்? ஜைன சமயச் சான்றோர்கள் அற மாண்புடை யோரல்லவா? மக்கள் வாழ்க்கைப் பண்பை வளர்க்கும் இலக்கியங்களைப் படைக்கும் அத்தூயோர்கள் பிறரால் விளைவிக்கப்பட்ட தீய செயல்களை வெளியிட்டுப் பகையுணர்ச்சியை வளர்ப்பார்களா? பழிப்பிலா அருங்கலன்களைப் படைக்கும் அச்சான்றோர்கள் அற்றமறைக்கும் பண்பினை மேற்கொண்டனர்.

"கறுத்துஇன்னா செய்தவக்கண்ணும் மறுத்த இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்"

என்னும் திருக்குறள் திருமொழி வழி நின்று பிறருடைய உள்ளத்திற்கும் ஊறு நேராவண்ணம் தாங்கள் அடைந்த இன்னல்களை இன்னலென்று எண்ணாது இன்பம் எனக் கொண்டனர். ஜைன அறவோர்கள் தன்னலமற்றத் தியாகிகள். ஆகையால் வேதவேள்வி புரிவோரின் தவறான பாதையில் சென்று அஹிம்சையின் பெருமையை யோராது பக்திமார்க்கத்தார் புரிந்த படுநாசச் செயலைப் பார் அறியாவண்ணம் பாவுடன் மறைத்துவிட்டனர். உலக வரலாற்றின் இது போன்ற சமயப் போர்களும் அரசியல் போர்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக யூதர்கள் இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்து சித்ரவதைச் செய்தனர். இக் கொடுஞ் செயலைக் கிருஸ்த்துவர்கள் இயேசுநாதர் வரலாற்றில் எழுதியும் படம் வாயிலாகக் காட்டியும் யூதர்களைக் பழித்தும் வருகிறார்கள். ஆனால் யூதர்கள் தங்கள் நாட்டு வரலாற்றில் இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்து கொன் றோம் என எழுதிவைத்தில்லை.

இரண்டாம் உலகப் போரில் அமொக்கர் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி என்ற பகுதிகளில் அணுகுண்டுகளை எறிந்து இலட்சக்கணக்கான மக்களைக்கொன்றும் படுங்காயங்களை யுண்டாக்கியும் அப் பகுதிகளைத் தரைமட்டமாக்கியும் அழித்த அடாதச் செயலை ஜப்பானியர் தங்கள் நாட்டு வரலாற்றில் தங்கள் கண்ணீரால் எழுதி நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதே நிகழ்ச்சியை அமொக்கா வரலாற்றில் ஜப்பானியரை வெற்றி கண்டதாக எழுதியிருப்பார்களேயன்றி அணுகுண்டால் அழித்தக் கோரக் காட்சிகளை மறைத்திருப்பார்கள்.

ஜர்மனியில் ஹிட்லரால் யூதர்களுக்கு நேர்ந்த கதியை யூதர்களும், ருஷ்யர்களும் எழுதுக் காட்டுகிறார்கள். ஆனால் ஜர்மனியர் தாங்கள் புரிந்தக் கொடுஞ் செயலை வருணித்து எழுதி வைத்தில்லை நாம் பாரத நாட்டில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் பஞ்சாபில் டயர் என்ற ஆங்கிலேயே ராணுவ அதிகாரி நிபராதிகளான ஆயிரக்கணக்கான சக்தியாக்கிரகிகளைச் சுட்டு வீழ்த்தினான் இக் கொடுஞ் செயலால் விளைந்த கொலைகளை குறித்து நம் பாரதநாட்டுத் தலைவர்கள் பஞ்சாப் படுகொலை என்ற தலைப்பில் பல நூல்களை எழுதி பிரிட்டிஷ் சர்க்காரை கண்டித்துள்னர். ஆனால் பிரிட்டிஷ் அராசாங்கம் டயான் வெறிச்செயலைக் காட்டாது. இந்திய சுதந்திரபோராட்ட சத்தியாக்கிரகிகளை அடக்கிவிட்டோம் என்று பெருமையுடன் எழுதி வைத்துள்ளார்கள்.

