முகப்பு வாயில்

 


திருமுலைப்பால் விழா ஆரம்பமாயிற்று அன்று இரவு ஆயிரக்கணக்கான மக்கள் விழாவைக்கான கூடியிருந்தனர். யானும், திரு கந்தசாமி பிள்ளை அவர்களும், திரு முத்துகுமாரசாமி பிள்ளை அவர்களும் விழாவினைக் காணச் சென்றோம்.

அவ்விழாவில் ஆறு பேர் மொட்டைத் தலையுடனும் அறையில் காவி வேட்டியுடனும் கைகளில் மயில் இறகுகளையும் பிடித்துக்கொண்டு ஞானசம்பந்தர் உத்சவ சிலைமுன் வந்து நின்றார்கள். அவர்கள் எதிரே சைவ சமய பக்தர்கள் இருபது பேர் இரண்டு பேர் இரண்டு வாசைகளாக நின்றார்கள். உடனே திரு முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்கள் ஐயா இவர்கள் பாடும் பாட்டுகளைச் செவிமடுத்துக் கேளுங்கள் என்றார். சிவ பக்தர்களில் பத்துபேர். ஞானசம்பந்தர் என்ன சொன்னார் என்று இசையோடு கேட்கிறார்கள். பின் வாசையில் உள்ள சிவபக்தர்கள் "சமணப் பெண்களை ... .. .. .. ... ... ..." என இசையோடு கூவுகிறார்கள். மேலே புள்ளி வைத்துள்ள வாசகங்கள் சொல்லொணா வார்த்தைகள். இவ்வாறே பெண்களின் தலை முதல் ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டு பாடினார்கள்.

இச் சமயத்தில் பிள்ளைமார் இருவரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். என் முகம் மலர்ச்சிகுன்றி கண்களில் கண்ணீர் கலங்குவதையும் கண்டு அவர்கள் இருவரும் என் கையைப் பற்றிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு அழைத்து கொண்டு சென்றார்கள் ஐயா! உங்கள் உணர்ச்சியையும், முகவாட்டத்தையும் கண்டுதான் வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்துவிட்டோம். இக்கோர அநாகாகச் சம்பவத்தை காட்டவே தங்களை இரண்டு நாட்கள் தங்குமாறு செய்தோம். இந்த ஆபாசப்பாடல்களுக்கு மூலம் பாருங்கள் என்ற சம்பந்தர் தேவாரத்தை எடுத்து 'மண்ணகத்திலும்' என்ற பாடலை படிக்கச் சொன்னார். அன்றுதான் அப்பாடலை யான் பார்த்தேன். இப்படியும் ஒரு பாட்டும், இதனைக் விளக்கும் ஒரு விழாவும் வெளிப்படையாக நடத்துகிறார்கள் எனில் இதைவிட அநாகாகம் வேறெங்கே காண முடியும்.

உலகோர் பழிக்கும் இக்கூடா ஒழுக்கத்தை திருநாவுக்கரசர் தம்தேவாரத்தில் பாடியுள்ளாரா? சுந்தரர் பாடல்களில் இடம் பெற்றுள்ளதா? இல்லை! இல்லை! திருஞானசம்பந்தரன்றே கூசாமல். குலுங்காமல் பச்சைத் தமிழில் பாடிவைத்துள்ளார். வேதவேள்வியில் ஞானசம்பந்தருக்குள்ள வேட்கையும் பற்றுமே இது பழி, இது பாவம் என்பவற்றை அறிய வொட்டாமல், அவர் அறிவைப் பகைமை இருள் சூழ்ந்து கொண்டது! ஞானசம்பந்தான் செயல்களையும், கூற்றுகளையும் ஆழ்ந்தறிந்த சுந்தரர் அவைகள் குற்றங்க ளென்றே பாடியுள்ளார்.

"நற்றமிழ் வல்லன் ஞான சம்பந்தர்
... ... ... ... ... ...
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டீர்"
என்ற சந்தரர் தேவரத்தால் அறியலாம்.

இவ்வாறெல்லாம் அவர்கள் புரிந்துள்ள கொடுமைகளைப் புராணம் வாயிலாகப் பாடியவர் சேக்கிழார் என்பதை மேலே கண்டோம்.