இக்கட்டுரையை எழுதிவரும் இந்நாளில் (1978 மே) பாகிஸ்தான் இராணுவ ஆட்சியினர் கிழக்கு பாகிஸ்தானில் புரியும் வெறிச் செயலால் நிரபராதிகாரன மக்கள் இலட்சக் கணக்கில் மாண்டனர். பலர் வீடிழந்தும், குழந்தைகளைப் பறிகொடுத்தும், பெண்கள் கற்பிழந்தும் அகதிகளாக வெளியேற்றியும் அல்லற்படும் அலங்கோலத்தைக் கண்டு உலகமே கண்ணீர் வடிக்கிறது. அதுமட்டுமா? பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், மாணவர் உணவு விடுதிகள் மண்மேடாகின. இப்படுநாசப் போரால் அவதிப்படும் கிழக்குப் பாகிஸ்தான் (வங்கதேசம்) மக்கள் தங்கள் நாட்டு வருங்கால வரலாற்றில் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளான் அட்டூழியங்களை எழுதி வெளியிடுவார்கள் என்பது திண்ணம். இவ்வாறெல்லாம் கொடுமை புரிந்த பாகிஸ்தான் ஆட்சியாளர் தாங்கள் புரிந்த கோரச் செயல்களை இருட்டடிப்புச் செய்துவிடுவார்கள்.

இதுவரை உலகெங்கும் நடந்துள்ள போர்ச் செய்திகளையும், போரின்பெயரால் எந்த அளவுக்கு மக்களைக் கொன்று குவித்தனர் என்பதையும் இப்பயங்கரமான படுபாதகச் செயல்களால் நசுக்குண்டு பல்வேறு கொடுமைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகி அவதிப்பட்டடோர் தங்கள் துன்பச் சுழலை நூல்கள் வாயிலாக வெளியிட்டுப் போர் வெறியர்களின் அடாத செயல்களை உலகறியச் செய்துள்ள நிலைமையைக் கண்டும் கேட்டும் வந்துள்ளோம். அதே சமயத்தில் எவ்வாறாயினும் வெற்றிகாண வேண்டும் என்ற வெறியால் போர் நெறிக்கு மாறாகப் படுநாசம் புரிந்த போர்க் குற்றவாளிகள் தங்கள் வெற்றிச் செய்திகளை மட்டும் வெளியிட்டும் போர்க்களத்தில்கையாண்ட வன்முறைகளை மறைத்து கொண்ட வற்றையுமறிந்தோம்.

இவைகள் இரண்டும் இயற்கையே. குற்றவாளிகள் எக்காரணத்தைக் கொண்டும் 'குற்றம் புரிந்தோம்' எனக்கூறமாட்டார்கள். ராணுவ கோர்ட்டுகளிலும் சா, நாட்டில் நிலவும் சிவில், கிரிமினல் கோர்ட்டுகளிலும் சா குற்றமற்றவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு குற்றங்களை மறைப்பது தண்டனைக்காளாவோம் என்பதுமட்டுமல்ல! மனசாட்சிக்கும், மனிதாபிமானத்திற்கும், நாகாகத்திற்கும், புறம்பான செயல் என்பதோடு, வருங்கால வரலாற்றில் தாங்கள் புரிந்த கொடுமைகள் நிரந்தரமாக இடம் பெற்று எக்காலத்தும் மனித குலத்தார் நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாவோம் என்ற அச்சமும், நாணமும் குடிகொண்டுள்ள தாலேயே குற்றங்களை ஒப்புக்கொள்வதில்லை. இவைகள் யாவும் அரசியல் சம்பந்தப்பட்ட போரெனினும், குற்றங்களை மறைப்பது இராச தந்திரிகள் கடைப்பிடிக்கும் முறையேயாகும்.

அரசியல் வாதிகளே இவ்வாறாயின் சமயவாதிகள் தங்கள் சமயக் கொள்கைகளை நிலைநாட்ட மாற்றுக் கொள்கையாரை அழிக்கக் கையாண்ட படுபாதகக் கொடுமைகளைத் தாங்களே ஒப்புக்கொண்டு புராணங்கள் இயற்றிக் களிப்போரை உலக வரலாற்றில் காண்டற்காதாகிய விந்தையைச் தமிழக நூல்களிலே காண்கிறோம். அந்தோ! எண்ணாயிரம் கோயில்களைக் கைப்பற்றினோம்! பள்ளிகளை இடித்துத் தரைமட்டமாக்கினோம், வீடுகளைத் தகர்த்தோம், நிலங்களை பறித்தோம், ஓட ஓட விரட்டியடித்தும் கொண்றோம்! எனப் பெருமையுடன் கூறும் புராணங்களை அன்றுமுதல் இன்று வரை ஆங்காங்கு படித்தும், பறை சாற்றியும் வரும் காட்சியை எந்நிலையில் வைத்து எண்ணுவது? சேக்கிழார் தம்மவர் புரிந்த கொடுமைகளை பாடிவைத்தார். திருஞானசம்பந்தர் தாமே செய்ய விரும்பும் பாடலைக் கேளுங்கள்.

"மண்ணகத்திலும் ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ...
பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே"

வேத வேள்வி வெறி சமண பெளத்தப் பெண்களை கற்பழிக்க வேண்டுமெனத் துணிகின்றது. உலகத்திலுள்ள மனிதகுலம் அனைத்தும் பழிக்கும் அநாகாக விலங்குச் செயலை ஒழுக்கக்கோட்டை. சமூக விரோதக் கொடுமையைப் புரிய இறைவனை வேண்டுகிறார் ஞானசம்பந்தர். எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் எந்தக்கவிஞரும் இத்தகைய இழிச்செயலை பாடி நூல்கள் எழுதவில்லை அய்யகோ! தமிழ் நூலிலே காணும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. இங்கே ஒரு செய்தியையும் எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீர்காழியில் ஆண்டு தோறும் ஏப்ரல் திங்களில் ஞான சம்பந்தான் திருமுலைப்பால் விழா நடைபெறுவதுண்டு. இவ்விழாவிற்கு முந்நாள் அவ்வூர் பிடாரி அம்மனுக்குப் பூஜை செய்து ஒரு எருமைக்கடாவும், சில ஆடுகளும் பலியிட்டு வழிபடுவார்கள். இவ் உயிர்ப் பலியை நிறுத்த வேண்டி பிரசாரம் செய்ய அவ்வூர் S.P.C.A. சங்கக் காரியதாசிகளான உயர் திருவாளர்கள் முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்கள் கந்தசாமி பிள்ளை அவர்கள் அகிய இருவரும் சென்னை ஜீவரக்ஷகப் பிரசார சபைக்குக்கடிதம் எழுதினார்கள். உடனே யானும் பஜனை கோஷ்டியினரும் சீர்காழி சென்றோம். மூன்று நாட்கள் பொதுக்கூட்டம் நடத்தி உயிர்ப் பலியின் அநாகாகச் செயலை விளக்கப்பேசினேன். தெய்வ சம்பந்தமும் மத சம்பந்தமும் அற்ற இக்கோர மூட நம்பிக்கையைக் கைவிடுமாறு பொது மக்களையும், தர்ம கர்த்தாக்களையும் கேட்டுக் கொண்டேன். தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட விழாவாகையால் உயிர் பலியை நிறுத்தி பூசனிக்காயை உடைத்து விழாவைச் சிறப்பித்தார்கள். விழா 5-4-1942ல் தேதி முடிந்தது. மறுநாள் யான் சென்னைக்கு புறப்பட ஆயத்தமானேன் அதுசமயம் நாம் மேலே கூறிய முத்துக் குமாரசாமி பிள்ளை அவர்கள் தாங்கள் என் வீட்டில் இரண்டு நாட்கள் விருந்தினராக வந்திருந்து திருமுலைப்பால் விழாவையும் பார்த்துவிடடு பின்னர் செல்லுங்கள் உங்கள் சகாக்களை அனுப்பிவிடுங்கள் என கேட்டுக்கொண்டார். அவர் அன்பின் வேண்டுகோளை ஏற்று யான் மட்டும் சீர்காழியில் தங்கியிருந்தேன்.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com