இவ்வாறு புராணம் பாடியவர் சேக்கிழார் இவரை அநபாய சோழ மன்னான் அமைச்சர் என்று கூறுகிறார்கள் உண்மையில் அவர் அமைச்சாராயிருப்பின் தம்மவர் புரிந்த கொடுமைகளை மறைக்கும் இராச தந்திரத்தைக் கடைப்பிடித்திருப்பார். அதற்கு மாறாகச் சமணர்களை எவ்வாறெல்லாம் துன்புறுத்திக் கொடுமை புரிந்தோம் எனப் படம்பிடித்தாற் போன்று விளக்கிப் புராணம் பாடியுள்ளார். இதொன்றே சேக்கிழார் அமைச்சர் பதிவியிலிருந்திருக்கமாட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது. சேக்கிழார் தம் இயற்றிய தொண்டர் புராணத்திலும் தாம் அமைச்சர் எனக்குறிப்பிட வில்லை. இவரை அநபாயச் சோழ மன்னான் அமைச்சரென கதை கட்டியவர் உமாபதி சிவாச்சாரியார் இவர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர். சேக்கிழார் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் எனக் கருதுகிறார்கள். இவருக்கு இருநூறு ஆண்டுகட்குப் பிற்பட்ட உமாபதி சிவாச்சாரியார். சேக்கிழார் வாழ்க்கை எனக் கற்பனை செய்து ஒருபுராணம் பாடினார் இக் கதைக்கு அகச்சான்றோ புற சான்றோ கிடையா. இவ்வாறு சேக்கிழார் புராணம் என எழுதியதற்குக் காரணத்தை அறிந்தால் வாசகர்கள் வியப்புறுவார்கள். வியப்பு மட்டுமல்ல, திடுக்கிடுவார்கள்.


சீவக சிந்தாமணி

தமிழ் மொழியில் சீவகசிந்தாமணி காவியம் தோன்றிய கி.பி.5-ஆம் நூற்றாண்டிலிருந்து அது தமிழக மன்னர்களாலும், புலவர்களாலும், கற்றிந்தோராலும், பொதுமக்களாலும் தமிழகமெங்கும் போற்றப்பெற்று வந்தது. தலைச்சிறந்த தமிழ்க் காவியம் எனப் பலரும் படித்தும் கேட்டும் இன்புற்று வந்தனர். அக்கால மன்னர்களின் அரண்மனைகள் கோயில்கள், கல்விக் கூடங்கள், பொதுச் சபைகள் ஆகிய பலவிடங்களிலும் சீவகசிந்தாமணிச் சொற்பொழிவுகளே ஒலித்துக் கொண்டிருந்தன.

பிற்காலத்தில் அதாவது கி.பி. பன்னிரண்டாம. நூற்றாண்டின் இறுதியில் சேக்கிழார் தொண்டர் புராணம் இயற்றினார். அறுபத்து மூன்று சைவ சமய பக்தர்களைப் பற்றியது அந்நூல், சைவ சமயப் பற்றுடையவர்களே அந்நூலைப் பயின்று வந்தனர். சீவகசிந்தாமணியைப் பல சமயத்தவரும் படித்து வந்ததுபோல தொண்டர் புராணத்தைப்பலரும் படிக்கவில்லை. தமிழக மக்களிற் பலர் அத் தொண்டர்களின் கதைகளின் போக்கில் ஐயமுங்கொண்டனர். 'எங்கும் சிந்தாமணி! சிந்தாமணி!' என்ற குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. இந்நிலை, உமாபதி சிவாச்சாரியார் காலத்திலும் அதாவது பதினான்காம் நூற்றாண்டிலும் நிலவியிருந்தது. பல்வேறு சமயப் புலவர்களின் கரங்களிலும் சீவகசிந்தாமணி காவியத்தின் ஏட்டுப் பிரதிகளே காட்சியளித்தன. புலவர் பெருமக்களையும் கலைஞர்களையும், அறிஞர்களையும், மன்னர்களையும் கவர்ந்திருக்கும் காவியக் கருவூலமாய் விளங்கும் சீவகசிந்தாமணியை இயற்றி அருளியவர் தெய்வீகம் பொருந்தியக் கவிச்சக்கரவர்த்தி திருத்தக்கதேவர் ஆவார்.


தேவர் அமைத்த காவியக் கோயில்

தமிழ் மொழியில் சிலப்பதிக்காரக் காவியம் தோன்றிய பின்னர் சுமார் * நூறு ஆண்டுகளுக்குள்ளாகக் கவிச்சக்கர

* Beginning of South Indian History என்ற ஓர் அரிய ஆங்கில அராய்ச்சி நூலை எழுதிய டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் சீவகசிந்தாமணியின் காலத்தை குறிப்பிடுகையில் "The interval between the composition of Silappadikaram and Chintamani was only about 60 or 70 years" என எழுதியுள்ளார்.
வர்த்தி திருத்தக்கதேவர் புதிய அமைப்பில் சீவக சிந்தாமணி என்னும் காப்பியக் கோயிலை கட்டி அருளினார். விருத்தப் பாக்களால் தொடர் நிலைச் செய்யுளாக நூல் இயற்றினமையின் சொற்களையும், சொற்றொடர்களையும், பொதும் ஆய்ந்து புதிய பல சொற்களையும் படைத்தருளினார். அதுமட்டுமல்ல நாட்டுவளம், நகர்வளம் போன்ற புதிய தோற்றத்துடன் எல்லாவருணனைகளும் அமையப் பாடித்தந்தார். பிறகாலத்தில் பல காப்பியங்களியற்றிய புலவர்கள் பலர்க்கும் இன்ன இன்னவற்றை இன்ன இன்னவாறு வருணித்துப் பாடுகவென வழிகோலி அரும் பெரும் காவியத்தை இயற்றித் தந்தமையால் திருத்தக்கதேவரைத் காவிய வழிகாட்டியெனப் புலவர் பெருமக்கள் பலரும் போற்றிப் புகழ்ந்தனர். இப் பெருங்காவியம் இதற்கு முன்னுள்ள நூல்களின் விளைவாய் பின்வந்த காவியங்களின் கருவாய் அமைந்த காவியமாகையால் அக்காலம் முதல் இதனைப் பாராட்டதாக உரையாசிரியர்களும் இல்லை; நூலாசிரியர்களும் இல்லை.

"சிந்தாமணியைத் தென்கடல் மாநிலம்
வந்தாதாப்ப வண்பெரு வஞ்சிப்
பொய்யாமொழி புகழ்மையறு காட்சித்
திருத்தகு முனிவன்"

எனும் உரை சிறப்புப் பாயிரத்தாலும் தேவர் பெருமை புலனாகும்.

கம்பர் போற்றும் காவியக் கடல்:

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாம் இயற்றிய இராமாயணத்தை அரங்கேற்றுகையில் 'அள்ளி மீதுலகை வீசும்'(விபீடணன் 133) என்னும் பாடலிலுள்ள வெள்ளி வெண்கடலின் பகுதியைக் கேட்ட புலவரொருவர், 'இது சிந்தாமணிப் பிரயோகமாக இருக்கிறது' என்று சொல்லியபோது, கம்பர், 'சிந்தாமணிக் கடலிலிருந்து ஒரகப்பை முகந்து கொண்டேன்' என்று விடை பகிர்ந்தார் என்று பழைய பிரதிகளில் காணப்படும் குறிப்புக்களால் தொய வருகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற் பொருளைந் தொவித்தலின், இந்நூல் முடி பொருட் டொடர்நிலை என்று அடியார்க்கு நல்லார் குறித்திருக்கின்றார். (சிலப்2-3-11) பிரயோக விவேக நூலுடையார் வடமொழியிற் பிறந்தவண்ணமே சொற்களைத் தாம் தற்சமமாகக் கூறுவதற்குச் சிந்தாமணியை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றனர். (பிர.சூ. 20, 37 உரைப்பார்க்க) இவற்றாற் கம்பர் முதலியவர்களுக்கு இக்காவியத்தின் பாலுள்ள மதிப்பு நன்கு வெளியாகின்றது என மகாமகோபாத்தியாய வே. சுவாமிநாத அய்யர் அவர்கள் பதிப்பித்துள்ள சீவகசிந்தாமணியின் முகவுரையில் விளக்கிக் காட்டியுள்ளார்..

வடமொழி தென்மொழிகளுக்கு வழிகாட்டும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட சீவக சிந்தாமணி பெருங்காவியக் கலைக்களஞ்சியத்தை அது தோன்றிய காலம் முதல் தொண்டர் புராணம் தோன்றிய பின்னர் வாழ்ந்த புலவர் பெருமக்களும் உமாபதி சிவாச்சாரியார் காலத்திலும் பின்னரும் வாழ்ந்த புலவர் பெருமக்கள் பலரும் சீவகசிந்தாமணியை இதயங்கனிந்து ஏற்றும், புகழ்ந்தும் பாடியுள்ள இனிய பாக்களில் சிலவற்றைப் படித்து இன்புறுவோம்.

நூல்கள்:

"சீவகன் மஞ்சாயைத் தாழ்ந்துரைப்பச் சீறினனே
தூவாய்க் குணமாலை சோமேசா - ஆவகையே
தன்னை புணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர்
இந்நீரராகுதிரென்று" - (சோமேசர் முதுமொழி வெண்பா)

" சச்சந்தனை யழித்துக் கொண்டான் தனியமைச்சன்
வைச்ச வரசை வடமலையே-நிச்சம்
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையால்
வேறாகு மாந்தர் பலர்"

"தோழமை கொண்ட சுதஞ்சணனாற் சீவகனும்
வாழுமுயிர் பெற்றான் வடமலையே-தாழா
துடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு -வடமலை வெண்பா

"சுரமஞ்சா விடுத்த சுண்ணம் பழித்த
அருமந்த சீவகனும்" -வருணகுலாதித்தனுலாமடல்

"சீவகனுக் கன்றொரு பெண்சிங்கமொரு கன்றீனும்
பாவனைபோல யெழுதிப் பக்கதில் ஓவியமாக்
காரனை யொன்றெழுதிக் காட்ட வாக்கன்றுதுள்ளிப்
போராடிப் பாய்ந்த கதை பொய்யலவே"
- கூளப்ப நாய்கன்விறலி விடுதூது

"பாராளும் சீவகர்கோன் பல்வதேயத் தனுகச்
சீரால் விருந்தமைத்த சேவகனும்" - சிவந்தெழுந்த பல்லவராயனுலா.

"சீவகன் றந்தை முயற்சியை நீத்த செயலினன்றோ
பூவலயத்தைப் விரப்பது விண்டனன் பொற்கொடியே
தேவன் மயில் வெற்பிற்றம்வீடுகாக்குத் திறமிலரூர்
காவல ரென்பதெனன் றோதனல்ல கருத்தல்லவே"
-மயூரக்கிரிகோலை

இது பாங்கி பிரிவுடம் படுத்தல்.
சீவகசிந்தாமணிப் பெயரை சிலேடை வகையில் அமைத்துப் பாராட்டியுள்ள நூல்கள்.

"மந்தாகினியாணி வேணுப்பிரான் வெங்கை மன்னவாநீ
கொந்தார் குழன்மணி மேகலை நூலுட்டிங் கொள்வதெங்ஙன்
சிந்தாமணி யுந்திருக் கேவையு மெழுதிக் கொளினு
நந்தா வுரையை யெழுத லெவ்வாறு நவின்றருவே"
-வெங்கைக் கோவை

"வந்தென்றுஞ் சிந்தாமணி யென்றிருந்தவுனைச்
சிந்தென்று சொல்லிய நாச் சிந்துமே"
-தமிழ்விடு தூது

"சிந்தாமணி யாஞ்சிலப்பதிகாரம் படைத்தான்
கந்தா மணிமேகலைப் புனைந்தான் -தந்தா
வளையாபதி தருவான் வாசவனுக்கீந்தான்
திளையாத குண்லகேசிக்கும்-வளையாழி"
-திருத்தணிகை உலா

நச்சினார்கினியரை யன்றி அடியிற் குறிப்பிட்ட உரையாசிரியர்கள் சீவக சிந்தாமணியை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

1   2   3   4   5   6   7  8  9  10  11  12  13  14  15  16  17  18


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com